Thursday, September 25, 2014

நேஷனல் ஹெரால்டு’ திரும்ப வருகிறது!



நேஷனல் ஹெரால்டு’ திரும்ப வருகிறது!
------------------------------------------------------------------------------
‘நேஷனல் ஹெரால்டு’ நாளேடு திரும்பவும் வெளிவர இருக்கின்றது. ஆறு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த ஏடு, பிரபல பத்திரிகையாளர் சுமன் டுபே பொறுப்பேற்க வெளிவருகிறது. 1938இல் பண்டித நேருவால் துவக்கப்பட்ட இந்த ஏடு கடந்த 2008 வரை வெளிவந்தது. ‘நேஷனல் ஹெரால்டு’, லக்னோவிலிருந்து வெளிவந்த போது, 1942லிருந்து 1945 வரை ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. 1968க்குப் பிறகு டில்லி பதிப்பு துவங்கியவுடன், நடுநிலை போக்கிலிருந்து இப்பத்திரிகை தவறியது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்திரா காந்தி காலத்தில் இந்த ஏடு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கடந்த காலத்தில் குஷ்வந்த் சிங், மணிகொண்ட ஜலபதிராவ் போன்றோர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது இந்த நாளேடு.
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் வங்கி வைப்புத் தொகை தவறாகப் பயன்படுத்தப்பட்டது என சுப்பிரமணிய சுவாமி வழக்கும் தொடர்ந்துள்ளார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

பாசிஸ்ட் ராஜபக்சே, ஐ.நா.வில் தன் சுயரூபத்தைக் காட்டிவிட்டார்!

பாசிஸ்ட் ராஜபக்சே, ஐ.நா.வில் தன் சுயரூபத்தைக் காட்டிவிட்டார்!
------------------------------------------------------------------------
தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே, ஐ.நா. பொது அவையில் பேச இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தலைவர் கலைஞர் அவர்கள் தமிழர்கள் இல்லந்தோறும் கருப்பு கொடி ஏற்றுதல், கருப்புச் சட்டை அணிதல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அப்போராட்டம், நேற்று (25.09.2014) எழுச்சியோடு நடைபெற்றது.
ஐ.நா.வில் பேசிய ராஜபக்சே தன் சுயரூபத்தை காட்டும் வண்ணம், ஐ.நா.வையே சாடியுள்ளார். இப்படிப்பட்ட பாசிஸ்ட்டை அப்புறப்படுத்த உலக சமுதாயம் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

.-----------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாக்கிப் பேசியுள்ளார்! (முழுமையான உரை இணைப்பு)
---------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் இலங்கை நேரப்படி அதிகாலையில் உரையாற்றிய ஜனாதிபதி இலங்கை மீது மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணை ஒழுங்கற்ற வகையிலும் அரசியல் நோக்கிலும் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
போருக்கு பின்னர் இலங்கை துரதிஸ்டவசமான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில தேவையற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இலங்கை ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தமது நாடு இன்று குறைப்பாடான சமநிலை அடிப்படையில் நடத்தப்படுவதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.
இலங்கை மீது மேற்கொள்ளப்படும் வெளியக தலையீடுகள், நாடுகளின் கலாசாரம், சமூகம் என்ற கட்டமைப்புக்களை தகர்ப்பதை தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது அமர்வின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டமைக்காக மேன்மைக்குரிய சாம் குடேசா அவர்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். வெற்றிபெறுவதற்காக உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு முழுமையான ஒத்துழைப்புக்கு உறுதிவழங்குகிறேன்.
‘நிலைமாற்றக்கூடிய 2015இற்குப் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை வழங்குதலும், அமுல்படுத்தலும்,’ என்ற இந்த அமர்விற்கான கருப்பொருள் காலப்பொருத்தமானது. ஐ.நா. உருவாக்கப்பட்டதிலிருந்து உலகம் ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அத்தோடு 2000ஆம் ஆண்டிலிருந்து புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், நடவடிக்கை எடுக்க வேண்டிய பல சவால்கள் இன்னமும் உள்ளன. இந்த நோக்கத்திற்காக நியாயமான உலகையும், நிலைத்திருக்கக்கூடிய கோளையும் உருவாக்குவதற்கான ஒழுக்கநெறி மற்றும் நடைமுறை முக்கியத்துவம் புறக்கணிக்கப்படமுடியாது.
இலங்கை தற்போது தலைமை வகிக்கும் பொதுநலவாய அமைப்பு ஐ.நா உறுப்புரிமையில் கால்வாசிக்கும் மேற்பட்ட பங்கை வகிக்கிறது. 2015இற்குப் பின்னரான புதிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தும் நடைமுறைக்குப் பங்களிப்பதற்கு பொதுநலவாய அரச தலைவர்கள் நவம்பர் 2013 இல் கொழும்பில் இணங்கினர். அதியுச்ச வறுமையின் ஒழிப்பு, நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கான மீள உறுதிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மத்திய கவனக்குவியத்தை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
2015இற்குப் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கண்ணோட்டமானது பகிரப்பட்ட விழுமியங்கள், பொதுநலவாயப் பட்டயம் கொண்டிருந்த கொள்கைகள், தனிநபர் அனுபவங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. வரவிருக்கும் அரசாங்கங்களுக்கிடையிலான பேரங்களை நடுநிலையான 2015இற்குப் பின்னரான புதிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடையும் ஒருங்கிணைந்த உணர்வுடன் எதிர்கொள்ளுமாறு பொதுநலவாயத் தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளுக்கான திட்டக்குழு முன்வைத்துள்ள நிலைமாற்றக்கூடிய இலக்குகளில் நாடுகளுக்கு நடுவிலும் இடையேயுமுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் என்பது ஒன்றாகும். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் குரலையும், பிரதிநிதித்துவத்தையும் தீர்மானம் எடுத்தலில் மேம்படுத்துவதற்கு இந்த இலக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
2015இற்குப் பின்னரான நிகழ்ச்சி நிரலானது அமுல்படுத்தலில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அனைத்து நாடுகளினதும் அரசியல் விருப்பு, அர்ப்பணிப்பின்றி நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை அடைவது சாத்தியமற்றதாகும். 8ஆவது புத்தாயிரமாம் இலக்கான அபிவிருத்திக்கான பூகோள ஒத்துழைப்பானது அபிவிருத்தியடைந்த நாடுகளால் நிறைவேற்றப்படாமை திரும்ப ஏற்படுடாமலிருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
இலக்குகளைத் தீர்மானிக்கும் போது தங்களது சொந்த உள்ளூர் முன்னுரிமைகளை நிலைநிறுத்துவதற்கு நாடுகளுக்கு கொள்கை இடைவெளி கிடைக்காமலிருக்கக் கூடாது. நாடுகளை தங்களது உள்ளூர் செலவீடுகளை மீள-முன்னுரிமைப்படுத்துவதற்குக் கேட்பதை விட அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கிடையே பலப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புத் தொடர்பான கவனம் காணப்பட வேண்டும். திறன் வளர்ப்பிற்கு அவசிமான நிதி வளங்களையும், தொழிநுட்பத்தையும் அணுகுவதற்கு தெற்கிலுள்ள நாடுகளுக்கு இது அவசியமானதாகும்.
புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளின் அடைவினைத் தடுத்த நியாயமற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு விதிகள் போன்ற கட்டமைப்புத் தடங்கல்களும், அரசியல் இடையீடுகளும் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியமாகும். ஆதரவுமிக்க சர்வதேச பொதுளாதார சூழலொன்றின் உருவாக்கம், பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளிருந்து உள்பட்டதான மேம்படுத்தப்பட்ட முதலீட்டுப் பாய்ச்சல்கள், ஒரு திறந்த பல்தரப்பு வணிக அமைப்பு ஆகியன முக்கியமாகும்.
இரண்டு உலகப்போர்களுக்குப் பின்னராக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்ட வரலாற்றுத் தறுவாயை நாங்கள் அனைவரும் அறிவோம். அது காணப்பட்ட ஏழு தசாப்தங்களில் இன்னொரு பூகோளப் போரிற்குச் செல்வதிலிருந்து உலகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கு நோய்களை இல்லாதொழிப்பதற்கு, சிறுவர்களுக்குக் கல்வியூட்ட, சமாதானத்தை நிலைநாட்ட ஆகியவற்றில் ஐநா உதவியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்தாபக நோக்கினை மீள உறுதிப்படுத்துவதற்கு உலகச் சமூகம் வருடத்திற்கு வருடம் செப்ரெம்பரில் ஒன்றுசேர்ந்து வருகிறது.
சர்வதேச சமாதானம், பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு ஐ.நா.வின் பங்கு இந்த தற்கால உலகிற்கு அத்தியாவசியமானது. எனினும் சர்வதேச சமூகம் முழுவதினதும் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் வெற்றிகொள்ளுவதற்கு தேர்வுகள், பாகுபாடுகள் பற்றிய புலக்காட்சிகள் எவையுமின்றி நியமங்களின் தொடர்ச்சியான தன்மை சபையிடம் காணப்படுதல் என்பது அவசியமான தேவைகளில் ஒன்றாகும்.
இந்தத் தறுவாயில் தான், தற்போதைய இயங்கும் அமைப்பு அதன் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு புதிய பரீட்சிப்பு அவசியமானது.
சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள பிரச்சினைகளின் சிக்கல்தன்மையைப் பற்றிய புரிதல் அல்லது ஏற்றுக்கொள்ளல் இன்றி உள்நோக்கங் கொண்ட நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்துவதற்கான கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் அனைவராலும் மனித உரிமைகள் ஒரு நன்னெறி, நன்னடத்தைக் கோட்பாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டுமே தவிர, அரசியல் கருவியாக அல்ல. நாடுகளின் சமூக, கலாசாரப் பாரம்பரியங்களின் அமைப்புக்களைப் போதியளவில் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் வெளிப்புறத் தலையீடானது தவிர்க்க முடியாத முடிவாக நிலைகுலைதலிலேயே நிறைவடையும். உலகின் பல்வேறு பகுதிகள் இன்று இதற்கு மிகுந்த ஆதாரமாக உள்ளன.
மீள்புனரமைப்பு, புனர்வாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றில் இலங்கையானது 5 வருடங்கள் என்ற சிறிய காலப்பகுதியில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் தொடர்பாக மிகக்குறைவான கவனத்தைச் செலுத்தும் சிலரால் தவறாகப் புனையப்பட்ட நிகழ்ச்சி நிரல்களினால் துரதிஷ்ரவசமான பாதிப்படைந்ததாக போருக்குப் பின்னைய இலங்கையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாறியுள்ளது. கணிசமான இந்த அடைவுகளைப் புறக்கணித்துக் கொண்டு எனது நாடு இன்று இலக்காகியுள்ளதில் சமநிலையும், விகிதாசாரமும் குன்றிய தன்மை வெளிப்படையானது. மனிதாபிமான அவசரநிலைமை கொண்ட ஆழ்ந்த குழப்பமிகுந்த நிலைமைகள் காணப்படும் ஏனைய பகுதிகளுக்கான அணுகுமுறைக்கு இது முற்றிலும் முரணானதாகும்.
பன்முகச்சார்பியம் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டதாகவும், செயற்திறனுள்ளதாகவும் காணப்பட, சம்பந்தப்பட்ட நிறுவகங்களின் சீரமைப்பு அத்தியாவசியமானது. வெற்றிகரமாக அமைவதற்கு இந்த நடவடிக்கையானது ஐ.நா அமைப்புக்கள், பொறிமுறைகளின் அரசியல் நீக்கத்தோடு, வேறு வேறு வகையான நிதி வழங்கலின் பணையக்கைதியாக இருப்பதை நிறுத்துவதையும் கொண்டிருக்க வேண்டும். கலந்துரையாடல், நிலைமைகளின் சிறப்பான புரிதல், தேசிய நிறுவகங்களைப் பலப்படுத்துவதற்கு உதவுதல் உட்பட ஒத்துழைப்பு மூலமாக அரசாங்கங்களுடன் பணிபுரிவதற்கு ஐ.நா அமைப்புக்கள் வழிகளைக் கண்டறிய வேண்டும். பலவந்தப்படுத்தும் உத்திகளுக்குப் பதிலாக இந்த அணுகுமுறையானது பூகோள சவால்களுக்கான நிலைத்திருக்கக்கூடிய தீர்வுகளுக்கான தேடலாக பல்தரப்பு இராஜதந்திரத்தின் பிரதான புள்ளியை உருவாக்க வேண்டும்.
2015ம் ஆண்டில் ஐ.நா இன் 70வது வருடமானது பூகோளத் தலைவர்கள் பாதுகாப்புச் சபையின் ஆரம்ப சீர்திருத்தத்திற்கு ஏற்றுக்கொண்ட 2005ம் ஆண்டு உலக உச்சிமாநாட்டின் 10வது வருடப் பூர்த்தியையும் குறிக்கிறது. இதுசம்பந்தமான உறுதியான முடிவுகள் அடுத்த ஆண்டில் அடையப்படல் வேண்டும்.
காலநிலை மாற்றமானது எங்களது காலத்தில் காணப்படும் முக்கியமான சவால்களில் ஒன்றாகும். திடமான பூகோள பதில் நடவடிக்கையானது 2015ம் ஆண்டிற்கு முன்னர் கிடைக்கப்பெற வேண்டுமென்பதோடு, அது நெறிமுறையினதும், பொதுத்தன்மைக் கொள்கையின் அடிப்படையிலும், ஆனால் வேறு வேறாக்கப்பட்ட பொறுப்புக்களின் அடிப்படையில் காணப்பட வேண்டும்.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள வன்முறை மிகவும் வேதனை தருகிறது. இறையாண்மை மிக்க, சுதந்திரமான, ஈடேறக்கூடிய, ஒற்றுமையான பலஸ்தீன தேசத்தின் விரைவான சாத்தியப்பட்டிற்கான இலங்கையின் ஆதரவை நான் மீள வலியுறுத்துவதோடு இது பாதுகாப்பான, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளோடு, இஸ்ரேலோடு அருகில் சமாதானமாக அமைய வேண்டும். ஐநா இல் பலஸ்தீனத்தை முழு உறுப்பினராக விரைவில் வரவேற்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.
ஆசியாவிற்கும், ஆபிரிக்காவிற்குமிடையே கூட்டு ஒருமைப்பாடு தேவைப்படுகிறது என்பதில் இலங்கை உறுதியாக நம்புகிறது. சமூக – பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான ஆபிரிக்க மக்களின் முயற்சிகளைக் கண்டு மெச்சுகின்ற நிலையில் திறன் வளர்ப்பிலும், முக்கியமான துறைகளில் அறிவு, வல்லமை பரிமாற்றலுக்காகவும் ஆபிரிக்காவிலுள்ள நாடுகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஆரம்பித்துள்ளது.
தீவிர கோட்பியல்களிலிருந்து உருவாகி தேசிய எல்லைப்புறங்கள் வழியே மக்களைப் பாதிக்கும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான பல்தரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.
பூகோளம் முழுவதிலுமுள்ள தேசங்களின் பாதுகாப்புக்கும் உறுதித்தன்மைக்குமான கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் தொடர்ந்தும் காணப்படுகிறது. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி துன்புற்ற நிலையில் ஜனநாயகப் பாரம்பரியம், உயர் சிந்தனைகள் வழி உருவாக்கப்பட்ட சமுதாயங்கள், சமூகங்கள், நிறுவகங்கள் ஆகியவற்றில் பயங்கரவாதம் செலுத்தும் சடுதியான பாதிப்புக்களைப் பற்றி இலங்கை நன்றாக அறியும். சர்வதேச பயங்கரவாதம் மீதான ஐநா விரிவான மாநாட்டின் விரைவான இறுதியாக்கம், ஏற்றுக்கொள்ளல் உட்பட பயங்கரவாதம் மீதான பல்தரப்பு நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் பலப்படுத்த வேண்டும். பயங்கரவாத நிதியளிப்பு, கடற்கொள்ளை, ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச குற்றங்களின் அனைத்து வகைகளையும் எதிர்கொள்வதற்குமான பல்தரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கெதிரான ஒருதலைப்பட்சமான பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை ஆழ்ந்த கரிசனத்தை வெளிப்படுத்துவதோடு கியூபாவிற்கெதிரான நீதியற்ற பொருளாதார, வர்த்தக, நிதித் தடையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஐநா பொதுச்சபைக்கான கோரிக்கையின் தொடர்ச்சியான ஆதரவாளராக இருந்து வந்துள்ளது. இந்த வகையான ஒருதலைப்பட்சமான தடைகள் நாட்டின் அப்பாவிப் பொதுமக்களைப் பாதிக்கும் என்பதோடு அவை நெறிமுறையற்றவை.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கையானது அநேகமான புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துள்ளது. 2013 மனித அபிவிருத்திச் சுட்டியில் ஏனைய தெற்காசிய நாடுகளை முந்திக்கொண்டு தரவரிசைப்படுத்தப்படுவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது.
தேசிய அபிவிருத்தி உபாயமான மஹிந்த சிந்தனை ‘எதிர்காலத்திற்கான தூரநோக்கு’ பின்பற்றப்படுவதன் மூலமாக இலங்கை அரசாங்கமானது அனைத்தும் உள்ளடங்கிய மற்றும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பேரியல் பொருளாதார முகாமைத்துவம், விவசாயத்தின் புத்துயிரளிப்பு, வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானநிலையம், வடிகாலமைப்பு மற்றும் நீர் விநியோகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பலமான தொலைத்தொடர்பு வலையமைப்பு, சிறப்பாக விநியோகிக்கப்பட்ட கிராமிய மற்றும் நகரிய அபிவிருத்தி ஆகியன 2013 இல் 7.8 வீதம் தனிநபர் மொத்த வருமான வளர்ச்சியிலும் தனிநபர் வருமானமாக 3,280 ஐ.அமெரிக்க டொலர்கள் ஆகியவற்றை விளைவாகத் தந்துள்ளன. வடக்கில் உட்கட்டமைப்பிலும் வாழ்க்கைத் தொழில்களும் மேற்கொள்ளப்பட்ட பாரிய முதலீட்டால் ஆதரவளிக்கப்பட்ட வடக்கின் பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாடும் இந்த வளர்ச்சியில் பங்களித்துள்ளது என்பது ஆழ்ந்த திருப்தியைத் தருகிறது.
மே 2009 இல் பயங்கரவாதத்தின் முடிவினைத் தொடர்ந்து மக்களுக்கான எனது பொறுப்புக்களை நிறைவேற்றும் பொருட்டு ஒப்பீட்டளவில் குறைவான காலமாக 4 வருடங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய அளவிலான முரண்பாட்டிற்குப் பின்னரான புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட்டன. அதி முக்கியமானதாக வடக்கில் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீள உருவாக்கப்பட்டுள்ளன. 28 வருடங்களின் பின்னர் வட மாகாணசபைக்கான தேர்தல் செப்ரெம்பர் 2013 இல் நடாத்தப்பட்டது.
இந்தத் தறுவாயில் முரண்பாட்டின் முடிவைத் தொடர்ந்து ஒரு வாரங்களில் புதிய சமாதான யுகமொன்று உதித்திருந்த போது ஐநா செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தை நினைவூட்டுகிறேன். எனது நாட்டுக்கும் ஐநா இற்குமிடையிலான நெருக்கமான கூட்டுறவினையும் எதிர்காலத்தில் இணைந்து பணிபுரிவதற்கான எங்கள் அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துவதாக இது அமைந்தது.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களினதும் நன்மைக்கொத்தவாறு ஆழ்ந்த திருப்தி தருகின்றதும் மாற்றம் தரக்கூடியதுமான பயணமொன்றை நாங்கள் தொடர்கிறோம். இதை நிறைவேற்றும் போது ‘அனைவரை நோக்கியும் நட்பு, எவரையும் நோக்கிப் பகைமை இல்லை’ என்ற எங்களது பாரம்பரிய வெளிநாட்டுக் கொள்கைக்கேற்றவாறு நாங்கள் செயற்படுகிறோம். எங்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக எங்களது உள்ளூர் செயன்முறையான நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு சர்வதேச சமூகம் இலங்கைக்கு பரஸ்பர உணர்வையும் ஆதரவையும் வழங்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
குழப்பங்களிலிருந்து ஒழுங்கையும், சச்சரவுகளிலிருந்து ஒத்திசைவையும் நிறுவுவதற்கே அனைத்து மனித முயற்சிகளும் காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த கௌதம புத்தரின் வார்த்தைகளிலிருந்து நாங்கள் புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த வார்த்தைகளுக்கமைவாக தீய எண்ணங்களையுடைய விமர்சனங்களில் பாதிப்படையாதவாறு நல்லிணக்கம், தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதன் நோக்கத்தில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.
------------------------------------------------------------------------
From this speech, He proved - He is ''facist''
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Friday, September 19, 2014

