Friday, January 4, 2019

கொங்கு மண்டலத்தில் வெள்ளகோவில், மூலனூர் ஆகிய பகுதியில் நடந்த கழக நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி செயல் வீரர்கள் கூட்டங்களில் பங்கேற்ற போது .........


இன்று (4-1-2019) கொங்கு மண்டலத்தில் வெள்ளகோவில், மூலனூர் ஆகிய பகுதியில் நடந்த கழக நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி செயல் வீரர்கள் கூட்டங்களில் பங்கேற்ற போது .........
உடன் முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலார் இல. பத்மநாபன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Image may contain: 3 people, people smiling, people standing

Thursday, January 3, 2019

தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் இறுதியாக ஒரு நூலுக்கு அணிந்துரை கொடுத்தது நான் பதிப்பித்த கட்டபொம்மனின் நூலுக்கு தான்.



தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் இறுதியாக ஒரு நூலுக்கு அணிந்துரை கொடுத்தது நான் பதிப்பித்த கட்டபொம்மனின் நூலுக்கு தான். 
————————————————-
இன்று கட்டபொம்மனின் 260வது பிறந்தநாள். தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் இறுதியாக ஒரு நூலுக்கு அணிந்துரை கொடுத்தது நான் பதிப்பித்த கட்டபொம்மனின் நூலுக்கு தான். அவரது வரலாறு அனைவரும் அறிந்ததே.

வரும் ஜனவரி 6ஆம் தேதி விருதுநகர் ஆர்.ஆர். நகரில் மக்கள் களம் நடத்தும் கட்டபொம்மன் விழாவில் 1950களில் ஜெகவீரபாண்டியனார் எழுதி வெளியிட்ட பாஞ்சாலங்குறிச்சியின் சரிதம் என்ற நூல் செம்பதிப்பாக அடியேன் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்படுகிறது.
Today the birth anniversary of The great INDIAN freedom fighter VEERA PANDIYA KATTABOMMAN , an unforgettable soul who lived in 1760 AD. The National Hero......
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
03/01/2018

Image may contain: 2 people, people smiling, text

Cambridge University!

Cambridge University!

Image may contain: sky, outdoor, water and nature

கழக நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி செயல் வீரர்கள் கூட்டங்களில் பங்கேற்ற போது .........


இன்று (3-1-2019)கொங்கு மண்டலத்தில் சென்னிமலை,முத்தூர்,
காங்கேயம், குண்டடம் பகுதியில் நடந்த கழக நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி செயல் வீரர்கள் கூட்டங்களில் பங்கேற்ற போது .........
முன்னாள் அமைச்சர்கள் உடன் மு.பெ.சாமிநாதன்,இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலார் இல. பத்மநாபன் மற்றும் கழக நிர்வாகிகள் 
கலந்து கொண்டனர்.
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
03/01/2019

Image may contain: 4 people, people smiling, people standing
Image may contain: 5 people, people smiling, people standing and indoor
Image may contain: 2 people, people smiling, people standingImage may contain: one or more people and indoor

திருப்பாவை. மார்கழி 19.

திருப்பாவை. மார்கழி 19.
*******************************
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"நான்கு புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளுமை, மிருதுத் தன்மை, நறுமணம், வெண்மை ஆகிய ஐந்து குணங்களையுடய, தந்தத்தினால் ஆன மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் தலைசாய்த்து உறங்கும் கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு! (பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான கண்களையுடையவளே,நீ உன் கணவனான கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை. ஒரு நொடியும் அவனது பிரிவைத் தாங்காத நப்பின்னை பிராட்டியே! இது உன் இயற்கைக்கும் குணத்திற்கும் ஒத்துவராது.

திருப்பாவை. மார்கழி 18.

திருப்பாவை. மார்கழி 18.
*******************************
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன்மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"மதம் கொண்ட யானையைப்போல வலிமையுடையவரும், படைவரைக்கண்டு பின்வாங்காத தோள்வலிமையுடையவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தலுள்ள நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத்திற! கோழிகள் கூவுவதைக்கேள்! கொடிகள் படர்ந்த பந்தல் மேலமர்ந்து, குயில்கள் கூவுவதைக்கேள்! மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் பாட வந்துள்ளோம். எனவே உன் சிவந்த தாமரைப் பூக்கள் போன்ற மெதுவான கையினால், கைவளையல்கள் ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறவாய்!

ஒரு காலத்தில் நாடாளுமன்ற தொகுதியை சொன்னலே, அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் சொன்னவுடன் நினைவில் வரும் .



————————————————
இன்றைக்கு (02/01/2019) கொங்கு மண்டல நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஈரோடு செல்லும் வழியில் கோயமுத்தூர் விமான நிலையத்தில் இறங்கி அருமை சகோதரர் பத்மாலயா சீனிவாசன் அவர்களின் காரில் பயணிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக அவர சொன்னார். எனக்கு அவரை பற்றிய சரியான அறிதல் இல்லை. அவர் எந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் உடனே தெரிந்துகொள்ளவும்
முடியவில்லை. 

மேலும்,இன்று தினமணி நாளிதழில்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சந்திரகாசி, ஏழுமலை, ராஜேந்திரன்,, ஹரி என்று படம் வெளியாகியுள்ளன. இவர்களில் பலரை நமக்கு பரிச்சயமாக தெரியவில்லை. 

ஒரு காலத்தில் நாடாளுமன்ற தொகுதியை சொன்னலே, அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் சொன்னவுடன் நினைவில் வரும் . அந்த மாதிரி ஒரு அரசியல் நிலை இருந்தது. அப்போது முரசொலி மாறன் (திமுக-மத்திய சென்னை)
ஆர.வெங்கட்டராமன்(காங்கிரஸ்)
பி.ராமமூர்த்தி(மதுரை-கம்யூனிஸ்ட் )
நேசமணி காங்கிரஸ் -நாகர்கோவில்) செ.கந்தப்பன் (திமுக- திருச்செங்கோடு) கே.டி. கோசல்ராம் 
(காங்கிரஸ்- திருசெந்தூர்) ஜி.கே. சுந்தரம் சுதந்திரா -கோவை) சி.எஸ் (காங்கிரஸ்- கோபி)கல்வியாளர் ஜி.ஆர்.தமோதரன் (பொள்ளாச்சி )வைகோ (சிவகாசி)ப.சிதம்பரம்(சிவகங்கை)
இப்படி அன்றைய எம்.பிக்கள் உடன் ஞாபகம் வரும் . இன்றைய நிலை வேறு.இவர்கள் மக்களுடன் இணைந்து களப்பணியாற்றினர். 
ஆனால் இன்றோநிலைமையே,
நாடாளுமன்ற உறுப்பினர் எந்த தகுதி 
ஆளும்மை வேண்டாம்.

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
02/01/2018

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC