Tuesday, October 22, 2024

#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே

#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே
———————————————————-
காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter  பதிவு செய்தமைக்கு என்னை நீங்கள் திமுகவில் இடைநீக்கம் செய்தீர்கள்! மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் நெருக்கடிகளில் எவ்வளவு பணிகள,உதவிகளை  திமுக எதிர்கட்சியாக இருந்தபோது நான் செய்து கொடுத்தேன் என்பதை உங்கள் மனம் அறிந்தும்  அதன் நினைவொழிந்து  சர்வ சாதாரணமாக என்னை நீக்கினீர்கள்!



அது யாருக்காக எதற்காக நடந்தது என்று இதுவரைக்கும் தெளிவில்லை! அது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எடுத்த முடிவாகத் தான் இருக்கும்! அதை அறிந்திருந்தும்  அதற்கான ஆதாரங்கள் இருந்தும் நான் மௌனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படி நான் இருந்து கொண்டது உங்களுக்கு வசதியாகிப் போய்விட்டது!







சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் “தேர்தல் நேரத்தில் காங்கிரஸார் தேவையில்லாமல் நம் மீது மிக கனமாகத் தான் ஏறி உட்காருவார்கள்”  என்று அமைச்சர் கண்ணப்பன் பேசியிருக்கிறார்!

நாங்கள் எல்லாம் கட்சியில் கஷ்டப்பட்டு உழைத்தோம். இன்று என்ன நிலை❓ யார் என்றே தெரியாது இருந்த ஒருவர் இப்போது  உங்களது நிர்வாகி ஆக இருக்கிறார். இப்படி கழகத்துக்கு எந்த உழைப்பு, பணிகள் இல்லாமல் ஆளும் கடசியானவுடன் பலர் கலைஞர் அறியவர்கள் இன்று திமுகவில் அமைச்சர்கள், எம்பிக்கள்,எம்எலஏக்கள், நிர்வாகிகள் இருப்பது வேடிக்கைகள⁉️




அவர் “காமராஜர் குடியாத்தம் தொகுதியில் வரலாறு தெரியாமல் பேசினார்”.  

இப்படி உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பலர் காங்கிரசை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும் போது 
அவர்களிடம் விளக்கம் ஏதும் கேட்காமல் அதைப் பற்றியே பேசாமல் மௌனித்துக் கொள்ளும் நீங்கள் என்னை மட்டும் கண்டனம் செய்து நீக்குவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

அப்படியானால் என்னைப் பிடிக்காமல் தான்  நீங்கள்  நீக்கி உள்ளீர்கள்! அப்படிப் பிடிக்காமல் போவதற்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்றும் எனக்கு தெரியவில்லை! நொண்டிக்குதிரைக்குச் சறுக்கியது சாக்கு என்பது போல இருக்கிறது!

கலைஞருக்கு நெருக்கமாக மிக முக்கியமாக அரசியல் விவகாரங்களைக் கலந்தாலோசிப்பதில் அவருக்குப் பிடித்தமானவனாய் இருந்த என்னை எதற்கு நீக்கினீர்கள் என்பதற்கு நீங்கள் பொதுவில் பதில் சொல்லுங்கள்!

இந்த புகைப்படங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. அதில் ஒன்று மட்டும் நீங்கள் முதல்வர் ஆனதற்குப் பிறகு எடுக்கப்பட்டது. இன்னொன்று லண்டன்  பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடந்த உலகத் தமிழர் மாநாடு நடந்த போது தமிழக தலைவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நீங்கள் இறுதி உரை ஆற்றிய போது எடுக்கப்பட்டது. அடுத்த படம் பிரிட்டிஷ் கான்ஸ்லேட் தூதுவரிடம் தலைவர் கலைஞர் பேசிய போது எடுக்கப்பட்ட படம். இன்னொரு படம் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக ஆட்சியில் ஆட்சியில் விவசாயிகளின் தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு மணிமண்டபம் கட்ட திட்ட மிட்ட
 அக் கட்டடத்திற்கான முதல் செங்கலை நீங்கள் எடுத்து  அவரின் பேரனிடம் வழங்கிய துவக்கி வைத்ததற்கான படம்.

இந்தப் பணி எல்லாம் உங்களுக்காக உடனிருந்து நான் செய்தது என்பதற்காக இங்கு பார்வைக்கு வைக்கிறேன். இப்படியான எதிர்கட்சியாக திமுக இருந்த போது….
இப்படி என் பலபணிகள் உண்டு…. கலைஞரின மனசாட்சிக்கு தெரிந்தது தங்களுக்கும், தங்களின் மகனுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கு நான் எளிதாக படலாம். அது காட்சிபிழைகள் மற்றபடி   இதில் நான் புலம்புவதற்கு என்ன இருக்கிறது! இன்னும் பல விடயங்கள் உங்களிடம் கேட்க உள்ளது.

நான் அதிகம்.....
 கோபப்படுவது....
 உண்மை.....

ஆனால்....
 என் ....
கோபத்தில் .....
ஒரு போதும்.....
 துரோகம் இருக்காது.....
எனவே......
கவலையை ......
யார் தந்தால் என்ன... 
புன்னகை ......
நம்மிடம் .....
தானே உள்ளது......

சிரித்துக் கொண்டே .....
துன்பத்தை.....
 துடைத்து ....
தூக்கி எறிவேன்.

#திமுக #DMK

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-10-2024.

Thursday, October 17, 2024

Water Crisis.. நீரின்றி அமையாது உலகு..

Water Crisis Threatening World Food Production – Report

channelstv.com/2024/10/17/wat…
நீரின்றி அமையாது உலகு..  

 எல்லா காலத்துலயுமே தண்ணீர் பஞ்சம் உண்டு.  கிணற்றை தூர்த்து, ஆற்றை திசை திருப்பி, ஏரிகளில் உடைப்பை ஏற்படுத்தி கோட்டைக்குள் புகுந்திருந்து தாக்கும் எதிரியை  அடிபணிய வைக்கும் ராஜ தந்திரங்களில் இதும் ஒன்று. அதன்பின்னர் அந்த ஏரி,ஆறுகளை சீர் செய்யும்வரை பஞ்சம் நாட்டில் தலைவிரித்தாடும். சில சமயம் வானம் பொய்த்தும் பஞ்சம் வரும்.  அந்த பஞ்ச வேளைகளில்கூட நல்ல நீர் கிணறுகள், ஆற்றின் ஊற்றுகளில் தண்ணீர்  வற்றாதிருந்து மக்களை உயிரோடு வாழ உதவி இருக்கு. எனக்கு தெரிஞ்சுகூட ஆறு, இருபதாண்டுகளுக்கு முன்வரை குளம், ஆறு, கிணறுகளில் நீர் வற்றினாலும்கூட ஊற்றில் நீர் சுரந்துக்கொண்டே இருக்கும். கிணற்றில் நீர் சுரந்தால் அதை நடு இரவில்கூட நீர் இறைத்து பயன்படுத்தி இருக்கோம். ஆற்றில் பௌர்ணமி/அமாவாசை அன்னிக்கு   ஊற்று தோன்றுவாங்க. நீர் சுரக்கும். அதை அகலமான கிண்ணத்துல மொண்டு, வடிகட்டி கொண்டு வந்து பயன்படுத்தி இருக்கோம்.  தினசரிக்கு நீர் கிடைச்சுக்கிட்டே இருக்கும்.

ஆனா, இப்படி  கார்ப்பரேஷன் தண்ணீரையும், லாரி தண்ணீரையும் நாட்கணக்கில் சேமிச்சு வச்சதில்லை. இன்றைய தலைமுறைக்கு அறிவியல் சாதனங்கள், பணம், அறிவு, சுதந்திரம்ன்னு நிறைய கொடுத்திருக்கோம். ஆனா கொடுக்க வேண்டிய முக்கியமானதை கொடுக்காம விட்டுட்டோம். நாம கொடுக்க மறந்தது என்னன்னு தெரியுமா?! இயற்கையோடு சேர்ந்து வாழும் வாழ்வினைதான்.   நீச்சல்குளத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை கட்டி குளோரின் மணம் வீசும் நீரில் நீச்சல் பழக சொல்லி தர்றோம். ஆனா, வாய்க்கா, வரப்பு, ஏரி குளத்துல நாம குளிச்சு ஆட்டம்போட்ட மனநிறைவை தருமா?!  சேற்றில் கால் வைக்க அசிங்கப்பட்டு, உழைக்க  வெசனப்பட்டுக்கிட்டு, பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விளைநிலத்தையும்,  வானம் பார்த்த பூமியையும் ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டோம். நெல்லுக்கு இறைத்த நீர் முதற்கொண்டு விழலுக்கு இறைத்த தண்ணீர்லாம் இப்ப விற்பனை பொருளாகிவிட்டது.  தண்ணீர் பாக்கெட், பாட்டில், கேன் என பணம் கொழிக்கும் பொருளாகிட்டுது தண்ணீர். 

