*குடியரசு தலைவர்- மத்திய அரசு- ஆளுநர்கள் vs உச்ச நீதிமன்றம்*
*The President- Union of India- Governors vs The Supreme Court of India *
#*தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தியக் குடியரசு தலைவர் அவர்களுக்கே உத்தரவு பிறப்பித்துள்ளது.! என்னை கேட்டால் இந்த மாதிரியான சங்கடங்களுக்கு முன்பாகக் குடியரசு தலைவர் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் சில ரெஃப்ரென்ஸ்களை வழங்கி இருக்கலாம். இதன் இதன் அடிப்படையில் அம்மசோதாக்களை ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றித் தருவதற்கு வழிவகைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை அறிவுறுத்தி இருக்கலாம்*! அதை விட்டுவிட்டு எதற்கு இந்த தீர்ப்பு என்று புரியவில்லை! நமக்குத் தெரியும்! ஜனாதிபதி அவர்களை அனைத்து நீதிமன்றங்களுக்கும் அப்பால் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தீர்மானங்களுக்கு அடியிலும் அவரை விமர்சிக்கக் கூடாது. அதே அடிப்படையில் தான் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க முடியாது. இந்தியக் கான்ஸ்டிடியூஷன் அடிப்படையில் இது பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட சாசன விதிகள்!
ஜனநாயகம் என்பது நீதித்துறை நாடாளுமன்றம் ஆட்சியாளர்கள் மூன்றும் இணைந்த ஒரு ஜனநாயகப் பூர்வமான நிர்வாக அமைப்பு. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் போதுதான் தேச நலன்களுக்குரிய விஷயங்கள்
நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று மேண்டஸ்கி என்ற பிரெஞ்ச் அறிஞர் குறிப்பிடுகிறார்! இவை மூன்றும் “ஸெப்ரரேசன் ஆப் த பவர்”
Separation of powers என்கிற முறையில் இணைந்திருக்கின்றன. குடியரசு முறையாக இருந்தாலும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்றாலும் இந்த முறை பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த நிலையில் இருந்து விலகி ஏனோ இந்த மசோதாக்கள் விவகாரத்தில் வினோதமாக இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் கொடுத்துள்ளார்கள்.
“ம்யூச்சுவல் செக் & பேலன்ஸ்”என்கிற முறையில் The doctrine of checks and balances states that each organ of the government shall act on the other organs in such a way as to prevent them from becoming totalitarian and to prompt them towards fulfilling their constitutional obligations. மேற் சொன்ன மூன்று அமைப்பின் எல்லைகளையும் மீறாமல் எந்த காரியம் ஆயினும் அந்தந்த தேசங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் உலகம் முழுக்க ஒத்துக் கொண்டிருக்கிற ஜனநாயகத்தின் பண்பு! அதை ஒட்டித்தான் இந்த மசோதா விவகாரத்திலும் நடந்திருக்க வேண்டும். அரசியல் சாசனமும் இதைத்தான் மறைமுகமாகச் சொல்லுகிறது. 1951இல் யாருக்கு அதிக அதிகாரம் குடியரசு தலைவருக்கா? இல்லை பிரதமரைத் தலைமையாகக்கொண்டு செயல்படும் மத்திய அமைச்சரவைக்கா? என்று இந்துமத சட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் எழும்பி வழக்காக மாறின. அன்றைக்கு செட்ல் வாட், சட்ட ஆளுமைகொண்ட இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் இதற்காக வாதாடினார்!
அது விவாதமாக மாறி இந்திய உச்ச நீதிமன்றக் கருத்தாய்வு மன்றத்தில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு பல்வேறு ஐம்பதுக்கு மேற்பட்ட விவாதங்கள் தீர்ப்புகள் என்று இந்த பிரச்சனையில் தொடர்ந்து வழக்குகள் நடந்தன! கேசவநந்த பாரதி வழக்கு அதேபோல் மினர்வா மில் மேனகா காந்தி கோலகநாத் SR Bommai case
Judges cases etc போன்ற சம்பந்தப்பட்ட வழக்குகளும் நடந்தன. இப்படியான வழக்குகளைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பலமுறை இவற்றைப் பேசி உள்ளது! அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழக்குகளில் மிகச் சரியாக நடந்துள்ளதா என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் இன்னும் இருக்கிறது. பகல்பூர் வழக்கில் அரசின் கொள்கை முடிவுகளை 1980 உச்சநீதிமன்றம் தன் வசமாக்கியது.மீண்டும் சொல்வது என்னவெனில் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை யாரும் விமர்சிக்கக் கூடாது! முடியாது! ஆனால் சில கருத்துக்களை ஜனநாயக ரீதியாக முன் வைப்பது தவறில்லை. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு என்பது 100% சரியானதுதானா என்பதுமே இன்னும் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் தான்!
இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு ஏதோ திமுக காரர்கள் நாங்கள் எதையோ சாதித்து விட்டோம் என்று
ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் விளம்பரத்துக்கு தான் பயன்படுமே ஒழிய வேறொன்றுக்கும் ஆகாது!
