Tuesday, December 2, 2025

6 SEPTEMBER

 #தினமலர் நிறுவனர் திரு #ராமசுப்பையர் அவர்களால் தொடங்கப்பட்ட தினமலர் நாளிதழ் திருவனந்தபுரத்தில் திரு வையாபுரிப் பிள்ளை அவர்களால் தொடங்கப்பட்டு பிறகு திருநெல்வேலி தச்சநல்லூரருக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு இன்று சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் தோறும் அன்றாடம் மக்கள் அதிகாலையில் வாசிக்கும் பத்திரிகையாக முன்னணியில் திகழ்ந்து வருகிறது. இன்றைக்கு அது தனது75 வது ஆண்டினை நிறைவு செய்வது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது . கடந்த 75 ஆண்டுகளாக அது பத்திரிக்கைத் துறையில் செய்த சாதனைகள் மிக அரிதானது.

தமிழர் வாழ்வின் செப்பேடுகள் அகழ்வாராய்ச்சிகள் பழங்கால நாணயங்களின் காலம் அவற்றின் தன்மை போன்றவற்றை மக்களிடம் எளிதாகக் கொண்டு போய்அறியச் செய்தது முக்கியமான பணி. பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரை அறிந்து கொள்ளக் கொடுத்த அறிவுப்பூர்வமான தகவல்கள் போக பலருக்கும் எழுத்துக்கூட்டி வாசிக்கும் பழக்கத்தை தினமலர் பத்திரிகை தான் கொடுத்தது என்றாலும் மிகை இல்லை. அவ்வப்போது புதிய அரசியல் செய்திகள் விமர்சனங்கள் நாட்டு நடப்புகளில் பார்வையாளர்கள் பங்கு அவர்களது கடிதங்கள் உள்ளூர் குறைபாடுகள் மீதான மனுக்கள் என்று தொடர்ந்து இயங்கி தமிழகத்தின் நாடித்துடிப்பாய் தினமலர் விளங்குவதே அதன் நீண்ட கால வரலாற்றுக்குக் காரணம். மேலும் மக்கள் பணியாற்றிச் சிறந்து விளங்கும் வகையில் அதனுடைய 75 ஆவது வருட கொண்டாட்டத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்!.
@dinamalarweb

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்