தண்ணீரின் அவசியத்தை கொஞ்சம் காலமாய் மக்கள் உணர தொடங்கிவிட்டனர். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வந்தனர். ஆனா,  சட்டம்லாம் போடுவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே செட்டிநாடு பகுதியில் உள்ள காரைக்குடி, கோனாபட்டு, ஆத்தங்குடி, கானாடுகாத்தான, கோட்டையூர், தேவகோட்டை , ராங்கியம், சிறுகூடல்பட்டி, வலையபட்டி, புதுவயல் மற்றும் செட்டிநாட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் வீட்டின் நடுப்பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்து வீடுகளை கட்டினர். எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன்படுத்தப்பட்டது. மாடியின் மேல்தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது, இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை கூடல்வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி) அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும்போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேற்கொண்டு மிஞ்சும் மழைநீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து, வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து, அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறுதுளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டனர் நமது முன்னோர்கள். அதேபோல கழிவுநீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது.  

தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மையை இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மெச்சுகின்றனர். வீடுகளில் கிணறு, தெருவுக்கு ஒரு பொதுக்கிணறு, ஊருக்கு சில நன்னீர் கிணறு, மழைநீர் தெருக்களில்  ஓடையாய் ஓடி, ஆங்காங்கு குட்டையாகி, அங்கிருந்து ஓடி கோவில் குளத்தை நிரப்பி, அங்கிருந்து சிறுகால்வாயாய் மாறி ஏரிக்கு சென்று, ஏரி நிரம்பி கால்வாயாய் மாறி ஆற்றில் கலந்து முடிவில் கடலில் கலந்தது.

ஆற்று நீரை அணைக்கட்டி சேமித்து, கோடைக்காலங்களில் கிளை ஆறுகளின்மூலமாகவும், வாய்க்கால், கால்வாய் மூலமாகவும் ஏரி, குளங்களை சென்றடைய செய்து, மக்களை தண்ணீருக்கு அல்லல்பட வைக்காமல் காப்பாற்றினர்.  உலகமயமாக்கலுக்கு முன்..  அதாவது 1980களுக்கு முன்வரை கூட நம்மில் மழைநீரை சேமிக்கும் பழக்கம் இருந்தது..
🏞🏞

அவை என்னன்னு பார்க்கலாமா?!
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்களைக் கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) – குளம், ஏரி, முள்ளம்களின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்..

(48)முள்ளம் ..
செம்பரம்பாக்கம் ஏரி  மாதிரியான பாசன கால்வாய்களில் மீன் பிடிக்க அமைக்கப்படும் நீர்தேங்கும் அமைப்பு. தெற்கு மலையம்பாக்கத்தில் இந்த அமைப்பு இருந்தது... 2000ம் ஆண்டிற்கு பிறகு இது படிப்படியாக விவசாயத்துடன் அழிக்கப்பட்டு இப்ப கட்டிடங்களாகிவிட்டது.

🏞

இவைகளை தவிர இன்னும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில் பலவகையான நீர் நிலைகள் , நீரை சேமிக்கும் நுட்பங்கள் விவரிக்கப்பட்டிருக்கு. நீரின்றி அமையாது உலகு ..என்பதை வெற்று வாய் சொல்லாக அல்ல. பழம் தமிழர்கள் எப்படி நீரையும், அதை சேமிக்கும் தொழில் நுட்பங்களை அறிவியல்பூர்வமாக புரிந்துக்கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு இந்த நுண்ணிய கட்டமைப்புகள் வரலாற்றுச் சாட்சிகளாக கட்டியம் கூறுகின்றது, ஆனா, அதுபத்திலாம் கவலைப்படாம எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்ற காமெடி மாதிரி அக்கபக்க மாநிலத்தில் சில டி.எம்.சி தண்ணீருக்கு கையேந்தி நிற்கிறோம்.  

சொகுசாய் வாழ தெருக்களில் சிமெண்ட் சாலைகளை கொண்டு வந்தோம். சாணம் தெளிச்சு வாசல் பெருக்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு மிச்சமிருக்கும் இடத்திலும் சிமெண்ட் பூசி தெரு முழுக்க காரை தெருவா இருக்கு. அப்புறம் எப்படி மழைநீர் மண்ணுக்குள் ஊறும். மிச்சம் மீதி இருக்கும் காலி மனைகள் முழுக்க பிளாஸ்டிக் கவர்களை கொட்டி நீரை உள் இறங்காம பொறுப்பா!! பார்த்துக்குறோம். ஆறு, குளம், ஏரி மண்லாம் சுரண்டி எடுத்தாச்சு., கால்வாய், ஓடைலாம் கட்டிடமாய் மாத்தியாச்சு! இனி எப்படி நீரை சேமிக்க?!  எங்காவது குழாய்கள் திறந்திருந்தால் மூடி இருப்போமா?! குழாய்களில் உடைப்பெடுத்தா செல்பி எடுத்து பொறுப்பற்ற அரசுன்னு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி,  சேவ் வாட்டர்ன்னு ஸ்டேட்டஸ் போட்டு லைக், கமெண்ட் வாங்குவதோடு நம்ம பொறுப்பு முடிஞ்சதுன்னு இருக்கோம்.

பூமி நமக்கானது மட்டுமில்ல! எல்லாருக்குமே பொதுவானது! அதை நினைவில் வச்சுக்கிட்டு செயல்படுவோம்.

Monday, October 14, 2024

*R.K. Narayan*

*R.K. Narayan*
•••••••••••••••
I really can’t explain its persistence, you know. Because it was just a casual idea. It’s not a fixation, a fixed geography. It has grown, developed. I think it has very elastic borders, elastic frontiers, elastic everything—with a few fixed points, that’s all….

I had an idea of a railway station, a very small railway station. You’ve seen the kind of thing, with a platform and trees and a station-master. The railway station to which Swami goes to watch the trains arrive and depart: that was the original idea with which I started Swami and Friends. But in the actual book it comes last, it’s at the end of the story.

And then what happened was I was thinking of a name for the railway station. It should have a name-board. And I didn’t want to have an actual name which could be found in a railway time-table. I wanted to avoid that, because some busybody was likely to say, “This place is not there, that shop he has mentioned is not there.” If it’s a real town it’s a nuisance for a writer.




And while I was worrying about this problem, the idea came to me—Malgudi just seemed to hurl into view. It has no meaning. There is a place called Lalgudi near Trichy and a place called Mangudi near Kumbakonam or somewhere. But Malgudi is nowhere. So that was very helpful. It satisfied my requirement.

[R.K. Narayan on the creation of Malgudi.]
 
[Source: The Frontline]

R. K. Narayan’s journey as a writer is indeed compelling, marked by early setbacks that shaped his future. After failing his university entrance exam in English at 18, Narayan experienced a pivotal gap year that led him to teach English in Channapatna. Unfortunately, that venture was unsuccessful, prompting him to return to Mysuru.

During this time, Narayan began writing stories and novels, sharing them with friends in local cafes, but none were published initially. His fortunes changed when he sent the manuscript of "Swami and Friends" to a friend in the UK, with a rather dramatic request to either find a publisher or dispose of it. His friend, fortunate to be connected with the esteemed writer Graham Greene, showed the manuscript to him. Greene championed Narayan's work, which resulted in its publication in 1935, marking the beginning of Narayan's literary career.