நீதிபதிகளின் முழு தீர்ப்பையும் வாசித்த பிறகு தான் இது பற்றிச் சொல்ல முடியும்! நீதிமன்றங்கள் விசாலமாக செயல்படுவதற்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அது மத்திய அரசையோ மாநில அரசையோ நிர்வகிக்கக்கூடிய பொறுப்பை அரசியலமைப்பு சட்டம் வழங்கவில்லை என நினைத்த விட முடயாது.குடியரசு தலைவர், ஆளுநர் மீது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற எதிர்த்துப் வழக்கு தொடர முனபு அனுமதியே கடந்த 2000 வரை தரவில்லை என நினைவு. பிரிவு 226 இன்படி ரிட் மனு வழக்கு எண்கூட வழங்க court section இல் சிரமப்படுவர்கள்…..
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள கவர்னர் இந்திய நீதித்துறை பற்றி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.....
இன்று இந்திய துணை ஜனாதிபதி இந்திய நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்......
அவருடைய கடுமையான எதிர்ப்பை அவ்வளவு சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.....
ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அளவிற்கு உச்ச நீதிமன்றத்திற்கு சூப்பர் அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.....
உச்சநீதிமன்றமா? ஜனாதிபதியா? என்று கேள்வி வந்தால் இந்திய ஜனாதிபதியே உச்சபட்ச வீட்டோ அதிகாரம் படைத்தவர்.......
உச்ச நீதிமன்றம் கொடுக்கக்கூடிய தீர்ப்பையே நிறுத்தி வைக்க கூடிய அதிகாரம் படைத்தவர் இந்திய ஜனாதிபதி...
இந்திய ஜனாதிபதி நினைத்தால் ராணுவத்தின் மூலமாக அவசர நிலை பிரகடனப்படுத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே நிறுத்தி வைக்கும் அதிகாரம் படைத்தவர்....
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதன் அடிப்படையில் மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் செயல்பட முடியும்.....
ஆனால் அதனை கடந்து நீதிமன்றங்கள் செயல்படும் பொழுது அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திற்கும் இந்திய ஜனாதிபதிக்கும் உண்டு...
142 விதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றால்......
🍁முதலில் சம்பந்தப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்ய வேண்டும்.....
🍁மத்திய சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்....
🍁இந்திய ஜனாதிபதி கருத்துக்களை கேட்க வேண்டும்....
142 விதியை அதன் பின்பே செயல்படுத்த முடியும்....
ஆனால் தமிழக கவர்னர் விஷயத்தில் இது எதுவுமே முறைப்படியாக நடக்கவில்லை.......
மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என மத்திய அரசை விமர்சனம் செய்து நாம் கூவம் போன்று கூத்தடித்துக் கொண்டிருந்தோம்......
ஆனால் இந்திய பேரரசு சுனாமி போல் உள்ளுக்குள் ஆழிப் பேரலையாக சீறி கொண்டு இருந்தது தற்போது வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது......
கண்டிப்பாக இந்திய துணை ஜனாதிபதியே நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசுகிறார் என்றால்......
நாளை இந்திய உச்ச நீதிமன்றம் இதற்கான விளக்கத்தை கொடுத்தே தீர வேண்டும்....
பிரதமர் மீதோ ஜனாதிபதி மீது வழக்கு தொடுக்கக்கூடிய நிலையில்
ஜனாதிபதியை கேள்வி கேட்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த நீதிபதியின் மீது வழக்கு தொடுக்க முடியுமா......
டெல்லியில் பல கோடி ரூபாய் சிக்கிய நீதிபதியின் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.....
என பல அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து இந்திய நீதித்துறையின் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி.......
பூனைக்கு மணிக்கட்ட ஆள் இல்லை என்று நினைக்க வேண்டாம் நான் இருக்கிறேன் என்று வந்திருக்கிறார்.......
இந்திய நீதித்துறையின் மீதான ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.....
https://x.com/TimesAlgebraIND/status/1912815804233417000?s=08
இன்றைய 18-4-2025, தினமலரில்:
••••
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள முன்னாள் செய்தி தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: தமிழக மசோதாக்களை நிறைவேற்றி தராமல் தாமதப்படுத்தியதாகவும், மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கலாம். அதன் அடிப்படையில், மசோதாக்களை ஜனாதிபதி நிறைவேற்றி தருவதற்கு வழி வகைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை அறிவுறுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்கு இந்த தீர்ப்பு என்று புரியவில்லை.�
தி.மு.க., கொண்டாடிட்டு இருக்கும் தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்லி, 'இனி தி.மு.க., சகவாசமே வேண்டாம்'னு முடிவு பண்ணிட்டாரோ?
#குடியரசுதலைவர்
#ஆளுநர் #உச்சநீதிமன்றம்
#PresidentofIndia
#Governor
#SupremeCourt
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-4-2025
No comments:
Post a Comment