ராஜபக்சே மாநாட்டில்

ராஜபக்சே மாநாட்டில்....
-----------------------------------------------------------------------------



தலைவர் கலைஞர் அவர்கள், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே ஐ.நா. பொது மன்றத்தில் உரையாற்றுவதை கண்டித்து தமிழர்கள் அனைவரும் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவித்த வேளையில், ராஜபக்சே கூட்டிய ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பி.ஜே.பி. பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமல் அக்கூட்டத்தைத் புறக்கணித்திருக்க வேண்டும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

இந்தியப் பல்கலைக் கழகங்கள் உலக தர வரிசையில் இல்லை

இந்தியப் பல்கலைக் கழகங்கள் உலக தர வரிசையில் இல்லை
-----------------------------------------------------------------------------------------


உலகப் பல்கலைக் கழக தர வரிசையில், 200 பல்கலைக் கழகங்களைக் கணக்கிடும்போது, இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக் கழகம் கூட அந்த தர பட்டியலில் வராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டெல்லிப் பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம், மும்பை பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக் கழகம், பரோடா பல்கலைக் கழகம், ஏன், இரவீந்திரநாத் தாகூர் நிறுவிய சாந்தி நிகேதன் என பல பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கீர்த்திப் பெற்றவை. இந்நிலையில் உலக தர வரிசையில் 200 பல்கலைக் கழகங்களில் இந்தியாவின் ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் வந்திருக்க வேண்டாமா? கி.பி.5ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக் கழகம், 800 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் நிறுவிய இந்த ஆண்டில், இந்தியாவின் ஒரு கலாசாலைகூட உலக தர வரிசையில் இடம் பெறாதது நம் அனைவருக்கும் தலைகுனிவான செய்தியாகும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மூதறிஞர் இராஜாஜியின் ‘சுயராஜ்யா’ ஏடு திரும்பவும் வெளிவருகிறது!

மூதறிஞர் இராஜாஜியின் ‘சுயராஜ்யா’ ஏடு திரும்பவும் வெளிவருகிறது!
-----------------------------------------------------------------------------------------------------------------



இராஜாஜியின் ‘சுயராஜ்யா’ ஆங்கில ஏடு, 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 58 ஆண்டுகளாக வெளிவந்த சுயராஜ்யா ஏடு ஜனநாயகத்தில், அரசியல் உரிமைகளை நெறிகளை வாதாடுகின்ற ஏடாக இருந்தது. 2015 ஜனவரியிலிருந்து அந்த ஏடு திரும்பவும் வெளிவர இருப்பதாக செய்திகள் வருகின்றன. சுயராஜ்யா ஏடு, கல்கி நிறுவனத்திலிருந்து பரதன் வெளீயிட்டகம் அச்சடித்து அப்போது வெளியிப்பட்டது. சுதந்திரா கட்சியின் நடவடிக்கைகளும், அக்கால பிரபல எழுத்தாளர்களுடைய கட்டுரைகளும் அதில் இடம் பெற்றன. பண்டித நேருவின் கொள்கைகளை அவ்வப்போது சுயராஜ்யாவில் விமர்சித்ததும் உண்டு. எளிதான நடையில் புரிதல் ஏற்படும் வகையில் வெளிவந்த இந்த ஏடு திரும்பவும் உயிர் பெறுவதற்கு நாம் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும். இராஜாஜியின் கருத்துகள் ஒரு சிலருக்கு மாறுபட்டிருந்தாலும், அவர் எடுத்து வைத்த பிரச்சினைகள், வாதங்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

இன்று ஸ்காட்லாண்டு தமிழ் ஈழத்திற்கு எப்போது வாக்கெடுப்பு?

இன்று ஸ்காட்லாண்டு
தமிழ் ஈழத்திற்கு எப்போது வாக்கெடுப்பு?




பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாண்டு பிரிவதற்காக, பொது வாக்கெடுப்பு (referendum) இன்று (18.09.2014) காலை 7 மணிக்கு துவங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும். பொது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. 40 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். தெற்கு எல்லையில் உள்ள ஸ்காட்லாண்டு மக்களில் ஒரு பகுதியினருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த பொது வாக்கெடுப்பின் முடிவு நாளை (19.09.2014) இரவு வெளிவரும். பெரும்பான்மையோர் ஸ்காட்லாண்டு பிரிட்டனிலிருந்து பிரிய வேண்டும் என்றே விரும்புகின்றனர். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஹபார்டி நகரில் ‘நமக்குள் பிரிவினை வேண்டாம்; ஒன்றுபட்டு இருப்போம்’ என கூறியுள்ளார். பிரிட்டனின் இராணி எலிசபெத் ‘நாட்டின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரேட் பிரிட்டன் என்ற அமைப்பில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாண்டு, அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் இருந்தன. பெரும் போராட்டடத்திற்கு பின் 1922இல் அயர்லாந்து தனி நாடாக பிரிந்தது. வடக்கு அயர்லாந்து மட்டும் பிரிட்டனோடு இருந்தது. 1653லிருந்து ஸ்காட்லாண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இங்கிலாந்தோடு இணைந்தது. 1707இல் கிரேட் பிரிட்டன் அமைந்தது. ஸ்காட்லாண்டு தனியாக பிரிய வேண்டுமென்று நீண்ட நெடுங்காலமாக குரல் கொடுத்த பின்பு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை உருவாக்கி, அதற்கு 2013 டிசம்பரில் ராணி எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார். அதன்படி ஸ்காட்லாண்டு பிரிவதற்கு பொது வாக்கெடுப்பு நடக்கின்றது.
370 ஆண்டு காலம் பிரிட்டனோடு இருந்த ஸ்காட்லாண்டு பிரிந்தால், பண பரிவர்த்தனை, இராணுவம், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியம், ஏனைய நிர்வாக அமைப்பிலும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதிருக்கும். யூரோ நாணயத்தை பயன்படுத்த முடியாது. பவுண்ட், ஸ்டெர்லிங்கை இங்கிலாந்து வங்கி உதவியுடன் ஸ்காட்லாண்டு பயன்படுத்த விரும்பினாலும் பிரிட்டன் இதனை எதிர்க்கும். சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லையென்றாலும், இந்தப் பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் 2016-ல்தான் தனி நாடாக ஸ்காட்லாண்டு அமையும்.
இந்த பொது வாக்கெடுப்பு குறித்து நடைபெற்ற கருத்து கணிப்புகளில், தனி நாடாக பிரிய வேண்டுமா அல்லது பிரிட்டனிலேயே தொடர வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இரண்டும் சமநிலைதான் என தெரிய வந்துள்ளது. ஆனாலும் பிரிவினை என்பது தடுக்க முடியாது என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஸ்காட்லாண்டு பிரிவினைக்காக பொது வாக்கெடுப்பு நடப்பது ஸ்காட்லாண்டு மக்களின் கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்றும் வகையில் நடக்கின்றது.
ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், இலங்கையில் ஈழத் தமிழர்கள் நலனுக்காக அரசியல் தீர்வுக்கான தமிழ் ஈழமோ, சுய நிர்ணய உரிமையோ அல்லது அவர்கள் விரும்புகின்ற தீர்வோ கிடைக்க பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் தயக்கம்? நீண்ட நாள் குரலாக ஒலித்தாலும், உலக நாடுகள் கண்டு கொள்ளாதது வேதனையை தருகிறது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

சீன - இலங்கை கமுக்கமான காரியங்கள்

சீன - இலங்கை கமுக்கமான காரியங்கள்.. ..
----------------------------------------------------------------------
சீன அதிபர் ஜீஜின்பிங் நேற்றைக்கு இந்தியா வந்து, அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். குறிப்பாக இரயில்வே, தொழில் பூங்காக்கள் இந்தியாவில் அமைய வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்திய வருகைக்கு முன்பு சீன அதிபர் ஜீஜின்பிங், இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 140 கோடி டாலர்களில் இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கவும், கொழும்புக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் செயற்கை தீவு அமைக்கவும் சீன அதிபரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். செயற்கை தீவு அமைப்பது, இந்து மகா சமுத்திரத்தின் அமைதிக்கு எதிராக அமையும். இப்படி பல முறை சீனா, இலங்கைக்கு கடன் வழங்கி, அந்நாட்டோடு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், தைவான், திபெத் பிரச்சினைகள் மட்டுமல்லாது, பல பிரச்சினைகளிலும் சீனாவுக்கு துணை நிற்போம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே சீன அதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களைவிட, இலங்கையுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் நோக்கத்தில் சீனாவின் அக்கறை அதிகமானதாகும். இந்த ஒப்பந்தங்கள் மூலமாக துறைமுகங்களும், செயற்கை தீவுகளும் அமைத்தல், திரிகோணமலையை சீனாவிடம் ஒப்படைப்பது, கச்சத்தீவு வரை சீனாவின் நடமாட்டம், வங்கக் கடலிலும், இந்திய பெருங்கடலிலும் வணிக ரீதியாக சில்க்வே அமைத்து சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி விடுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகின்றது. ஏற்கனவே எனது முகநூலில் 13.09.2014 அன்று குறிப்பிட்ட செய்தியை அப்படியே, நேற்றைய (17.09.2014) ‘இந்து’வில் கொழும்புவில் உள்ள அதன் செய்தியாளர் மீரா சீனிவாசன், இந்தியாவுக்கெதிராக தெற்கு கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகிவிடுமா என்ற வினாவை எழுப்பியுள்ளார். இலங்கையும் - சீனாவும் இந்தியாவுக்கு எதிராக கமுக்கமாக பல செயல்களில் ஈடுபட்டுள்ளன. இப்பிரச்சினையில் இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றதோ தெரியவில்லை.

ராஜபக்சே ஒபாமாவை சந்திக்கிறார்; சீன அதிபரை சந்திக்கிறார். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். இதனை கண்டிக்காமல் இருப்பது இந்தியாவின் ஆளுமையை கேள்விக்குறியாக்கி விடும். உலக புவி அரசியலிலும், பன்னாட்டுத் தொடர்புகளிலும் கடந்த காலங்களில், இந்தியாவின் பங்கு மகத்தானது. பஞ்சசீலம், அணி சேராக் கொள்கை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு ஏற்பட்ட கீர்த்தியை தற்போது விட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Tuesday, September 16, 2014

2001இல் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது


2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தலைவர் கலைஞர் அவர்கள் 21 இடங்களை ம.தி.மு.கவுக்கு ஒதுக்கியபோது, இதைத் தானே சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. சங்ககிரி, சேரன்மகாதேவி, சங்கரன்கோவில் தொகுதிகள் தான் பிரச்சினையாக இருந்தது. அதை சரிசெய்து, அத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், குறைந்தபட்சம் 18 இடங்களில் ம.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கலாம். இன்றைய தமிழக அரசியல் நிலைமையே மாறியிருக்கும். 1994இல் விடிய விடிய சென்னையில் நடைபெற்ற பேரணியும், கடற்கரை கூட்டத்திலும், அதே ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைபெற்ற நடைப்பயணம், செப்டம்பர் 15இல் முடிவுற்று, அண்ணா பிறந்த நாள் நிகழ்வு புல்லா ரெட்டி பூங்கா அருகே நடைபெற்ற நேரத்திலும், 1994இலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து கூட்டு இயக்கம் நடத்தியபோதும், பொடாவில் நீங்கள் கைது செய்யப்பட்ட பின்பும் எனக்கு முதல் எதிரி ஜெயலலிதாதான் என்று சொன்னீர்கள். திரும்பவும் அதை நேற்றைக்கு பூந்தமல்லியில் சொல்லியிருக்கிறீர்கள்.

2001இல் சரியான முறையில் முடிவெடுத்திருந்தால், நிலைமைகள் சரியாக இருந்திருக்கும். உங்களை தலைமையை ஆதரித்து பணியாற்றிய பல ஆளுமைகளின் அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகாமல் இருந்திருக்கும். 2001இல் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Sunday, September 14, 2014

நேற்று (13.09.2014) எனது முகநூலில் சீனா இலங்கை உதவியோடு தன்னுடைய வியாபாரத்திற்காக இந்தியாவைச் சுற்றி வங்கக் கடல் செய்தி





நேற்று (13.09.2014) எனது முகநூலில் சீனா இலங்கை உதவியோடு தன்னுடைய வியாபாரத்திற்காக இந்தியாவைச் சுற்றி வங்கக் கடல், இந்து மகா சமுத்திரம் மற்றும் தரை வழியாக சில்க் ரோடு அமைத்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். அதை இன்றைய ஆங்கில ‘இந்து’ நாளேடு உறுதிப்படுத்தி, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த போக்கு, நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விஷயமாகும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Thursday, September 11, 2014

கூடங்குளம் அணு மின் உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேற்று (10.09.2014) கலந்து கொண்டு பேசியது



கூடங்குளம் அணு மின் உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சியில்
நேற்று (10.09.2014) கலந்து கொண்டு பேசியது பின்வருமாறு:


அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈந்த தியாகிகளான மனப்பாடு அந்தோனி ஜான், கூடங்குளம் ராஜசேகர், இடிந்தகரை ரோசலின், சகாயம் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில், நண்பர் சுப. உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

கூடங்குளம் அணு உலை கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் ரிட் மனு தாக்கல் செய்தவன் என்ற தகுதி மட்டுமல்லாது, 1987 இறுதியிலும், 1988ல் ராஜீவ் காந்தி இத்திட்டத்தை ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தபோதே, இப்பகுதிக்கு வந்து களப்பணி ஆற்றியவன்.

இதனடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்களின் அனுமதியுடன் இந்த மேடையில் உள்ளேன். இதுகுறித்து, 123 என்ற தலைப்பிலானநூலையும் ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதியும் உள்ளேன்.

