#திமுக முதல்வர் ஸ்டாலின்,
தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசசை எதிர்த்து போராடும் வேடிக்கைகள்
———————————————————-
முதல்வர் ஸ்டாலின் தென் மாநிலங்களை ஒன்றிணைந்து மத்திய அரசசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் பாணியில் வழக்கம் போல முழங்குகிறார். தனக்கு வயிற்று வலி வரும் போதெல்லாம் இப்படிக் கூப்பாடு போடுவது தான் அவர்களது வாடிக்கை!
மத்திய அரசு சொல்வது செயல்படுத்தவிரும்புவது இந்தித் திணிப்பு என்பதல்ல! அது தெளிவாகவே மத்திய அரசால் முன் வைக்கப்படுகிறது. இந்தியாவில் பேசப்படும் எந்த ஒரு மாநிலத்தின் மூன்றாவது விரும்பும் எந்த மொழியையேனும் பிராந்திய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது பண்பாட்டு கலாச்சார ஒற்றுமைக்கும் புலம்பெயர்ந்து வேலை செய்யும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கும் தானே தவிர அதை வெறுமனே திமுக இட்டு கட்டி சொல்வது இந்தித் திணிப்பு என்று முடிவு செய்யக்கூடாது என்று மிகச் சரியாகவே மத்திய அரசு முன்வைக்கிறது.
ஏதேனும் ஒரு மூன்றாவது மொழி! அவ்வளவுதான்! அதை விட்டுவிட்டு திமுக வழக்கம்போல மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கிறது என்று பொதுவில் மையப்படுத்துவது அவர்கள் காலகாலமாகப் பேசி முரண்படுத்தி வரும் தங்களது அரசியல் அதிகார ஆதாயத்திற்கு தான் ஒழிய இதில் என்ன அவர்களுக்குச் சங்கடம் இருக்கிறது . ஏதோ தாய்மொழியே வேண்டாம் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் நிர்பந்தப்படுத்துவது போலப் பிரச்சாரம் செய்கிறார்கள்
அதேபோல் ஜிஎஸ்டியை தர மறுக்கிறார்கள் என்று சொல்வதும் பச்சை பொய்! ஏறக்குறைய தமிழ்நாடு செலுத்தும் ஜிஎஸ்டி வரி வருவாயில் 72% திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். மத்திய சர்க்கார் க்கு செல்லும் 50 சதவிகித வரியில் 20சதவீதம் வரி இவர்களுக்கு திரும்பி வந்துவிடுகிறது அதை மறைத்து சத்தம் போடுகிறார்கள்.
மத்திய அரசிற்கு எத்தனை நிர்வாக பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அறியாமல் கூச்சல் போடுகிறார்கள். விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை அயல் நாட்டு துறை ஏற்றுமதி இறக்குமதி அந்நிய முதலீடுகள் எல்லைப் பாதுகாப்புகள் என்று பல்வேறு காரியங்கள் இருக்கிறது.
இத்தகைய நுணுக்கமான பிரச்சனைகள் இருப்பதை எல்லாம் அறியாத மாதிரி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
அதேபோல டீ லிமிடேஷன் என்ற தொகுதி வரையறை குறித்த எந்த உத்தரவும் தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை.
அதுபோக போன தேர்தல் வாக்குறுதியிலேயே #மதுவிலக்கு கொண்டு வருவோம்! பழைய அரசு ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருவோம்! விலைவாசியைக் குறைப்போம் என்றெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது திராவிடக் கழக வீரமணி அவர்களுடன் கறுப்புக் கொடி பிடித்து கும்பலாகச் சேர்ந்து போராடினார்கள்.
ஏதோ நாளைக்கே ஆட்சியைப் பிடித்து அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து விடுவது போல தங்களின் வீட்டுக்கு முன்னால் கோஷமிட்டார்கள்! அவர்கள் ஆட்சியில் நான்கு வருடம் கடந்து விட்டது!அதேபோல் அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்திற்காக முதல்வரும் அவரது தங்கையுமான கனிமொழியும் மேலும் கீழும் குதித்து ஒரேடியாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் இவர்களின் கடந்த நான்கு வருட திமுக ஆட்சியில் நூற்றுக்கு மேலான காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன! இதற்கு என்ன பதில்! ஏறக்குறைய தமிழ்நாட்டில் தினமும் ஒரு கொலை நடப்பதாகக் கூறுகிறார்கள்! பேர்வாரியாக அதற்கான பட்டியலும் போடுகிறார்கள். இதைப் பற்றி சட்டமன்றத்தில் பேசும்போது முதல்வர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடக்கிறது
அதிகம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்!
தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்புச் செய்வோம் என்று அரசு அதிகாரிகளையும் தென் மாநில முதல்வர்களை அரசியல்வாதிகளையும் அழைத்துத் தனக்குச் சாதகமாகக் கூட்டம் நடத்தி புகழ் வெளிச்சம் பெறப் பார்க்கிறார்!இதற்கு முதல்வர் எந்தப் பணத்தைச் செலவழிக்கிறார்! தங்கள் கட்சிப் பணத்தையா!
#இந்திவேண்டாம்போடா! என்று சொன்னவர்கள் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறவர்கள் தங்கள் தொகுதியில் தேர்தல் நேரங்களில் பிரச்சாரத்திற்காக மட்டும் இந்தியில் எதற்குப் போஸ்டர் அடிக்கிறார்கள்! இவர்கள் பள்ளியில், குறிப்பாக #ஸ்டாலின்மகள்பள்ளியில்இந்தி மொழி பாடம் கற்று தரப்படுகிறது.
அது போக இந்தி தெரிந்தவர்கள் தான் திமுகவில் எம்பி சீட் கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இது என்ன விதமான பாணி என்று தெரியவில்லை!
இதேபோல்தான் #கலைஞர் 1970 களின் துவக்கத்தில் #மாநிலசுயாட்சி வேண்டும் என்று தென் மாநில முதல்வகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டி இருந்தார். போக காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சென்னைக்கு அழைத்து நாம் அனைவரும் இந்த மாநில சுயாட்சி விவகாரத்தில் ஒன்று போல் பேச வேண்டும் என்று
பிரேணனை செய்தார்! அதில் வேடிக்கை என்னவென்றால் பின்னாட்களில் ஜனாதிபதியான #பிரணாப்முகர்ஜி கூட காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து #பங்களாகாங்கிரஸ் என்ற ஒரு கட்சியைத் துவக்கி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏறக்குறைய 54 ஆண்டுகள் ஆகிவிட்டது மாநில சுயாட்சி வாங்கி விட்டார்களா! இல்லையே! அன்றைக்குக் காங்கிரஸ் அல்லாத மாநிலத் தலைவர்கள் எல்லாம் சென்னையில் வந்தது கூடித்தான் இருந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லையே!.
அதேபோல் கர்நாடகாவில் #ராமகிருஷ்ணஹெக்டே இதேபோல சுயாட்சிக் கோரிக்கைகளை வைத்து பெங்களூரில் ஒரு கூட்டம் நடத்தினார். அதுவும் ஒன்றும் இல்லாமல் போனது. அதேபோல் #எம்ஜிஆரும் கன்னிமாரா ஓட்டலில் வைத்து தென் மாநில முதல்வர்களை அழைத்துப் பேசினார்! அதேபோல #என்டிஆர் விஜயவாடாவில் வைத்து காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை மாநில சுயாட்சிக் கோரிக்கைக்காக நடத்தினார். அதேபோல் மாநிலங்களுக்கு அதிக உரிமை கேட்டு கேரளாவிலும் பேசினார்கள். அதையே மறுபடியும் தமிழ்நாட்டில் இன்றைய முதல்வர் கூட்டி நடத்தி விட்டால் மாநில சுயாட்சி நிறைவேறி விடுமா! இல்லை இவர்கள்தான் இந்த கூட்டணியில் எவ்வளவு நாள் தாக்குபிடிப்பார்கள்!
இப்படி எல்லாம் மாநில உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்! தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மாநிலப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு பிறகு தானே சுயாட்சிகள் பற்றிப் பேச வேண்டும்! முல்லையாறு உட்பட #நெய்யாறு வரை சுமார் #பத்துநதிநீர்ப்பங்கீடுகளைத் தங்களுக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா! உங்கள் நலக் கூட்டணியில் இருக்கும் சேட்டன் பிரனாய்ராயுடன் பேசி நீங்கள் தமிழகத்திற்கு இவ்வாறு நன்மை செய்ய வேண்டும் என்று பேசி முடிக்க வேண்டாமா! முதலில் கேரளாவுடன் தண்ணீர்க்கான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்! பாவம் தமிழ்நாடு என்று தென்னிந்தியக் கூட்டணி சார்பாக அதைச் செய்ய மாட்டாரா கேரள முதல்வர்?
அதுபோக பசுமைத் தீர்ப்பாயம் தவறு என்று தீர்ப்பு சொன்ன பிறகும் நேற்றுக் கூட #கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லைகளில் இன்னமும் கொட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்!
#கர்நாடகாவில் உங்கள் காங்கிரஸ ஆள் தானே #சீதாராமையா இருக்கிறார். அவரிடம் சுமுகமாகப் பேசி
#காவேரிப்பிரச்சனை #தென்பெண்ணைப்பிரச்சனை #ஒகேனக்கல்பிரச்சனைகளைத் தீர்த்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
பிறகு தென் மாநில முதல்வர்கள் என்கிற பெயரில் எதற்குக் கூடுகிறீர்கள்! ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்காகக் கூடுகிறீர்களா? இல்லை நாட்டு நலனுக்காக மக்களுக்காகக் கூடுகிறீர்களா?
இந்த மொத்த கூட்டமும் தமிழக முதல்வர் ஸ்டாலினுடைய விளம்பரத்துக்காகத்தான் அல்லது அவர் ஆட்சியை தக்க வைக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது இல்லையா!
தமிழக எம்பிக்கள் இங்கிருக்கும் போது #இந்திஎதிர்ப்பு, #தொகுதிமறுசீரமைப்பிற்குஎதிர்ப்பு ,என்று ஒரு பேச்சு! டெல்லிக்குச் சென்றால் அங்கே பிஜேபி அமைச்சர்களுடன் தொடர்புகள்! இதற்கு உதாரணம் முதல்வரின் தங்கச்சி #கனிமொழி முதலாவது இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பிஜேபி அமைச்சர்களை (அன்றைக்கு உயிருடன் இருந்த அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தான் அந்த உபயத்தை செய்தார்.) பெரிய type தனியாக பங்களா வீடு ஒன்றை வாங்கிக் கொண்டார். மூன்று தடவை எம்பி ஆக இருந்தவர்களுக்கு எல்லாம் பெரிய வீடு கொடுக்க மாட்டார்கள். வைகோ இப்போது ஆறுவது முறை எம்பி ஆன பின் தனி பங்களாவில் இருக்கிறார். கனிமொழிக்கு மட்டும் விதிகளை மீறி எப்படி தனி பங்களாவில் பத்து வருட முன்பே கிடைத்து எப்படி⁉️பாஜக அமைச்சரின் நட்பு…..
இப்படியான பழக்க வழக்கங்கள் எல்லாம் அங்கே இவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு எம்பிக்கள் தங்களுக்கு வேண்டிய காரியங்களுக்கெல்லாம் பேப்பரில் எழுதிக் கொடுத்து டெல்லியில் சாதித்துக் கொள்கிறார்கள்.
இங்கே வந்து பாஜக மதவாதம் மதவாதம் ஒழிக என்று சத்தம் போட்டுக் கொண்டு அங்கே போய் நீங்கள் நன்றாக நாடாளுமன்றத்தை நடத்துகிறீர்கள் என்று பிஜேபிக்கு புகழாரம் சூட்டுகிறார்கள்! எதற்கு அந்தப்புகழாரம்! தங்களுக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்ள தானே! மத்திய அரசு என்றால் கிள்ளுக் கீரை போலப் தமிழகத்தில் வைத்து மட்டுமே பேசுவது. அங்கே போனால் சட்டியை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொள்வது!
#பிஜேபி பிஜேபி மதவாதம் என்று கத்திக்கொண்டு அங்கே போய் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கும்போது நீங்கள் சரியான முறையில் ஆங்கிலத்தில் ஒரு வீரப் பெண்ணாக ஜேன் ஆஃப் ஆர்க் போல நிதித் துறையில் புகழ்பெற்றிருக்கிறீர்கள் என்று வாழ்த்துவது! அப்புறம் இங்கே வந்த பிறகு அதே #நிர்மலாசீதாராமனை பிராமணியப் பெண் ஐயர் என்று சாடுவது! ஊறுகாய் மாமி என்னையா உங்களுடைய நாடகம்! அதுதான் கேட்கிறேன்!நீங்கள் தென் மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்! உங்கள் விளம்பரத்திற்காக உங்கள் மாநிலங்களில் உங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையாவது எதிரிபடுத்திச் சொல்ல வேண்டும் என்பதைத் தவிர இதில் வேறு என்ன நோக்கம் இருக்கிறது?!