Following "Swami and Friends," Narayan published "The Bachelor of Arts" in 1937, further establishing his reputation as a novelist. This period was not without personal tragedy; the deaths of his father and wife in quick succession deeply affected him. Despite this heartache, Narayan found refuge in writing, producing significant works like "Malgudi Days," published in 1942, which explored the lives of characters in the fictional town of Malgudi. This collection later became a popular television series in the 1980s.

His acclaimed novel "The Guide" won the Sahitya Akademi Award in 1960, solidifying his place in Indian literature. Narayan continued to write and inspire until his passing in 2001 at the age of 94, leaving a legacy that resonates with readers globally.

For more detailed information, you can check the following sources:
- The New York Times
- Britannica
#ksrpost
14-10-2024.


Friday, October 11, 2024

*#PortBlair to be renamed as Sri Vijaya Puram. Union Home Minister Amit Shah took to X and made the announcement.*

 *#PortBlair to be renamed as Sri Vijaya Puram. Union Home Minister Amit Shah took to X and made the announcement.*

இனி (#அந்தமான்) #போர்ட்பிளேயர் #விஜயபுரம்! He wrote, "Inspired by the vision of PM Narendra Modi Ji, to free the nation from the colonial imprints, today we have decided to rename Port Blair as Sri Vijaya Puram." He added, “While the earlier name had a colonial legacy, Sri Vijaya Puram symbolises the victory achieved in our freedom struggle and the A&N Islands' unique role in the same. Andaman & Nicobar Islands have an unparalleled place in our freedom struggle and history. The island territory that once served as the naval base of the Chola Empire is today poised to be the critical base for our strategic and development aspirations.”



இங்கு பெரும்பாலான சூழல்களில் பிரச்சனையை தீர்ப்பதற்கான காரணங்கள்

 இங்கு பெரும்பாலான சூழல்களில் பிரச்சனையை தீர்ப்பதற்கான காரணங்கள் தேடப்படுவதில்லை. மாறாக பிரச்சினைகளை வளர்ப்பதற்கான காரணங்கள் அதிகமாக தேடப்படுகிறது.

போதை ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி,

 போதை ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி, ஓமந்தூரார் நினைவு கூரப்பபடுவார்களா? குறைந்தபட்சம் அவர்களது படங்களாவது இடம் பெறுமா? இவர்களை பற்றி ஸ்டாலின், கனி மொழிக்கு அறிதல் உண்டா⁉️

இருள் கவிழ் நகர் ; வெளிச்சம் வருமா ? சென்னை எங்கள் ECR பகுதியில் …. நேற்று இரவு

 இருள் கவிழ் நகர் ; வெளிச்சம் வருமா ? சென்னை எங்கள் ECR பகுதியில் …. நேற்று இரவு

@KSRadhakrish · Sep 13

 


மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த

 மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த

அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

Be courageous.


 Be courageous. Once the storm is over, you won’t remember how you made it through and managed to survive. You won’t even be sure, whether the storm is really over. But one thing is certain. When you come out of the storm, you won’t be the same person who walked in. That’s Courage and Courage is the most important of all the virtues because without courage, you can't practice any other virtue consistently. And you know Pain nourishes your courage.You have to fail in order to practice being brave(courage)...

#ksrpost 13-9-2024.

Dancing Hall in the Palace of Raja #TirumalaNayak #Madurai Painting done in early 1840s.

 Dancing Hall in the Palace of Raja #TirumalaNayak #Madurai

Painting done in early 1840s. The sketching and painting involved a collaborative effort. between Lieutenants Thomas Askwith Jenkins of the 33rd Madras Native Infantry was the commanding officer of the troops involved in the Pamban Passage project, clearing a new shipping channel between the coast of Madras and Sri Lanka. He was stationed at Pamban along with William Walter Whelpdale of the 19th Madras Native Infantry from 1838. Then Whelpdale died in 1842. Ravanat Naik was most likely a Naik working with them in the Infantry, someone working as a draughtsman on the Pamban Passage clearance.


@KSRadhakrish · Sep 12

 


@KSRadhakrish · Sep 12


 

நண்பர் சீதாரம் யெச்சூரி ( 72) காலமானார். துயரம்…. ஆழ்ந்த இரங்கல்.

 


Deeply saddened by veteran CPI-M leader, Sitaram Yechury Ji's passing. He was a stalwart who rose from the ranks to become one of the most respected voices in Indian politics. He was known for his intellectual take on issues, and connection with the people at the grassroots level. His insightful debates with leaders across the political spectrum earned him recognition beyond his party. My heartfelt condolences to his family, comrades, and followers. May his soul rest in peace.

@KSRadhakrish · Sep 12


 

#சபாஷ்_துரைமுருகன்

 #சபாஷ்_துரைமுருகன்

“கட்சிக்கு வரும் இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள். வந்த உடனேயே என்ன கிடைக்கும் என எதிர்பார்க்காதீர்கள்” -அமைச்சர் துரை முருகன்

யாராச்சும் இந்த சர்தேசாய் லூசுக்கு எடுத்து சொல்ளுங்க, எதிர்கட்சி தலைவராக இருந்து பேசுவதால் தான் பிரச்சனை.

 யாராச்சும் இந்த  சர்தேசாய் லூசுக்கு எடுத்து சொல்ளுங்க, எதிர்கட்சி தலைவராக இருந்து பேசுவதால் தான் பிரச்சனை.

 இவங்க பாட்டி செத்த நேரத்தில் இந்தியாவில் தாடி , தலைப்பாகை, சீக்கிய அடையாளத்தோடு 

இருக்க முடியாமல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த சீக்கிய மக்கள் என்பதை மறந்து உளற வேண்டியது.. அதுக்கு பதிலடி கொடுத்தால் பதற்றமா?



அனுபவம் - எல்லாவற்றையும் இழந்து, தாழ்ந்த பிறகு ... எஞ்சி இருப்பது… இதில் நீதியும் சமன்பாடுயும் நல்லதுயும் கிடையாது….

 அனுபவம் - எல்லாவற்றையும் இழந்து, தாழ்ந்த பிறகு ... எஞ்சி இருப்பது… இதில் நீதியும் சமன்பாடுயும் நல்லதுயும் கிடையாது….

அறிதல், புரிதல் அற்ற, அறிமுகமற்றவர்களின் அற்ப பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

 அறிதல், புரிதல் அற்ற, அறிமுகமற்றவர்களின் அற்ப பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

வீட்டுக்குள்ளே புருசனை வெளுவெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, சில பெண்களை அடிச்சிக்க முடியாது!

 


woman, Iran, 2012 📷: Farzad Sarfarazi

 


அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க

 அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க

பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க யாவரும் பெற உறும் ஈசன் காண்க

You let time pass.That’s the http://cure.You have survived the http://days.

 You let time pass.That’s the cure.You have survived the days.You would have cried and tried your way back up through the days. Understand if you see the future through your dreams, prosperity materializes very day.If you see through your fears, failure multiplies all around you.The important thing is not being afraid to see the future. Yes sit alone and close your eyes and lean your head back say to yourself "I want to be better. I’m going to be better.I’m going to make better choices. Every day I’m committed to making decisions that will make my life better.” and then you will realize you’re materializing prosperity...

#ksrpost 12-9-2024.

Thursday, October 10, 2024

தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு இல்லாத உணவு போன்று...!

 தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு  இல்லாத  உணவு போன்று...!

உற்சாகமான மனநிலை   பாதி  வெற்றியை   கொடுத்து  விடும்...!!



பணம் கோடிக்கணக்காக ஒருவரிடம் சேருகிறது என்றால் அது அவருடைய

 பணம் கோடிக்கணக்காக ஒருவரிடம்  சேருகிறது என்றால் அது அவருடைய திறமை அல்ல. அவர் பிறரிடம் கொள்ளையடிக்க இந்த சமுதாயம் வழங்கி இருக்கும் ஒரு வாய்ப்பாக தான் அதை நாம் பார்க்க வேண்டும். 

நேர்மையானவர்கள் கொள்ளையடிக்கும் சிந்தனைக்கு போக முடியாது. 

பிறர் உழைப்பை கொள்ளை அடிக்கும் சிந்தனைக்கு போக முடியாதவர்களை நாம் முட்டாள் என்று கூற முடியுமா! 

அதற்கு பாதுகாப்பு தருவது யார் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும். 

