Tuesday, September 16, 2014

2001இல் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது


2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தலைவர் கலைஞர் அவர்கள் 21 இடங்களை ம.தி.மு.கவுக்கு ஒதுக்கியபோது, இதைத் தானே சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. சங்ககிரி, சேரன்மகாதேவி, சங்கரன்கோவில் தொகுதிகள் தான் பிரச்சினையாக இருந்தது. அதை சரிசெய்து, அத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், குறைந்தபட்சம் 18 இடங்களில் ம.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கலாம். இன்றைய தமிழக அரசியல் நிலைமையே மாறியிருக்கும். 1994இல் விடிய விடிய சென்னையில் நடைபெற்ற பேரணியும், கடற்கரை கூட்டத்திலும், அதே ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைபெற்ற நடைப்பயணம், செப்டம்பர் 15இல் முடிவுற்று, அண்ணா பிறந்த நாள் நிகழ்வு புல்லா ரெட்டி பூங்கா அருகே நடைபெற்ற நேரத்திலும், 1994இலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து கூட்டு இயக்கம் நடத்தியபோதும், பொடாவில் நீங்கள் கைது செய்யப்பட்ட பின்பும் எனக்கு முதல் எதிரி ஜெயலலிதாதான் என்று சொன்னீர்கள். திரும்பவும் அதை நேற்றைக்கு பூந்தமல்லியில் சொல்லியிருக்கிறீர்கள்.

2001இல் சரியான முறையில் முடிவெடுத்திருந்தால், நிலைமைகள் சரியாக இருந்திருக்கும். உங்களை தலைமையை ஆதரித்து பணியாற்றிய பல ஆளுமைகளின் அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகாமல் இருந்திருக்கும். 2001இல் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...