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதியில் இப்பிரச்சினை குறித்து களப்பணிக்கு வந்தபொழுது, எனக்கு நினைவுக்கு வருகிறது. ஓய்வுபெற்ற ஆசிரியர் முத்துகுமாரசாமி, தங்கம் துரைசாமி போன்றவர்கள் சந்தித்து பேசினோம். அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று தெரியுமா. அணு மின் நிலையம் அமைப்பதற்காக எங்களுடைய நிலத்தை, ஒரு ஏக்கர் ரூ.2,000/- விலைக்கு கேட்டார்கள் என்றும், அந்நிலத்தில் புளியமரம் இருந்தால் கூடுதலாக ரூ.100/- தருவதாகவும் சொன்னார்கள் என்று கூறினர். புளியமரத்தால் ஆண்டொன்றுக்கு ரூ.2,000/- வருமானம் கிடைக்கும். வாழ்வாதார நிலத்தை, அணு உலை அமைப்பதற்காக எப்படி தருவது என்றும் கூறினார்கள்.
அந்த காலகட்டத்தில் சிலர், பேச்சிப்பாறையிலிருந்து இப்பகுதிக்கு தண்ணீர் வரும் எனவும், தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் கடைசியில் பேச்சிப்பாறையிலிருந்து தண்ணீரும் வரவில்லை; அவர்கள் நம்பி இருந்த வேலை வாய்ப்பும் இல்லை.

ஆரம்ப காலத்தில் அணு உலை கூடாது என்பதற்காக டி.மத்தியாஸ், ஒய்.டேவிட், டாக்டர் சாமுவேல் அமிர்தன், டாக்டர் ஞான ராபின்சன் போன்றவர்கள் மட்டுமல்லாது, ஓவியா, பத்திரிகையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வம், யு.என்.ஐ. ரமேஷ் போன்ற பலரும் 1988 காலகட்டத்தில் நடத்திய பிரச்சார இயக்கங்களை மறக்க முடியாது. குறிப்பாக பத்திரிகையாளர் அம்பிராஜன், கோடகநல்லூர் பிரேமா நந்தகுமார், ஜி. பாலமோகன், டி. சிவாஜிராவ், தினமணி ஐராவதி மகாதேவன், புத்திகோட்டா சுப்பாராவ், தீரேந்திர சர்மா போன்றோரின் பங்களிப்பை மறக்க முடியாது. ஏ.எஸ்.பன்னீர் செல்வம் போன்றோர் ஜூனியர் விகடனில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கூடாது என தொடரை எழுதினார்கள்.

ராஜிவ் காந்தி இத்திட்டத்தை கொண்டுவர ரஷ்ய அதிபர் கோர்பசேவுடன் ஒப்பந்தம் போட்டார். பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்திய செர்னோபில் அணு உலை தொழில் நுட்பத்தில் இந்நிறுவனத்தையும் நிறுவ முயன்றதற்கு எதிர்ப்பும் இருந்தது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு ராஜிவ் காந்தி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்பட்ட எதிர்ப்பை கண்டு அருகில் உள்ள வடக்கன்குளம் வந்தவர், கூடங்குளம் வருவதை தவிர்த்தார். இவையெல்லாம் பழைய செய்திகள். நண்பர் சுப. உதயகுமார் தலைமையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. இப்போராட்டம், இந்தியாவை மட்டுமல்லாது அகிலத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.



எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள், 1989இல் ஆட்சிக்கு வந்தவுடன், சட்டமன்றத்தில் என்ன சொன்னார், கூடங்குளம் அணு உலை திட்டத்தில் மக்களிடம் அச்சம் உள்ளது. அதனை போக்கியபின் தான் திட்டம் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என குறிப்பிட்டார். தலைவர் கலைஞர் அவர்களின் இந்த கருத்தைப் பாராட்டி, அன்றைய தினமணியில் அதன் ஆசிரியர் நடுப்பக்கத்தில் எழுதினார். அதே நிலைப்பாட்டில்தான் இன்றைக்கும் கூடங்குளம் பிரச்சினையை அணுகுகின்றார். ஆனால் இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தூத்துக்குடியில் இப்பிரச்சினை குறித்து பேசும்பொழுது நான் உங்கள் சகோதரி, உங்களுக்கு துணை இருப்பேன் என்றார். சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்குப் பின் அவரின் நிலைப்பாடு என்ன? தற்போது சுப.உதயகுமாரை சந்தித்து பேசுவதையே தவிர்க்கின்றார். அப்போது நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிட்டு, இப்பொழுது மௌனம் ஏன்?

திரு. சுப.உதயகுமார் மற்றும் அவரது சகாக்கள் தலைவர் கலைஞர் அவர்களையும், தளபதி ஸ்டாலின் அவர்களையும் எனது முயற்சியினால் சந்தித்து இப்போராட்டம் குறித்து பேசினார்கள். அப்போது தலைவர் கலைஞர் அவர்களிடம், சுப.உதயகுமார், ஒன்று மற்றும் இரண்டு அணு உலைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், 3 மற்றும் 4 உலைகள் அமைக்க இருப்பதாக கூறுகிறார்கள். 3, 4 அணு உலைகள் கூடாது என்று விளக்கமாக சொன்னார். உடனே தலைவர் கலைஞர் அவர்கள், இதுகுறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேச கூறுகிறேன் என்று கூறினார். இது சுப.உதயகுமாருக்கு மகிழ்ச்சியை அளித்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் கூடங்குளம் வட்டார மக்கள் குறிப்பாக மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளவர். அவர் இங்குள்ள நிலைமை குறித்து அடிக்கடி என்னிடம் கேட்பார். அணு மின் நிலையத்தில் 1 மற்றும் 2 உலைகளில் மின் உற்பத்தி துவங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சரி, அங்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது? அது எங்கே செல்கிறது?
கடந்த 1995 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில் இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களில் 3,887 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். அவர்களில் 2,600 பேர் (70 சதவீதம்) புற்றுநோயால் உயிரிழந்திருக்கின்றனர். சுமார் 255 அணு சக்தி விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் தற்கொலை செய்து செத்திருக்கின்றனர். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 7.9.2014 அன்று தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.

நண்பர் சமஸ், தமிழ் இந்துவில், நெய்தல் நில மீனவர்கள் படும் பாடுகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னையிலிருந்து, கிழக்கு கடற்கரை வழியாக குமரி வரை, அதாவது வங்கக் கடற்கரை அருகில் வசிப்பர்கள் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர் எனவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். அணு உலையால் புற்றுநோயின் கொடுமை மிகவும் அதிகரிக்கும் என கூறுகிறார்.
கூடங்குளத்தைப் பொறுத்தவரை, மன்மோகன் சிங் அரசு தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கூடங்குளம் 3 மற்றும் 4 அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டது.

தரமற்ற உபகரணங்களும், உதிரிப் பாகங்களும் பொறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் முதல் உலை துவங்கியதாக சொல்லப்படும் அக்டோபர் 2013 முதல் இன்று வரை 30 கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கியிருக்கிறார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இவ்வளவு டீசலுக்கு என்ன தேவை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படிக் கேட்டால், பதில் சொல்ல மறுக்கிறார்கள். இந்த வாரத்திலும் ஒரு லட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிறார்கள்.

யுரேனியம் அதிகமாக உள்ள ஆஸ்திரேலியாவில் அணு உலை இல்லை. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளும் அணு உலைகளை கைவிடுகின்ற நிலைமை. அணு மூலம் மிகவும் குறைவான அளவே மின் உற்பத்தி உள்ளது. அதுவும் குறிப்பிட்ட காலம் மட்டுமே செயல்பட முடியும்.

கடந்த மே 14, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இருவர் 70 டிகிரி வெப்பத்தினால் ஏற்பட்ட தீப்புண்களுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். நான்கு மாதங்களாகயும், அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இதே நிலைமைதான் கல்பாக்கத்திலும். புற்றுநோய்களும், எலும்பு நோய்களால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற கல்கி ஏடு பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஆதாரத்தோடு எழுதியது.
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு அறிக்கை, பேரிடர் மேலாண்மைத் திட்டம், இழப்பீடு ஒப்பந்தம் போன்ற அடிப்படைத் தகவல்கள் எதையும் தர மறுக்கிறார்கள்.

கூடங்குளத்திலிருந்து கேரளத்துக்கு அதிகமாக மின்சாரம் தரவேண்டும் என்று கோருகின்ற கேரள முதல்வர், அவர்கள் மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையம் கட்டிக்கொள்ள முன்வரவில்லை. இந்த அணுக் கழிவுகளை எங்கே புதைக்கப் போகிறார்கள். முதலில் கர்நாடக மாநில கோலாரில் புதைக்கப் போகிறோம் என்று கூறினார்கள். ஆனால் அங்கு ஏற்பட்ட பலத்த எதிர்ப்பின் காரணமாக கூடங்குளத்திலேயே புதைக்கப் போகிறார்கள். கேரளாவைப் போன்று கர்நாடமும் மின்சாரம் கேட்கின்றது. இதனால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பை இப்பகுதி மக்களால் எப்படி சமாளிக்க முடியும்? இதுகுறித்து பல வினாக்கள் எழுப்பியும் எந்த பதிலும் இல்லை.

ஜூன் 7, 2014 அன்று சிவசேனை கட்சியினரும், மராட்டிய மாநில பாரதிய ஜனதா கட்சியினரும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவதேகரை சந்தித்து கொங்கண் மண்டலத்தின் சூழலையும், தங்கள் மீனவர்களின் நலனையும் கெடுப்பதால் ஜைதாபூர் அணுமின் நிலையத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தனர். மும்பை நகரின் அருகேயுள்ள தாராப்பூர் அணுமின் நிலையம் கட்டப்படும்போது, மீனவ மக்களின் தொழில் பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் கூறியதையும், பின்னர் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கியதும் 10 கி.மீ. சுற்றளவுக்குள் மீன் பிடிக்கக் கூடாது என்று அவர்கள் தடுக்கப்பட்டதையும் அந்தக் குழு கோடிட்டுக் காட்டியது. இப்படி பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நடுநிலையோடு ஆக்கபூர்வமாக பார்க்க வேண்டும்.

இப்போராட்டம் அமைதியாக தொடர்ந்து நடக்கிறது. வீரம் செறிந்த நெல்லை மண்ணிலிருந்து சுதந்திரப் போர் துவங்கியது. எண்ணற்ற ஆளுமைகளும் அன்று ஆங்கில அரசை எதிர்த்தனர். போராட்டம் என்றாலே நெல்லை மண் என்று அனைவருக்கும் தெரியும். இவ்வட்டார வடபகுதியான கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம் மற்றும் வள்ளியூர் போன்ற பகுதிகளில் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியையே திரும்பி பார்க்க வைத்தது. அப்போது காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் இருபது விவசாயிகள் தங்கள் உயிரை தந்தனர். அதுபோல கூடங்குளம் போராட்டம் நெல்லையில் நடக்கிறது. இப்பகுதி மக்களின் நலத்தையே தவமாகக் கொண்டு போராடுகின்ற திரு.சுப.உதயகுமாருக்கும் அவருடைய தோழர்களுக்கும் பாராட்டைத் தெரிவிப்பதோடு, இப்போராட்டம் வெற்றி பெறும் என கூறி இன்னுயிர் ஈந்த தியாக சுடர்களுக்கு எனது வீரவணக்கத்தை சொல்லி உரையை முடிக்கிறேன்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Wednesday, September 10, 2014

கூடங்குளம் தியாகிகளின் நினைவுநாள்

இன்று(10.9.2014 ) கூடங்குளம் தியாகிகளின் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாட வாய்ப்புக்கிடைத்தது. தலைவர் கலைஞர் அவர்கள் கூடங்குளம் பிரச்சினையில்  சுற்றுசுழல் பாதிப்பால் அப்பகுதி  மக்கள் குறிப்பாக மீனவர்கள் பாதிப்பு அடையக் கூடாது என்று பல சமயம் கருத்து தெருவித்தார் என பேசினேன்.எனது விரிவான பேச்சு விரைவில் இத்தளத்தில் பார்க்கலாம்




Tuesday, September 9, 2014

திரும்பவும் கதை சொல்லி வெளிவருகிறது






திரும்பவும் கதை சொல்லி வெளிவருகிறது

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் திரு. கி.ரா. அவர்கள் ஆசிரியராகவும், நான் இணையாசிரியர் மற்றும் வெளியீட்டாளரகவும், திரு. கழனியூரான் அவர்கள் துணையாசிரியராகவும் பணியாற்றி கொண்டு வரப்பட்ட ‘கதை சொல்லி’ இதழ்,
கடந்த 1 1/2 ஆண்டுகளாக வெளிவரவில்லை.

இதற்கு காரணம் அடியேன்தான். பல்வேறு அரசியல் பணிகளாலும், 42 ஆண்டுகள் அரசியலில் ஏற்பட்ட அனுபவங்களாலும், நன்றி என்ற அங்கீகாரம் இல்லாததாலும் ஏற்பட்ட அலுப்பின் காரணமாக, கதைசொல்லி வெளியீடு வேலை மட்டுமல்லாமல், பல்வேறு பணிகளும் முடங்கிவிட்டது. 

கடந்த காலங்களில் நமக்கு கீழ் பணியாற்றியவர்களும், நம் உதவியினால் வளர்ந்தவர்கள், பொதுவாழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல பொறுப்புகளில் வருவது வேதனை தருகின்ற அனுபவங்களாக இருந்தது.




சிலரை நம்பி, பயணித்ததினால் ஏற்பட்ட பின்னடைவு மட்டுமல்லாமல் அவமானங்களும்தான். உழைப்பை வாங்கிக் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். 

20 ஆண்டுகளுக்கு முன்னால் ஐ.நா.வில் பணி கிடைத்தும் அங்கு செல்லாததும், சகாக்கள் எல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகும் என்ற நிலை இருந்தும், எவ்வித மனக்கிலேசமும் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற கடமை இருக்கின்றது.

தகுதியே தடையாக இருக்கின்ற காலத்தில் போராளிகள் சிரமப்பட்டுதான் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை. இதை அனுதாபத்திற்காக சொல்லவில்லை. தகவலுக்காக சொல்லுகின்றேன்.


நதி நீர் இணைப்புக்காக 30 ஆண்டு காலமாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்குத் தொடுத்தும், கைதிகளுக்கு வாக்குரிமை கோரியும், சென்னை உயர்நீதி மன்றத்தில் கண்ணகி கோவில் தமிழகத்திற்கு சொந்தமென்றும் தமிழகத்தில் மேலவை அமைய, கூடங்குளம் சுற்றுச்சூழல் பாதிப்பும், சிவகாசி அருகே ஆலங்குளத்தில் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பால் விவசாயம் பாதிக்கப்படுவதும், தடுப்பு காவல் சட்டம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை கூடாது என்றும், 


ஈழத் தமிழர் பிரச்சினையில் தம்பி. பிரபாகரன் உள்பட பல மனித உரிமை வழக்குகளில் தீர்வு கண்டதும், கர்நாடக காவல் துறையினரால் சிறைபிடிக்கப்பட்டு மைசூர் சிறையில் பல மாதங்களாக வாடும் தமிழர்கள் எவ்வித தீர்வுமில்லாமல் இருப்பதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு கண்ட பல வழக்கு நடவடிக்கைகள் போன்றவை மனதிற்கு ஆறுதலை தருகின்றது. 

வருகின்ற 16ம் தேதி, கி.ரா.வின் 93ஆம் பிறந்த நாள் அன்று கதை சொல்லி இதழ் திரும்பவும் வெளிவரும்.



கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கி சூட்டில் மரணமைடந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை, நாளை (10.09.2014), சுப. உதயகுமார் அவர்கள் நடத்துகிறார். அந்நிகழ்வில் பங்கேற்க தலைவர் கலைஞர் அவர்களின் அனுமதி பெற்று கூடங்குளம் செல்ல இருக்கின்றேன்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Monday, September 8, 2014

தமிழர் மனித உரிமை மையம் -Tamil Centre for Human Rights - TCHR/CTDH

தமிழர் மனித உரிமை மையம்
Tamil Centre for Human Rights - TCHR/CTDH

இணையதளம் :www.tchr.net மின்அஞ்சல் : tchrgs@tchrgs.net / tchrdip@tchr.net

(Est. 1990)

(ஐக்கிய நாடுகள் சபையின் 'தகவல் சமுதாய உலக உச்சி மாகாநாட்டுக்கு"

ஐ. நா. வின் உத்தியோகபூர்வ அந்தஸ்தை பெற்ற அமைப்பு)



இல. :OISL/PR/2014 4 செப்டம்பர் 2014





சாட்சியங்களின் பெறுமதியை கேள்விக்குறியாக்கும்

மாதிரிப்படிவமும்;> மூன்றாம் தரபுக்களின் தலையீடும்!



ஐ. நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, விசேடமாக, ஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காக, ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது, மிக விசித்திரமானது.



உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுக்கிறது.



இதற்கு ஓர் ஊதாரணத்தை இங்கு தருகிறோம். ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில், புலம் பெயர் தேசங்களில் - பல மாதிரி மனுக்கள், கடிதங்கள் யாவும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இவற்றை லட்சக்கணக்கான புலம் பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் உட்பட, மாற்று இனத்தவர்களும், அவர்கள் வாழும் நாட்டு அரசுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைத்தனர். இவ் மனுக்களுக்கு இறுதியில் கிடைத்த பதில், “இவை யாவும், ஒரு குழு, ஓரு அமைப்பினால் தயாரிக்கப்பட்டு விநியோகிகப்பட்டவையே. ஆகையால் இவை சுயேட்சையான கருத்துக்களை கொண்டிருக்கவில்லை”.



இவ் நிலை, ஐ. நா. விசாரணை குழுவிடம் தமது உண்மையான சாட்சியங்களை அனுப்புவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதை மனதில் கொண்டு> இவ் பத்திரிகை செய்தியை நாம் வெளியிடுகிறோம்.



ஆகையால்> இப்படியான சர்ச்சைக்குரிய மாதிரிப் படிவங்களை கவனத்தில் கொள்ளாது, சாட்சியங்கள் அனுப்பும் ஓவ்வொருவரும் – தமது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றுடன், 10 பக்கங்களுக்கு குறைவாக, தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தாம் நேரில் பார்த்த அனுபவித்த உண்மை சம்பவங்களை> தமது சாட்சியத்தில் எழுதி> மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் மூலம் அனுப்புவதே> தனி நபருக்கு மட்டுமல்லாது> தமிழீழ மக்களுக்கு பலன் தரும் செயற்பாடாகும்.



மின் அஞ்சல் : OISL_submission@ohchr.org

அஞ்சல் முகவரி : OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, 1211 Geneva 10, SWITZERLAND





ஐ. நா. விசாரணைக்கு அனுப்பும் உங்களது சாட்சியம், 2002ம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதிக்கும், 2011ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி உட்பட்ட காலமாக இருக்க வேண்டும். இக் காலத்திற்கு முந்திய அல்லது பிந்திய காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய சாட்சியங்களை அனுப்புவதால் எந்த பிரயோசனமுமில்லை. உங்கள் சாட்சியத்தை> 2014 ஓக்டொபர் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.



இவ் சாட்சியங்களுக்கு ஓர் சமாதான நீதவனின் உறுதிப்படுத்தலோ அல்லது சத்திய கடுதாசி போன்று அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவற்றை செய்வதன் மூலம் உங்கள் சாட்சியத்தின் அந்தரங்கத்தை (ரகசியத்தை) நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதேவேளை இப்படியான விதிமுறைகளின் அடிப்படையில்> எந்த சாட்சியத்தையும் ஐ.நா. விசாரணை குழு உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.



உங்கள் சாட்சியங்களுக்கான படங்கள், வீடியோக்கள் போன்று ஏதும் ஆதாரம் இருப்பின், இவற்றை உங்கள் சாட்சியத்துடன் அனுப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள். உங்கள் சாட்சியங்களில் இவை உங்களிடம் உள்ளதாக எழுதினால், அவை தேவைப்பட்டால், ஐ. நா. விசாரணைக் குழு உங்களை தொடர்புகொள்வார்கள்



எழுத்து மூலமான சாட்சியங்களின் வரவிலக்கணக்கம் என்பது - கீறிமினல் அல்லது விபத்துக்கள் பற்றிய வழக்குகள் விசாரணைகள் என்ற அடிப்படையில், சந்தர்பங்களை பொறுத்து மாறுபடும். ஐ.நா. விசாரணைக்களுக்கான சாட்சியத்தை பொறுத்தவரையில், “ஒருவர், ஓர் சம்பவத்தில் நேரில் பார்த்தவராகவோ அல்லது அது பற்றிய ஆதரங்களுடன் அறிந்தவராகவோ, இருக்க வேண்டும். இவர்களின் சாட்சியம் என்பது உண்மைகளை அடிப்படையாக கொண்டதாக உள்ள அதேவேளை, அவர்களது அபிப்பிராயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்”.



இவ் அடிப்படையில் எப்படியாக எல்லா தமிழர்களும் ஐ. நா. விசாரணைக்கு சாட்சியம் கூற முடியும்? இப்படி செய்யுமாறு அழைப்பு விடுவது கபடம் நிறைந்து காணப்படுகிறது!



மின் அஞ்சல் மூலம் தமது சாட்சியங்களை அனுப்புவது பாதுகாப்பு அற்றது என கருதுபவர்கள், கடிதம் (அஞ்சல்) மூலமாக அனுப்பலாம்.



இலங்கைதீவிலிருந்து தமது சாட்சியங்களை அனுப்ப விரும்புபவர்கள், தமது சாட்சியங்களை வெளிநாடுகளில் உள்ள, தமது உறவினர்கள் அல்லது தமக்கு மிக நம்பிக்கையான நண்பர்களுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் ஐ.நா. விசாரணை குழுவிற்கு சேர்பிப்பதே பாதுகாப்பானது.



அல்லற்படும் தமிழீழ மக்களுக்கு நாம் செய்வதற்கு எந்தனையோ சேவைகள் இருக்கும் இவ் வேளையில், எல்லாவற்றிற்கும் “கீரை கடை” போடுவதன் மூலம், அவர் அவரது கபட நோக்கங்களை யாவரும் இலகுவாக புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. ஐ.நா விசாரணை பற்றிய விடயத்தில் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும்> சில அமைப்புக்கள் தம்மை மூன்றாம் தரப்பினர்களாக காண்பிக்க முயல்வது> சிறிலங்கா அரசு சாட்சியங்கள் யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுப்பதுடன்> ஒருவரது உண்மை சாட்சியம் கேள்விக்குறியாக்கப்படும்.



கடந்த 24 வருடங்களுக்கு மேலாக ஐ.நா. மனித உரிமை அமர்வுகளில் பங்கு பற்றுவதுடன்> பல விதப்பட் விடயங்களை> மிக நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பல பிரிவுகளுக்கு சமர்பித்து வந்த தமிழர் மனிதர் உரிமை மையத்தினர் ஆகிய நாம்> ஐ. நா. விசாரணைக்களுக்கு சாட்சியங்களை அனுப்புவர்களது பாதுகாகப்பு> நன்மை போன்றவற்றுடன்> தமிழீழ மக்களது நன்மையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு இவ் பத்தரிகை செய்தியை வெளியிடுகிறோம்.



நன்றி

ச. வி. கிருபாகரன்

பொதுச் செயலாளர்

தமிழர் மனிதர் உரிமைகள் மையம் - TCHR

பிரான்ஸ்

4 செப்டம்பர் 2014


UN Rights Chief Urged to Request UN Security Council to Ensure Witnesses protection to UN Sri Lanka Investigation: TGTE

UN Rights Chief Urged to Request UN Security Council to Ensure Witnesses protection to UN Sri Lanka Investigation: TGTE
Applicable International Criminal Law is Crime of Genocide

http://world.einnews.com/pr_news/222527790/un-rights-chief-urged-to-request-un-security-council-to-ensure-witnesses-protection-to-un-sri-lanka-investigation-tgte

UN Urged to warn the Sri Lankan government of the consequences for its tactic of intimidation and persecution of potential witnesses for UN War Crimes Investigation.
Non-cooperation by the Sri Lankan government is one thing; but, persecution of potential witnesses is another.
Applicable International Criminal Law is Crime of Genocide.
UN Human Rights Chief Urged to Request the UN Security Council to Ensure Witnesses protection to UN War Crimes Investigation on Sri Lanka.

The Prime Minister of the Transnational Government of Tamil Eelam Mr. Visuvanathan Rudrakumaran sent a letter congratulating the new UN High Commissioner for Human Rights Prince Zeid Ra’ad Zeid Al-Hussein for his new position. Noting his impressive human rights credentials, the letter stated that the TGTE is confident that Prince Al Hussein will be the “conscience for the world in the coming years.”

The TGTE also congratulated the Office of the High Commissioner for Human Rights (OHCHR) for issuing the Terms of Reference with respect to the investigation into violations on human rights, and other related crimes in the island of Sri Lanka mandated by the Human Rights Council Resolution (A/HRC/RES/25/1).

Commenting on the necessity of contextual analysis when identifying the nature of the crimes perpetrated in the island of Sri Lanka, the TGTE commended the Commission on its willingness to consider evidence outside of its established timeframe of 2002 to November 2011. The letter pointed out that contextual analysis is essential to identify the nature of the crimes.

Highlighting the explicit and covert threats made by Sri Lankan politico-military leaders to potential witnesses, the TGTE emphasized the importance of witness protection in fact finding. It was also asserted in the letter that, “Non-cooperation by the Sri Lankan government is one thing; but, persecution of potential witnesses is another.”

Pointing out the recent robust interactions between the UN Security Council and OHCHR, the TGTE called upon OHCHR to request the UN Security Council to “seize the matter of the protection of witnesses,” and to warn the Sri Lankan government of the consequences for its tactic of “intimidation and persecution of potential witnesses.”

Moreover, it was also noted in the letter that the UN Office of the High Commissioner for Human Rights Investigation on Sri Lanka (OISL) is also required to apply international criminal law identified in the Rome Statue to the International Criminal Court comprised of crimes of genocide, crimes against humanity, war crimes, and the crime of aggression.

In closing, the TGTE thanked OHCHR for its efforts in advancing human rights around the globe.

The TGTE also sent a letter to the outgoing OHCHR Commissioner, Hon. Navanetham Pillay, praising her work on Libya, North Korea, Sri Lanka and Syria and noting that she was the first High Commissioner to push the UN to recognize and protect gay rights, along with championing the abolition of capital punishment in the UN. In conclusion, it was stated that as she moved on she is certain to continue to be “squarely and unequivocally on the side of victims.”

