Thursday, October 1, 2026

வாழ்க்கையில் வரும் முதல் அவமானம்தான் மிகவும் வலிக்கும்.

 வாழ்க்கையில் வரும் முதல் அவமானம்தான் மிகவும் வலிக்கும். , பிறகு பழகி விடும். இரண்டாவது, மூன்றாவது அவமானங்களுக்கு உள்ளே கொஞ்சம் " சுர்" என்குமே தவிர உதறித் தள்ளிவிட்டு மேலே, மேலே போய் விடுவோம். அப்படிப் போக வில்லையென்றால் நீங்கள் இன்னும் முன்னேறவில்லை அல்லது முன்னேற விரும்பவில்லை என்று அர்த்தம்..

இந் நிலையில், கடந்து போனதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.. நீங்கள் கவலைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவை கடந்து போயிருக்கும்.. போராடுவதும், வாழ்வதும் தானே மனிதனின் பேரழகு.. தனிமை, பிரிவு, விரக்தி.. எல்லாம் பொய். அன்பும், போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம்.. அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை.. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு " மானுட சமுத்திரம் நானென்று கூவு " என்கிற மனம் மட்டும் போதும்.. போதும்.. #ksrpost #ksradhakrishnan



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC