#*தகுதியே தடை*
*நான் பார்த்த அரசியல் இதுதான்*…
———————————
இங்கு அரசியல் என்ன நிலை,
ஓட்டுக்கு பணம் Vote for sales
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் ஆதிக்கம், ஊழல் என்பது இன்றைய ஜனநாயகம் இங்கு
கட்சிகளின் கேவலமான அரசியலில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்ல.
எந்த அரசியல் கடசியிலும் தீவிரமா இயங்கி உண்மையாய் உழைக்கிறேன்னு இளமைகளை தொலைத்து விடாதீர்கள். திரும்ப கிடைக்காது.
இளமையை தொலைச்சேன்.. குடும்பத்துக்கான நேரம் செலவழிக்கல. பிள்ளைகளோடு விளையாடல. அவர்களை சரியா கவனிக்காமல் கட்சி கூட்டம்னு அலைஞ்சேன்..
ஆனால் ஒரு கட்டத்தில் கட்சிகள் பிராடு பயலுகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் கட்சிக்காரன் எவனும் எவனுக்கும் சளைச்சவன் இல்ல என்றும்
எந்த கட்சியிலும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லன்னு புரியுறப்ப நீங்கள் திரும்பி போக இயலாத தூரத்தை கடந்திருப்பீர்கள்.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்தவர்களாக அதி புத்திசாலிகளாக அரசியல் புரிதல் உள்ளவர்களாக செறிவான கருத்துகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் என்று எந்த திறமைகளை கொண்டிருந்தாலும் நீங்கள் அரசியல் அதிகாரத்துக்கு வருவதென்பது குதிரை கொம்பு தான்.
விதி விலக்குகள் இருக்கலாம்.
இது வரைக்கும் இருந்ததை விட இனி இருக்குற காலத்துல கூழை கும்பிடு கொத்தடிமைத்தனம் வாழ்க வாழ்க கோசம் போட்டு சுயமரியாதையை அடமானம் வைத்து பிழைப்புவாதம் செய்பர்களுக்கு மட்டும் தான் அரசியல் வாய்க்கும்.
அதிகாரத்துக்கு வர விரும்பல சும்மா அரசியல்கட்சி ஒன்றில் இருந்துக்குறேன் ஐடி விங்ல ஏதோ ஒரு பதவி வாங்கிக்கிறேன் வார்டு கவுன்சிலரா வட்டச் செயலாளரா
ஒன்றிய செயலாளரா இருந்தாலும் போதும்...இல்லன்னா அமைச்சர் எம்எல்ஏக்களின் அல்லக்கைகளா இருந்தால் போதும்.. இல்லன்னா கட்சியை வெச்சி ஏதோ ஒரு பிழைப்புவாதம் செய்பவர்களுக்கு ஓகே.
அதை விட்டுட்டு புரட்சி செய்ற கட்சியில் போறேன் புண்ணாக்கு செய்ற கட்சியில் போறேன்னு எவன் பின்னாடியும் போய் வீணாய் நிற்காமல் உங்க வேலையை நல்ல வருமானத்தை குடும்பத்தை பிள்ளைகளை கவனிப்பது உத்தமம்.
ஏன் சொல்றேன்னா இங்க மேடையில பேசுறது ஒண்ணு. ஆனால் செயல்பாடு முற்றிலும் வேறு.
மேடையில் புரட்சி புண்ணாக்கு எல்லா வெங்காயமும் பேசுவான். அரசியல் பூர்ச்சி புண்ணாக்குலாம் கேட்க நல்லாருக்கும். ஆனால் நடைமுறையில் அவன் சொந்த வீட்லயே கடை பிடிக்க மாட்டான்.
தமிழ் தமிழ்னு மேடையில என்னென்னவோ பேசுவான். வீட்ல தலைகீழா இருப்பான்.
சாதிமறுப்பு சமத்துவம் சமூகநீதி சுயமரியாதை எல்லாம் மேடையில் பேசுவான்.
ஆனால் கொத்தடிமையா இருக்கணும்னு எதிர் பார்ப்பான். வாரிசு அரசியல் இருக்கும் வரை இங்கே நியாயமான வாய்ப்புகள் எவனுக்குமே கிடைக்காது.
நீங்க யோசிச்சி பாருங்க. வாரிசுகள் தொடரும் வரை அங்க எவனுக்காவது வாய்ப்பு கிடைக்குமா?
இந்த தொகுதிகளில் கடைசி வரை வாழ்க வாழ்க மட்டும் தான்.
அவன் மனைவி மச்சான் எல்லாப்பயலும் கட்சிக்குள்ள தான். எவனும் கேள்வி கேட்க கூடாது இஷ்டம்னா இரு இல்லன்னா வெளிய போ என்பான்.
தாலியை அடகு வெச்சேன். ரோடு ரோடா வசூல் பண்ணேன். பந்தக்கால் நட்டேன்னு ஒப்பாரி வெச்சி எந்த பயனும் இல்லை.
முழுக்க முழுக்க வசூல் வேட்டை தான். பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்தவன் இன்றைக்கு வாழுற ஆடம்பர வாழ்க்கையை பாருங்க.
பின்னாடி திரிஞ்ச பல பேரு இளமையை எல்லாம் தொலைச்சிட்டு அரசியலில் காயடிக்கப்பட்டு விடப்பட்டவர்கள் தான்.