BACKGROUND:

Tamils have faced repeated mass killings since 1958 and the mass killings in 2009 prompted UN Secretary General Ban Ki-moon to appoint a Panel of Experts to report on the scale of killings.

According to the report by this UN Panel, tens of thousands of Tamil civilians were killed and women were sexually abused and raped by the Sri Lankan Security Forces (According to UN Internal Review Report over 70,000 Tamils were killed in five months in 2009).

These Tamils were killed due to deliberate and intense shelling and bombing of areas designated by the government as "no-fire zones", where Tamil civilians had assembled for safety. The Sri Lankan Government also restricted food and medicine for Tamils, resulting in large numbers of people dying from starvation and many of the injured bleeding to death.

According to the UN Panel, the killings and other abuses that took place amount to war crimes and crimes against humanity. Independent experts believe that there are elements of these abuses that constitute an act of genocide.

According to a May 2012 report by the British Foreign and Commonwealth Office on Human Rights and Democracy; there are up to 90,000 Tamil war widows in the North-East of Sri Lanka.

UN Human Rights Council in March 2014 established an international war crimes investigation to investigate these killings and the investigations have begun.

A Buddhist Monk shot and killed a Sri Lankan Prime Minister over 56 years ago (in 1958) for having talks with Tamil political leaders to find a solution to the conflict.

Members of the Sri Lankan security forces are almost exclusively from the Sinhalese community and the victims are all from the Tamil community. According to several sources, Tamil areas have the highest concentration of security forces in the world (Ratio: For every five civilian one military).

Tamils overwhelmingly voted in a Parliamentary election in 1977 to establish an independent and sovereign country called Tamil Eelam. This Parliamentary election was conducted by the Sri Lankan Government.

Currently, the sixth Amendment to the Sri Lanka’s Constitution prohibits Tamils from expressing their political aspirations in peaceful and democratic manner.

ABOUT TRANSNATIONAL GOVERNMENT OF TAMIL EELAM (TGTE):

Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected Government of Tamils (from the island of Sri Lanka) living in several countries. TGTE was formed after the mass killing of Tamils by the Sri Lankan Government in 2009.

TGTE held internationally supervised elections among Tamils around the world to elect 132 Members of Parliament and is leading a campaign to realize Tamils’ political aspirations through peaceful, diplomatic and democratic means.

TGTE has a bicameral legislature and a Cabinet and held one of its Parliamentary sittings in the British Parliament. The Constitution of the TGTE mandates that it should realize its political objective only through peaceful means.

The Prime Minister of TGTE is Mr. Visuvanathan Rudrakumaran, a New York based lawyer.

Contact: media@tgte.org
Phone: +33-699-33-2705


Sunday, September 7, 2014

காவேரி,முல்லை பெரியார்,நெய்யார் போன்ற நதி நீர் பிரச்சனை

காவேரி,முல்லை பெரியார்,நெய்யார் போன்ற நதி நீர் பிரச்சனைகளில் வம்பு செய்த சாண்டி மதுவை 
ஒழிக்க தைரியமாக எடுத்த நடவடிக்கைக்கு சபாஷ்.

                                                                                                 -
                                                                                                  கே.எஸ்.இராதாகிருஷ்ணன்   

பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் நூல் வெளியீடு

பண்டிதமணி ஜெகவீர பாண்டியனார் எழுதி, 1950இல் வெளியிடப்பட்ட எங்கள் தெற்குச் சீமையின் வீர புகழ் பாடும் ‘பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம்’ என்ற இரண்டு தொகுதிகளுடைய நூலை தலைவர் கலைஞர் நாட்டுமையாக்கினார்.
இந்த நூல் செம்பதிப்பாக, நான் பதிப்பாசிரியராக கொண்டு, உயிர்மைப் பதிப்பகம், நண்பர் மனுஷ்யபுத்திரன் வெளியிடுகின்றார். கிடைத்த நூல்படி மிகவும் மோசமாக, பக்கங்கள் அழிந்த நிலையில் இருந்தது. பக்கங்களைத் திருப்பினாலே உடைந்துவிடுகிற நிலையில் இருந்த பழைய தொகுப்பிலிருந்து சிரமப்பட்டு  2007இலிருந்து படியெடுத்து வெளியிடப்படுகிறது. இந்த நூல் பல சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்தது. 25 ஆண்டுகளுக்கு முன், 1989இல் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, தி.மு.க. வேட்பாளராக நான் போட்டியிட்டபோது, முன்னாள் சட்டப்பேரவைத் துணைத்தலைவர், அண்ணன் விருதுநகர் பெ.சீனிவாசன் அவர்கள் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் என்னை சந்திக்க கோவில்பட்டி வந்தபோது, அவரது காரில் நீண்ட நாட்களாக நான் தேடிய  இந்த நூல் கிடைக்கப் பெற்றது. அவருடன் வாதாடி நூல் தொகுப்புகளை கையகப்படுத்துவதற்கே பெரும் பாடாகியது.
1989லிருந்து இந்த நூலை வெளியிட வேண்டும் என்று நினைத்தபொழுது, அரசியல் பணி, வழக்கறிஞர் பணி என காலம் கடந்துவிட்டது. அந்த நூலை தற்போது அச்சில் பார்க்கப் போவது கடமை முடிந்தது என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பண்டிதமணி ஜெகவீர பாண்டியனார் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. மதுரை வடக்கு மாசி வீதியில், திரு. பழ.நெடுமாறன் அவர்களோடு பழகிய காலத்தில், ஜெகவீர பாண்டியனாரை சந்தித்ததுண்டு. நல்ல தமிழறிஞர்.


கட்டபொம்மன் வம்சத்தில் ஒட்டநத்தம் கிராமத்தில் பிறந்த ஜெகவீர பாண்டியனார் திருக்குறள் குமரேச வெண்பா, கம்பன் கடைநிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் சரிதம், திருச்செந்தூர் அந்தாதி போன்ற நூல்களைப் பதிப்பித்தார். இவருடைய தமிழ்ப் பணிக்காக மதுரை தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச் சங்கம் ஆகியன இவரை அழைத்துப் பாராட்டின.
வ.உ.சி., பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார், சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர், சோமசுந்தர பாரதி, டி.கே.சி., ந.மு. வேங்கடசாமி நாட்டார், அவ்வை துரைசாமி பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் இவருக்கு நண்பர்களாக இருந்தனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி, திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர், குன்றக்குடி ஆதீனம், முதல்வர்கள் இராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், அண்ணா மற்றும் பசும்பொன் தேவர், ம.பொ.சி., அவினாசிலிங்கம் செட்டியார், ப.ஜீவானந்தம், கு.வேங்கடாசலபதி, ஐ. மாயாண்டி பாரதி போன்றவர்களோடு நெருக்கமாகப் பழகியவர். இவரைப் பற்றி, ‘கல்கி’, நா.பார்த்தசாரதி, பழ. நெடுமாறன் ஆகியோர் ஏடுகளில் கட்டுரைகளைத் தீட்டி உள்ளனர். ஒட்டநத்தத்தை விட்டு தூத்துக்குடியில் குடியேறி 1940-ல் தமிழவேள் பி.டி.ராசன், என்.எம்.ஆர். சுப்பராமன், பழ. நெடுமாறனுடைய தகப்பனார் கி. பழனியப்பனார், ஆர்.எஸ். நாயுடு ஆகியோரின் விருப்பத்திற்கிணங்க மதுரையில் குடியேறி இலக்கியப் பணிகளை மேற்கொண்டார். மதுரை பல்கலைக்கழக அகாடமிக் உறுப்பினராக அன்றைய துணைவேந்தரான தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இவரை 1966-ம் ஆண்டு நியமித்தார். 1967 ஜூன் 17 அன்று காலமானார்.

                                                                                                              -
                                                                                                       
                                                                                                        கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

‘வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்’ புத்தகம் பாராட்டு


திருவாளர்கள் பொ.ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகியோரின், பாண்டிய நாட்டு வரலாற்று மையம் வெளியிட்டுள்ள ‘வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்’ என்ற நூலை படித்தவுடன், ஆசிரியர்கள் சிரமப்பட்டு ஆய்வுகளையும், தரவுகளையும் திரட்டியுள்ளது தெரிகிறது. பாராட்டுக்கள்.




ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தோடும், அதன்பின் இராமநாதபுரம் மாவட்டத்தோடும் இருந்த கரிசல் மண்ணான விருதுநகர் மாவட்டம் பற்றிய வரலாற்று ஆய்வு படிக்க வியப்பாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் இந்நூலை படிக்க வேண்டும். திருவில்லிபுத்தூர், சாத்தூர், அர்ச்சுனாபுரம், திருத்தங்கல், செவல்பட்டி போன்ற பல ஊர்களின் வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர், பாண்டியர், நாயக்கர் கால தரவுகள் யாவும் திரட்டப் பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு என்றாலே தெற்கே இருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
                                                                                                        -
                                                                                                          கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...