#ஸ்டாலினா? #ஆக்ஸ்போர்டுபல்கலைக்கழகமா?
கடந்த இரண்டு நாட்களாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நண்பர்களிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். என்னயா ஸ்டாலினை அங்கே பேச அழைத்து இருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிடம் கேட்டுவிட்டுத் தான் என் நண்பர்கள் பிறகு எனக்குப் பதில் சொன்னார்கள். அப்படி ஒன்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக ஸ்டாலின் அவர்களை அழைக்கவில்லை.
இந்த பல்கலைக்கழக வளாகத்தில் சின்ன சின்னக் கருத்தரங்கங்கள் நடத்துவதற்கான ஹால்கள் கிடைக்கும். அதை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இவர்கள் எங்கு வேண்டுமானாலும் எதை வைத்து வேண்டுமானாலும் பேசலாம். அப்படி நடத்தும் போது பல்கலைக்கழக துணைவேந்தர்களோ பேராசிரியர்களோ சிறப்பு அழைப்பாளராகக் கருதப்பட்டு அழைக்கப்படுவார்கள் அப்படி அழைக்கப்பட்டு இந்ந விழாவிற்குஅவர்கள் வருகிறார்களா என்பதும் தெரியவில்லை.
மற்றபடி அதிகாரப்பூர்வமான அழைப்பு ஏதும் பல்கலைக்கழகம் சார்பில் இல்லை!இவர்களாக இட்டுக் கட்டி கூறுகிறார்கள். ஆஸ்திரியாவில் கலைஞருக்கு சிறிய ஸ்டாம்ப் ஒன்று வெளியிட்டார்களே அதுபோன்ற கதை தான் இதுவும். இதெல்லாம் ஸ்டாலினுக்கு எங்கே தெரியப்போகிறது. அயலகம் உள்ளகம் என்று சொல்லிக்கொண்டு தன்னைச் சுற்றி உள்ள நியமன ஐ டி இளைஞர்களின் மூலம் கையில் உள்ள பண பலத்தால் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வேறொன்றுமில்லை. இதெல்லாம் வெறும் பிரமோஷன் தான்.
நான் பிரிட்டன் சென்றால் ஆக்ஸ்போர்ட் , கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்குப் போகாமல் வரமாட்டேன். எனக்கு அங்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இடையில் ஒருமுறை ஸ்டாலினை லண்டனுக்கு அழைத்துச் சென்ற போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றுதான் வந்தேன். மற்றொரு முறை நான் ஈழத்தமிழர் பிரச்சினைக்ககாக இதே ஆக்ஸ்போர்ட் வளாகத்தில் வாடகைக்கு ஹால் எடுத்து கூட்டத்தைக் கூட்டி பேசி இருக்கிறேன். அது ஒரு பக்கம் இருக்க. இந்த விழா குறித்து விசாரித்ததில் இவர்களே அரங்கத்தை வாடகைக்கு எடுத்து இவர்களே நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இவர்களே செலவழித்துக்கொண்டும் திரும்புவார்கள். இதற்கும் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகிறது என்றால் அவர்கள் அதை அதிகாரப்பூர்வமாக பத்திரிகைகளில் தெரிவிப்பார்கள். அப்படி ஒன்றும் ஸ்டாலின் விழாவில் இல்லை. அந்த வகையில் மேற்கண்ட நிகழ்ச்சி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சின்ன அரங்கில் நடக்கிறது என்று வேண்டுமானால் இவர்கள்போட்டுக் கொள்ளலாம்.
இது மாதிரி மக்கள் மத்தியில் வேடிக்கைகளைச் செய்வதுதான் திராவிட மாடல். ஒரு பக்கம் திருப்புவனத்தில் கொடுத்த பெட்டிஷன்களை எல்லாம் வைகை ஆற்றில் போட்டு விட்டார்கள். எல்லாம் பம்மாத்து வேலை தான்.எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா எங்களைக் கைது செய்துவிட்டார்.
கே எஸ் ஆர் !கே எஸ் ஆர் !! என்று கூவுவார்கள். கொஞ்சம் மனித உரிமை ஆணையத்திற்கு போங்கள் என்று கெஞ்சுவார்கள். ஆளுங்கட்சியாக வந்து விட்டால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இப்படிப் படம் காட்டுவார்கள். ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஏற்பாட்டில் தான் இந்த ப்ரோமோஷன் எல்லாம் நடக்கிறது. இதற்கெல்லாம் கேவலப்பட போகும் நிலை வெகு தூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment