Wednesday, April 9, 2025

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*)

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... 
( *நான் பார்த்த அரசியல்*)

" நாம் ஒருபோதும் செய்ய விரும்பாதவற்றைச் செய்து கொண்டும், நமக்கு விருப்பமில்லாதவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டும், நமக்கு விருப்பமில்லாத ஒரு தொழில் அல்லது வேலையில் இருந்து கொண்டும் வாழும் இந்த வாழ்க்கையை வாழ்ந்தால் என்ன? வாழா விட்டால் என்ன?

ஆனால் தன்னுடைய பணி இன்னதென்று கண்டு கொண்டவனே செல்வந்தன் ஆவான்.

தன்னுடைய பணியில் ஒரு நிறைவை உணரத் தொடங்குகிறவனே பெரிய செல்வந்தன் ஆவான்.

அந்நிலையில் மொத்த வாழ்க்கையுமே ஒரு வழிபாடாகி விடும்."
•••

*சங்கி வந்து விடுவான் ஜாக்கிரதை ! என குரல்*

திமுகவின் ஊழல் அரசியலையும் குடும்ப அரசியலையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினால் சகோதரர்கள் சொல்லுகிறார்கள் அப்படியெல்லாம் பேசக்கூடாது சங்கி வந்து விடுவான் என்று

என்னிடம் சொல்வதை விட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திடம் சொல்லுங்கள் 

உங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரையாவது திமுக தலைமைக்கு கொண்டு வாருங்கள் சங்கிகள் இனிமேல் வாரிசு அரசியலைப் பற்றி பேச மாட்டார்கள் என்று !

இதுவரை ஊழல் செய்தது போதும் இனிமேலாவது ஊழல் செய்யாமல் இருங்கள் சங்கிகள் இனிமேல் நம்மை பேச மாட்டார்கள் என்று ! 

சங்கிகள் யோக்கியமா இல்லையா என்பதை பற்றி விவாதம் பிறகு வைத்துக் கொள்ளலாம் நாம் முதலில் நேர்மையாக இருப்போம்

குற்றம் செய்கிறவனை வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள் ஆனால் குற்றம் செய்யாதே என்று சொன்னால் அது ஆபத்து என்கிறீர்கள்

திராவிட இயக்க கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாம் எதுவும் சொல்லக்கூடாது ஆனால் திராவிட இயக்க கொள்கைகளை பயன்படுத்தி ஒரு குடும்பம் கொள்ளை அடிக்கலாம் 

இது என்ன நியாயம் ?... 

அண்ணாவிற்கு பின்னால் அண்ணாவின் குடும்ப வாரிசாக இல்லாத கருணாநிதி திமுகவை சிறப்பாக வழி நடத்தினார் எம்ஜிஆருக்கு பின்னால் எம்ஜிஆரின் குடும்ப வாரிசாக இல்லாத ஜெயலலிதா அதிமுக கட்சியை வலுவாக்கினார்

ஜெயலலிதாவை எதிர்க்க முடியாமல் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மத்தியில் திமுக ஆட்சி இருக்கும் போது தான் நீட் கொண்டுவரப்பட்டது

எல்லா கட்சிக்கும் சோதனை காலம் வரும் அந்தக் கட்சிக்குள் வலிமையான தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் அந்த கட்சியை முன்னெடுத்து செல்வார்கள்

வாரிசுகளால் தான் கட்சியை நடத்த முடியும் என்ற ஒரு மோசமான கழிசடையான சிந்தனை அருவருக்கத்தக்கது

 அதுவும் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் இதை சொல்வது வெட்கக்கேடானது 

அண்ணாவின் பெரியாரின் தம்பிகள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்த யோக்கிதையும் இல்லை

மேலும் நியாயம் பேசுகிறார்கள் 

கட்சியும் தலைமையும் ஏற்றுக் கொண்டார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்கள் 

பாஜகவை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குகிற கட்சி என்கிறீர்கள் அவன் யார் கட்டுப்பாட்டில் இயங்கினால் உங்களுக்கு என்ன அந்தக் கட்சிக்காரனும் மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் தானே அதைப் பற்றி விமர்சனம் எதற்காக செய்கிறீர்கள் என்று உங்களைப் போல நான் கேட்க மாட்டேன்

கட்சியின் தலைமை தன் வாரிசை விரும்புகிறது என்றால் கட்சியில் உள்ளவன் தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள வாரிசை தூக்கி கொண்டாடுவான்

ஒரு கட்சி தலைமைக்கு யார் வந்தாலும் மக்கள் வேறு வழியில்லாமல் அந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் வாரிசு அரசியலைக் கொண்டு வருகின்ற கட்சியை நிராகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னும் மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது

ஒரு காலத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய திராவிட இயக்கங்கள் இன்று சுயநலமாக போய்விட்ட காரணத்தால் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்

மாநில உரிமைகளை காப்பாற்ற போராடும்போது வாழ்த்துவோம் வாரிசு ஊழல் அரசியலை எதிர்ப்போம்

இதை நான் செய்யவில்லை என்றால் இன்னொருவனிடம் திராவிட இயக்கம் பலியாகும்

இதற்காக எனக்கு பெரிய கூட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை 

பகத்சிங் பத்து பேரோடு தான் போராடினான் அவன் வெற்றி பெற முடியாவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களிடம் உணர்வுகளை ஊட்டி விட்டு செத்துப் போனான் அவன் செத்துப் போன பிறகு வெற்றி தேடி வந்தது அவன் தியாகத்தை யாராலும் மறந்து விட முடியாது

விதைப்பது என் வேலை 
அறுவடை என் அடுத்த தலைமுறைக்கு…..
அவ்வளவுதான்.

#ksrpost
9-4-2025.


No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...