எல்லோரும் வாழும் சிந்தனையை ஏன் அந்த சிந்தனை சிந்திக்கவில்லை என்று கேள்வியும் கேட்க வேண்டும்? 

அதற்கு காரணம் இது இன்றைக்கு ஆட்சி செய்யும் சிந்தனை என்பது சொத்துடமை சிந்தனை ஆகும். 

உண்மையான ஜனநாயகம் இதுதான் என்று நாம் ஏமாற முடியாது. 

உண்மையான ஜனநாயகம் என்பது அனைவரையும் முன்னேற்றும் சோசலிச சிந்தனையை தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

#பாரதியார் நினைவு நாள் இன்றா, நாளையா....?
























சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் பாரதியார் வசித்து வந்தார். 

தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்., 11- நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார் .


நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால், செப்., 12, பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு, அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும், செப்.,11ல் பாரதியார் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. 


இது குறித்து தமிழ் ஆர்வலர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். பாரதியார் நினைவு தினம் செப்.,12 என, அதிகாரப்பூர்வமாக தேதியை மாற்ற முயன்றனர். 


இதன் காரணமாக, 2014-ல், தமிழக முதல்வராக செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது, எட்டயபுரத்தில் உள்ள கல்வெட்டில், மறைந்த தினம் செப்- 12 என்று திருத்தம் செய்யப்பட்டது. அப்போது முதல், செப்.12-ல் தான் பாரதியார் நினைவு தினத்தை தமிழக அரசு அனுசரித்து வருகிறது.


ஆனால் பெரும்பாலான இணையத் தளங்களில் செப்டம்பர் 11 என்றே இருந்து வருகிறது. 


*விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய கும்பல்களுக்கு வன்மையான கண்டனங்கள்*

 *விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய கும்பல்களுக்கு வன்மையான கண்டனங்கள்* 

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுற்றுலா படகுகளை நிறுத்துவதற்கு படகு தளம் உள்ளது. அதிக சுற்றுலாப் பணிகள் வருகை தரும் நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படகுகளை அங்கு நிறுத்தி சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்க சிரமம் ஏற்பட்டதன் காரணமாக மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மற்றும் தமிழக அரசின் நிதியாக ரூபாய் ஆறு கோடி என 16 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் படகு தளத்தினை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தற்போது வாவதுறை பகுதியைச் சார்ந்த மீனவப் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் சில நபர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள படகு தளத்தை அகலப்படுத்தினால் தங்களுக்கு மீன் பிடிக்க தடையாக இருக்கும் என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மேற்படி பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர் சில சமூக விரோதிகள் . இது மிகவும் கண்டனத்துக்குரியது.


  இது போன்ற பிரச்சனைகளை தூண்டிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

அமெரிக்காவில் இல்ஹான் ஒமர் உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்தித்தார். இவர் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்…

 


@KSRadhakrish · Sep 11

 


அகத்தில் நாம் கைதிகள், புறத்தில் நாம் எளிமையானவர்களாக இருந்தாலும்.

 அகத்தில் நாம் கைதிகள், புறத்தில் நாம் எளிமையானவர்களாக இருந்தாலும். 



நாம் நமது ஆசைகள், நமது கருத்துகள், இலட்சியங்கள், எண்ணற்ற இச்சைகள் மற்றும் தேவைகளின் கைதிகள். 


அகத்தில் சுதந்திரமாக இருந்தால் ஒழிய எளிமையைக் காண முடியாது. இலக்கில்லாமல் போகும் போது பயணம் சுவாரஸ்மாக இருக்கிறது

இலக்குடன் பயணிக்கும் போது சலிப்படைய வைக்கிறது

நோக்கமும் பயணம் சுவாரஸ்யமாக அமைய ஒரு முக்கிய காரணமாகிறது


புரிதல் எளிதுதான் அந்தப் புரிதலை புரிய வைக்கத்தான் மனம் படாத பாடுபடுகிறது...

பாரதி பற்றி கண்ணதாசன்

 ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல.. அவன் சர்வ சமரசவாதி..! வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது. 

- பாரதி பற்றி கண்ணதாசன்.!

You only live once, but if you do it right, once

 You only live once, but if you do it right, once is http://enough.Be brave, just take any step, whether small or large and repeat day after day. It may take time, but the path to success will become http://clear.You know being brave means knowing that when you fail, you don’t fail forever.Take chances, make mistakes. You can commit as many mistakes as possible, remembering only one thing not to commit the same mistake again. That’s how you grow. Yes be brave enough to live the life of your dreams according to your vision and purpose instead of the expectations and opinions of others....


#ksrpost 

11-9-2024.


இன்று மா கவி பாரதியின் 103 ஆவது நினைவு நாள் …. #பாரதி #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 11-9-2024.

 


#சீதாராம்எச்சூரி

 #சீதாராம்எச்சூரி 




அகில இந்திய சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி  நோய்வாய் பட்டுக் கவலைக்கிடமாக  புது டில்லி எய்ம்ஸ் இல் இருக்கிறார் என்கிற செய்தியை கேள்விப்பட்டேன்! Sitaram Yechury on respiratory support, condition critical: CPM மிக கவலையாக இருக்கிறது!. அது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் கவலையும் கூட!! 


1970களில் டெல்லி JNU வில் நான் சில காலம் படித்த போது எச்சூரி அங்கு ஸ்டீபன் காலேஜில் படித்தார். அப்போதும்  JNU இடதுசாரி இயக்கங்களின் பிரபலமான இடம்! அதற்குச் சமமான காலத்தில் பிஜேபியைச் சார்ந்த  அருண் ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். இதெல்லாம் கடந்த காலத்தின் நினைவுகள்.


தமிழ்நாட்டில்  1996 தேர்தல் காலத்தில் மதிமுக சிபிஎம்  கூட்டணியில் இணைந்து இருந்த போது பிரகாஷ் காரத் மற்றும் அன்றைய சிபி எம் பொலிட் பீரோ மெம்பராய் இருந்த கரூரைச் சேர்ந்த பி  ராமச்சந்திரன் PRC போன்றோர்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். தில்லி ஏ கே ஜி பவனில் அடிக்கடி இவர்களைச் சந்தித்து இருக்கிறேன்!


பி  ராமச்சந்திரன் மிகச்சிறந்த ஒரு மார்க்சியச் சிந்தனையாளர். அவருடன் ஒரு நல்ல தொடர்பு எனக்கு இருந்தது. 


பிறகு எனக்கு ஏற்பட்ட அரசியல் தொய்வுகளில் இவர்களின் தொடர்புகள் யாவும் சற்று காலம் விட்டு போயிருந்தது. இன்று எச்சூரி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அக்காலத்தில் இவர்களோடு எனக்கு இருந்த அரசியல்க் காரணி

களை மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்.


எச்சூரி அவர்கள் தமிழ் இந்தியா டுடே ஆசிரியராக இருந்த சகோதரி வாஸந்தி அவர்களின் உறவினர். ஆந்திராவைச் சேர்ந்தவர்.


இந்திரா காந்தியின் 1976 ன் அவசரகாலச் சட்டத்தின் எச்சூரி போது  மாணவராக இருந்த நேராக அதைத் தீவிரமாக எதிர்த்துக் கேள்விகள் கேட்டவர். சித்தாந்தப் பிடிப்போடு இந்திய மக்கள் ஜனநாயகத்தில் பல்வேறு உரிமைகளுக்காக உறுதியாக நின்றவர்.


 இந்தியாவின் நீண்டகால அரசியல் சாட்சியாக இருந்து வரும் அவர் இந்த நோயிலிருந்து மீண்டு நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டுகிறேன்!!


#SitaramYechury 

#emergency

#CPM

#சீதாராம்எச்சூரி 

#சிபிஎம்


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

11-9-2024

"உண்மையில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு வைத்திருக்கிறார்கள்" - பினராயி விஜயன் பதில்

 "உண்மையில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு வைத்திருக்கிறார்கள்"  -  பினராயி விஜயன் பதில் 

#PinarayiVijayan | #Kerala | #CPIM | #RSS | #RajivGandhi

என் மண்….

 என் மண்….

என் பூமி….. #கரிசல்காடு வானம் பார்த்த கந்தக மண் The beauty of village. The beauty Of nature Love of everything village #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 10-9-2024.

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...