"#பேய்அரசாண்டால்பிணம்தின்னும்சாத்திரங்கள்’’
கெடுப்பா ரிலானுங் கெடும்'- என்கிற குறள்மொழி உண்டு. இன்றைய ஸ்டாலின் அரசு போகும் போக்கு அப்படித்தால் இருக்கிறது.
13 நாட்களாக வெயில் மழையில் சாதாரண கூலி உயர்வுகூட கேட்கவில்லை இருக்கிற கூலியை பறிக்காதே என்று போராடிய தூய்மை பணியாளர்களை நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி அப்புறப்படுத்தி கைது செய்துள்ளது சென்னை காவல்துறை.
தாக்குதலை படமெடுத்த பெண் வழக்கறிஞர் நிலவுமொழி அவருடன் வந்த இன்னொரு வழக்கறிஞர் தாக்கப்பட்டுள்ளார். கை எலும்பு முறிந்துள்ள நிலையில் அலைகழிக்கப்படுவதும், கைது செய்து அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் தலையிட்டு விடுவிக்க வேண்டிய சூழலும் உள்ளது.
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பார்கள் அதுபோல் கூலித்தொழிலாளர் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடும் நேரத்தில் காவல்துறை அவர்களிடம் அராஜகமாக நடக்கும்போது முதல்வர், துணைமுதல்வர் கூலி திரைப்படத்தை ரசித்து பார்த்து அதை புகைப்படமும் எடுத்து போடுவதும், ரிவ்யூ போடுவதும் வெந்தப்புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் அல்லவா? கூலித்திரைப்படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்கி வீணடித்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கூலி பிரச்சனைக்காக போராடும் தூய்மை பணியாளர்களுக்காக 30 நிமிடம் ஒதுக்க மனமில்லையா?
போராட்ட குழுவினருடன் துறைக்கு சம்பந்தமே இல்லாத ஆணவ அமைச்சர் சேகர்பாபு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
துறை அமைச்சர் நேரு எங்கே போனார், முதல்வர்தான் வர முடியவில்லை, சென்னையில் இருக்கும் துணை முதல்வருக்குக்கூட சந்திக்க மனமில்லையா?
போராடும் மக்களுக்கு துணை நின்றவர்களையும் தாக்கி கைது செய்தது ஏன், வழக்கறிஞர்களை ஏன் கைது செய்துள்ளீர்கள் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு கலைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஆக்டிங் சி.எம் ஸ்டாலின் எடுத்த தவறான நடவடிக்கையால் போலீஸ் வழக்கறிஞர் மோதல் நடந்தது. தற்போது பெண் வழக்கறிஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதும், அதில் நிலவுமொழி கை முறிந்துள்ளது என்று சொல்லியும் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பாததும், வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு போராட்டம் மீண்டும் எழுந்ததற்கு முதல்வர் கையிலிருக்கும் சென்னை காவல்துறை தானே காரணம்.
2 மண்டலங்களில் போராட்டம் நடத்திய மக்களைக்கூட கையாள தெரியாத வெற்று விளம்பர அரசாகத்தான் இந்த அரசு உள்ளது. இன்று இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் பெரும் பிரச்சினை ஆகி உள்ளது. இதற்கு இவர்களின் ஆணவமே காரணம். திமுகவின் தலைவர்கள் அனைவரிடம் இந்த ஆணவம் உள்ளது. இதற்கு விடை 2026-ல் கிடைக்கும்.
No comments:
Post a Comment