ஒரு கட்சி அட்டையை வெச்சிக்கிட்டு வாரிசுகளுக்கு தூபம் போட்டு வாழ்க வாழ்க கோசம் போட்டு நினைச்சதை பேச முடியாம எழுத முடியாம திக்கி திணறி வீணாப்போவதை விட
கட்சியின் தவறுகளுக்கு எல்லாம் முட்டுக் கொடுத்து அவமானப்படுவதை விட புடிச்ச கட்சிக்கு ஓட்டை போட்டுட்டு அரசியலில் தள்ளி நிற்பது உத்தமம்.
கட்சிகளுக்குள் கொஞ்சம் உள்ள இறங்கி பார்த்தீங்கன்னா உள்ளடி அரசியல் ரொம்ப கேவலமா தான் இருக்கும். அதுக்கு பதிலாக டீசன்டா ஒதுங்கி நிற்பது உத்தமம்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது என்று செலவு செய்தால் தான் மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்னும் ஒரு எண்ணத்தை பொதுமக்கள் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தினார்களோ அதே அரசியல் கோடிகளில் விளையாடும் திருவிழா ஆகிவிட்டது ஆக இங்கு சேவை என்பது போய்விட்டது பணம் மட்டும்தான் இருக்கிறது...
பணத்தை குறியாக வைத்து செய்யும் அரசியலுக்கு குலை கும்பிடுகள் தேவை வாழ்க கோஷம் தேவை அடிமை வேலை தேவை இதெல்லாம் இல்லாமல் சுயமரியாதையோடு அரசியல் செய்வேன் என்று சொன்னால் அப்படி ஒரு அரசியல் களம் இனி வரும் காலங்களில் யாருக்கும் கிடைக்காது..
பணம், வாழ்க கோஷம், கூளை கும்பிடு இதுதான் இன்றைய அரசியல் எல்லா கட்சியிலும் இதே நிலைதான் சில கட்சிகளில் அதிகமாக இருக்கும் சில கட்சிகளில் குறைவாக இருக்கும் அந்த ஒரு வேறுபாடு மட்டும்தான்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என சிலப்பதிகாரம் போதித்து நிற்கிறது.
எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக இளங்கோ அடிகள் அறம் கூற்றாகும் என்றார்.
அரசியல் பிழைத்தோர் என்று இளங்கோ அடிகள் சுட்டி நிற்பதற்குள் இருக்கக்கூடிய பேருண்மையை உணர்தல் அவசியம்.
அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் செய்வது. அரசியலில் இருந்து தான் நீதி, நியாயம், தர்மம் என்ற அனைத்தும் உற்பவமாகின்றன.
எனவே, அரசியல் ஒழுங்கற்றுப் போகுமாயின் அஃது மக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பண்பாட்டு விழுமியங்களையும் சிதைத்து விடும்.
அநீதி மேலேங்கும். அதர்மம் எழுந்தாடும். நன்மக்கள் துன்பப்படுவர். இஃது அழிவையும் அக்கிரமத்தையும் விளைவிக்கும்.
எனவேதான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சிலப்பதிகாரத்தினூடாக இளங்கோ அடிகள் வலியுறுத்தி நிற்கின்றார்.
இங்கு இளங்கோ அடிகள் மன்னராட்சியின் கால கட்டத்தில் நின்று இதனைக் கூறி யிருந்தாலும் ஜனநாயக ஆட்சியிலும் இளங்கோ அடிகள் செப்பிய அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற தத்துவம் சாலப் பொருந்துகிறது.
ஆம், ஜனநாயக அரசியல் என்பது முடியாட்சிக்கு மாற்றுத் தீர்வாக, மாற்றுத்தலை மையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அங்கும் பொய், புரட்டு, விசமப் பிரசாரங்கள், மக்களைத் தவறாக வழிப்படுத்துகின்ற மோசங்கள், ஊழல்கள், இலஞ்சங்கள் என ஏகப்பட்ட அதர்ம காரியங்கள் நடந்தாகின்றன.
இவ்வாறு அதர்ம காரியங்கள் நடக்கின்ற போதிலும் அவை அரசியலில் ஏற்றுக் கொள் ளப்பட்ட ஒழுக்கம் போல நினைக்கப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை. உண்மையில் தர்மம் என்பது அரசியலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு அரசியலில் அகிம்சையை, தர்மத்தை நிலை நிறுத்திய பெரியவர்களை இன் றும் நாம் நினைவுபடுத்துகின்றோம்.
ஆக, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற விடயத்தை ஒவ்வொரு அரசியல் வாதியும் தம்முள் ஆழப்பதிவு செய்ய வேண்டும்.
அரசியல் என்றால் அங்கு தந்திரமே முதன் மையானது என்று எவர் நினைக்கின்றாரோ அவர் தனக்கான எதிர்கால அழிவைத் திட்ட மிட்டு விட்டார் என்று பொருள் கொள்ளலாம்.
இன்று என்ன நிலை,
ஓட்டுக்கு பணம் Vote for sales
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது இன்றைய ஜனநாயகம் இங்கு
#தகுதியேதடை
நான் பார்த்த அரசியல் இதுதான்
#தகுதியேதடை
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-10-2024.