கேரளாவில் “#எம்பரான்” என்று ஒரு திரைப் படம் எடுத்திருக்கிறார்கள்! அதற்கு எதிர்வினை வைத்தால் தப்பு என்று சொல்கிறார் #பினாராய்விஜயன்! அதில் எதற்கு #முல்லைப்பெரியாறு பிரச்சனையை மறைமுகமாக் கொண்டு வருகிறார்கள்!? அதற்கு ஏதாவது தமிழ்நாட்டில் இருந்து அறிக்கை விட்டீர்களா!? கேரளா மூலம் தமிழ்நாட்டுக்கு அனேகப் பிரச்சனைகள் இருக்கிறது! அட்டப்பாடி முதற்கொண்டு சில பகுதிகளில் ரேஷன் கார்டுகள் எல்லாம் கொடுக்கிறார்கள்! அதற்கு ஏதாவது நீங்கள் செய்யப் போகிறீர்களா! கேட்கப் போகிறீர்களா!? அதேபோல் ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை! அதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா!?
இதையெல்லாம் விட்டுவிட்டு தென் மாநில கூட்டணி என்கிற பேரில் முதல்வர்களை வைத்து பேசி க்கொண்டு மக்களைக் கண்துடைப்பு செய்கிறீர்கள்! அந்த கூட்டத்தில் ரெவல்யூஷன் படி ஒரு தீர்மானமும் உறுதியாக இதுவரை எடுக்கப்பட இல்லை! மாநிலங்களுக்கான பிரச்சினைகளுக்கு இதுவரை எத்தனை நீதி விசாரணைகள் போட்டும் தாவாக்கள் அளித்தும் இதுவரை அதற்கான உறுதியான நடவடிக்கைகள் இருக்கிறதா!?
அதையெல்லாம் முதலில் தீர்மானித்து நிறைவேற்றிவிட்டு பிறகு இந்தி எதிர்ப்பு மாநில சுயாட்சி என்றெல்லாம் பேசுங்கள்!? ஏறக்குறைய உங்கள் கோஷங்களின் மூலம் இந்தியை விரும்பிப் படிப்பவர்களை கூடக் கெடுத்து விட்டீர்கள்! 1960 -70 ஜெனரேஷன்களை இப்படித்தான் நீங்கள் வெகுவாகப் பாதித்திருக்கிறீர்கள்! மாநில சுயாட்சியா! உங்கள் சுய லாபமா!? பதில்ச் சொல்லுங்கள்! கட்டுச் சோற்றுக்குள் எலியை வைத்துக்கொண்டு சுமந்து போகும் கதை தான்! கட்டிய மூட்டையில் கோலிக் குண்டுகள் சளசளக்கத்தான் செய்யும்!
மறுபடியும் நீட்டை திமுக பேச ஆரம்பித்து விட்டது. 2021 இல் ஆடசிக்கு வந்த உடனே நீட்டு, மது விலக்கு முதல் கையெழுத்து என்றார்கள். கடந்த நான்கு வருடமாக கையெழுத்து ஆக வில்லை. ஏமாற்றம்தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மறுபடியும் மக்கள் முட்டாள்கள் என்று நினைத்து திரும்பவும் ஏமாற்ற நீட்டை பேச ஆரம்பித்து விட்டனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்து "நீட் தேர்வு ரத்து" என்ற ஒரே மாவை சளைக்காமல் 4 வருடமாக அரைத்துக் கொண்டிருக்கும் திரு.@mkstalin -இன் நீட் நாடகம் இனியும் தமிழக மக்களிடம் எடுபடாது!
#நீட் #இந்திதிணிப்பு #hindi
#neet2025
#DMKFailsTN
#stalin
#திமுக
#தொகுதிமறுவரைறை
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-4-2025
No comments:
Post a Comment