Monday, April 7, 2025

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்*

#*பிரதமர் மோடி
இலங்கை பயணம்*
————————————
இலங்கைக்கு அரசுப் பயணமாகவும் சென்ற பிரதமர் மோடி அவர்கள் அங்கு  பல தரப்பினரையும் சந்தித்துள்ளார். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண ஈழத் தலைவர்களையும் சந்தித்துள்ளார். அதேபோல் இந்திய வம்சாவளியான தோட்டத் தொழிலாளிகள் அதாவது மலையக தமிழர்களையும் சந்தித்துள்ளார்!
அவர்களது வீடுகளுக்கான இந்திய உதவி திட்டம் நடைபெற்று வருகிற வேளையில் அவை என்ன நிலையில் இருக்கிறது என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார். 

இலங்கை அதிபர் அனுராவிடம் வடக்கு கிழக்கு மாகானக்கான அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். Indo Srilanka accord 1987- 13th amendment)ஜனநாயக ரீதியான தேர்தல்களை முறையாக நடத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு நிலைத்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்! அனுரா அவர்களும் ஆவண செய்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் தமிழர்களின் இன அழிப்பு குறித்தான சர்வதேச நம்பகமான சுதந்திரமான விசாரணை, சுய நிர்ணயம் உரிமைபடிபொது வாக்கு எடுப்பு Referandum ….. 2009 இல் கானாமல் போனவர்கள் , கைது செய்ய பட்டவர்கள், தமிழர்களின் நில மீட்பு, தமிழ் விதவைகளின் மறு வாழ்வு, சீனா ஆதிக்கம் என சில கோரிக்கைகள்…. கச்சத்தீவை பற்றி.. என்னவென்று தெரியவில்லை.

ஆனால், மோடி பயணத்தில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அங்கே உள்ள இந்துக் கோயில்கள் பாதுகாப்பு அதற்கானபுனரமைப்பு சீர்திருத்தங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி மறுபடியும் அவர்களின் வழிபாட்டு உரிமையை நல்ல விதமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதையும் அனுராவிடம் சொல்லியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த நல்லுறவுகள் அதன்படி இருநாட்டுப் புரிதல்கள் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்கள் ஒருபுறம் இருக்க ஒரு 700 இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே மிகவும் புதிராக இருக்கிறது!

அது ஒருபுறம் இருக்க ஏறத்தாழ இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையே ஏழு ஒப்பந்தங்கள் நிறைவேறி உள்ளன. இந்த ஒப்பந்தங்களால் இருநாட்டு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இலங்கையில் சீனாவின் தலையீடு குறித்த இந்தியாவின் கவலையும் தீர்க்கப்பட்டு புதிய புரிதல்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருக்கிறது! இந்தியாவின் ஆதரவின்றி இலங்கையின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வழியில்லை என்பதை அனுராவும் புரிந்து கொண்டிருக்கிறார். அதாவது சீனர்களின் மூலதனச் சுரண்டலுக்கு பதிலாக  அண்டையில் உள்ள பெரிய நாடான இந்தியாவின் மனிதாபிமான உதவியே முக்கியமானது என்பதாக இந்தப் பயணத்தில் முக்கியமான ஒரு புரிந்துணர்வு நிறைவேறி இருக்கிறது.

ஆனாலும் இலங்கையில் இந்தியா மீதான எதிர்ப்பு  கொண்ட விஷமப் பிரச்சாரகர்கள் இந்த ஒப்பந்தத்தை விமர்சனமும் செய்வார்கள்!

அவை ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைக்கு இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார அழுத்தங்கள் விலை உயர்வு பல்வேறு பிரச்சனைகள் செயலாக்க மந்தங்கள் அனைத்து தேசிய மக்களுக்குமான பற்றாக்குறை  யாவற்றையும்  மனதில் கொண்டு அனுரா இந்திய ஒப்பந்தத்தை நல்வழியில் நடத்திச் செல்வார் என்பதாக எதிர்பார்ப்பு இருக்கிறது!
மோடியின் இந்த பயணம் இலங்கைக்கு சில விடயங்கள் திருகோணமலை மற்றும் சம்பூர் மின் உற்பத்தி, அனுராதாபுரம் ரயில் வழி என நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விட்டது.

அதலிலும் முக்கியமானது பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சனைகளைக் கையாள்வதில் இரு நாடும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்கான அச்சாரம் கையெழுத்து ஆகியுள்ளது! இந்த பாதுகாப்பு எனபது எப்படி சரியாக இருக்கும். சீனாவின் உதவி இலங்கைக்கு இருக்கும் பட்சத்தில் நமக்கு சரியாக இருக்கமா? சில நண்மைகள்…. சில விடை அற்ற விடயங்கள் உள்ளன.

மோடி இலங்கை சென்றபோது மிக மிக நுணுக்கமான தந்திரோபாயங்களை மேற்கொண்டார், எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சரியாக சென்று புத்த மடாலயத்தின் தலமை குருவினை சந்தித்து ஆசிபெற்றுகொண்டு , ரயில் போக்குவரத்துக்கு அடிக்கல் நாட்டிவிட்டு திரும்பிவிட்டார்

அனுராதபுரம் பக்கமே சிங்கள அரசர்களுக்கும் சோழபேரரசுக்கும் இடையே நடந்த  போரின் அடையாளங்கள் உள்ளன .அங்கிருந்து சற்று தூரத்தில் சோழன் தலைநகர் போல் விளங்கிய பொலனறுவ இன்று கன்னட ஹம்பி  மாதரியே இடிபாடுகளுடன் உண்டுஅனுராதபுரம் தொனமையான இடம். மதுரை, காஞ்சி போல  பழமையானதுஅங்கிருக்கும் கயா போதிமரத்தின் கிளையினை போல் பழமையானது எல்லாளன் நினைவிடம்.
கிமு முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் அசோகரின் புத்தமதம் சங்க மித்திரை போன்ற பிரதிநிதிகள் மூலம் இந்து தீவான இலங்கையின் தென் பகுதியில் வளர்ந்தது.

அன்று இலங்கையில் சோழமன்னன் வம்சத்தில் ஒருவன் ஆண்டான், அவனே மனுநீதி சோழன் என்றும் சொல்வதுண்டு, அவன் பெயர்தான் எல்லாளன் என்கிறார்கள்.இவர் சிங்கள மக்களோடு அன்பு காட்டி நட்புடன் இருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது.

அப்படிபட்ட எல்லாளன் சிறப்பாக ஆண்டுகொண்டிருந்தபொழுது, தென்னிலங்கையில் துட்டகாமன் அல்லது கைமு எனும் சிங்களவன் தோன்றினான், அவன் தந்தை காகதீசன் தாய் விஹாரமகாதேவி.இவன் தென்னிலங்கை துறைமுக ஹம்பாதோட்டா பக்கம் சார்ந்தவன்.இந்த விஹாரமகாதேவிக்கு எல்லாளனும் அவன் இந்து ராஜ்ஜியமும் பிடிக்கவில்லை.துட்டகாமன் பிறந்தது, துஷ்ட செயல்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் செய்ததால் துஷ்ட காமினி ஆயிற்று.தனக்கென பெரும் அடியாள்படை கொண்டு தீமிரில் அட்டகாசம் செய்த காமன் எல்லாளனை வீழ்த்த கிளம்பினான், ஆனால் தந்தை எல்லாளன் நல்லவன் எனவும் அவனை வெல்லமுடியாது இப்போர் அவசியமில்லை எனவும் சொன்னார், காமினி கேட்டான் இல்லை.தந்தை மகன் மோதலில் துட்ட காமன் காட்டுக்கு விரட்ட்டபட்டான், தன் அவமானத்துக்கு காரணம் எல்லாளன் என பொருமிகொண்டிருந்தான்.தந்தை மரணத்துக்கு பின் தாய் அவனை மன்னனாக்கி எல்லாளனுடன் மோத தூண்டிவிட்டாள்

அனுராதபுரம் கோட்டை அருகே நடந்தபோரில் எல்லாளன் துட்டகாமனின் படைகளை நொறுக்கிபோட்டான், தந்திரகார காமினி எல்லாளனை ஒற்றைக்கு ஒற்றையாக போரிட அழைத்தான்

எல்லாளனுக்கு அப்பொழுது வயது 75 இருக்கலாம், துட்ட காமனுக்கு 30 வயது இருக்கும் இது முறையற்ற போர் என்பதால் எல்லாளனை அவன் மந்திரிகள் தடுத்தார்கள்ஆனால் யுத்த அழைப்பை நிராகரிப்பவன் உண்மையான வீரன் அல்ல என தனியாக மோத சென்றான் எல்லாளன்
இருவரும் யானை மேல் அமர்ந்து போர் செய்தார்கள், யுத்தவிதியினை மீறி எல்லாளன் யானையினை விழவைத்து அப்பொழுது சரிந்த எல்லாளனை கொன்றான் துட்ட காமினி

யாராலும் கொல்லமுடியா எல்லாளனை துட்டகாமன் வென்றவுடன் அவன் பெரும் வீரனாக கொண்டாடபட்டான், சிங்களரின் தனிபெரும் தலைவனானான்

ஆனால் எல்லாளனை அவன் மதித்தான், மக்கள் ஆதரவு எல்லாளனுக்கு நிரம்ப இருந்தது , எல்லாளனுக்கு எல்லா மரியாதையும் செய்யவேண்டும் என கொந்தளித்தார்கள் அதற்கு கட்டுபட்டான் துட்ட காமன்

அனுராதாபுரத்தில் பெரிய சாமாதியை எல்லாளனுக்கு கட்டி அதை கடந்து செல்வோர் தலைகுனிந்தபடி காலணி அணியாமல் செல்ல வேண்டும் அது எல்லாளனுக்கான மரியாதை என அறிவித்து கல்வெட்டும் வைத்தான்
சமாதியும் கல்வெட்டும் இன்றும் அனுராதபுரத்தில் உண்டு

பின் துட்டகாமன் என்ன ஆனான் என்பது பற்றி வரலாறு இல்லை.இவை 2000 ஆண்டுக்கு முன்பு நடந்தவை, இவை எல்லாம் மகா வம்சம் நூலில் உள்ளது.

கிபி 1954ல் வேலுபிள்ளை எனும் தமிழர் தன் மனைவி பார்வதியோடு அனுராதாபுரம் வருகின்றார் அவருக்கு 3 குழந்தைகள் இருந்தார்கள், அவர் அரசு நில அளவையாளர் என்பதால் அடிக்கடி பணிமாற்றம் உண்டு அப்படித்தான் அனுராதாபுரம் வந்தார்

அவர் மனைவி பார்வதியம்மாளுக்கு எல்லாளன் சமாதிக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் இருந்தது, அந்த அனுராதபுரத்தில் அவர் கருசுமந்தார்
அங்கு உருவான கரு யாழ்பாணம் வல்வெட்டிதுறையில் பிறந்தது, அதற்கு துரை என பெயரிட்டு அழைத்தார்கள் பின் அவன் பிரபாரகன் என்றானான்

பிரபாகரன் வடக்கே வளரும் பொழுது தெற்கே அம்பாதோட்டையில் 10 வருடம் முன்பாகவே ஒருவன் தன் தம்பியரோடு வளர்ந்து வந்தான் அப்பொழுது அவன் பெயர் மகிந்தா ராஜபக்சே

பிரபாகரன் எல்லாளன் போல மாபெறும் தலைவரானான், யாராலும் அவனை அடக்க முடியவில்லை சிங்களம் இந்தியாவிடம் சரணடைந்தது, இந்திய அமைதிபடை, ராணுவமும் அவனை பிடிக்கமுடியவில்லை.

உண்மையில் தொட்டுவிடும் தூரத்தில் தனிநாடு அடையும் அளவு மன்னர் போல வளர்ந்தான் பிரபாகரன், காலம் இந்திய சோனியா காங்கிரசின் குளறுபடியால் அவன் தோற்றான்.எல்லாளன் என அவன் போற்றபட்டான், அவனிடம் எல்லாளன் படைபிரிவும் இருந்தது

அப்பக்கம் துட்(ஷ்)டகாமன் போல வளர்ந்து வந்தார் ராஜபக்சே, எல்லாளன் துஷ்டகாமனுக்கு வாய்ப்பளித்தது போலவே மகிந்த ஆட்சிக்கு வரவும் பிரபாகரன் உதவினார்

அதில் இருந்து துட்ட காமன் என கொண்டாடபட்ட மகிந்த ராஜபக்சே, 2009ல் எல்லாளனை வீழ்த்திய துட்ட காமினி என அவருக்கு பெரும் பட்டமெல்லாம் தரப்பட்டது.

#பிரதமர்மோடிஇலங்கைபயணம்
#எல்லாளன்
#இலங்கையில்சோழர்கள்
#துட்டகாமன் 
#அனுராதபுரம்
#இந்தியாஇலங்கை
#indosrilankaaccord1987

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-4-2025.


No comments:

Post a Comment

#திமுக முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசசை எதிர்த்து போராடும் வேடிக்கைகள்

#திமுக முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசசை எதிர்த்து போராடும் வேடிக்கைகள்  ———————————————————- முதல்வர் ஸ்டாலின் தெ...