Wednesday, March 3, 2021

#ஈழ_அகதிகள்_ஈழத்தமிழர்கள்_இந்திய_குடியுரிமை_குறித்தான_விளக்கம்

———————————————————
தலைவர் கலைஞர் அவர்கள் 2009 முள்ளிவாய்க்கால் இறுதி போர் முடிந்தவுடன் அரசியலில் விலகி இருந்த என்னை அழைத்து ஈழத்தமிழர் குறித்து டெசோ அமைப்பை உருவாக்குவதும் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை குறித்தும் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்ந்து பேசியது உண்டு. அப்போது நான் அரசியலில் ஒதுங்கி இருந்த காலம். முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் 2009 ஆகஸ்ட் கட்டத்தில் திமுகவில் இணைந்து ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தான வேலைகளை நீ கவனிக்கவேண்டும் என்று என்னை திமுகவில் இணைத்தார். இதெல்லாம் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின் தான் டெசோ அமைப்பை திரும்பவும் தொடங்க வேண்டும் என்று முதல்வராக இருந்த கலைஞர் விரும்பினார். அண்ணா நூற்றாண்டு விழா காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் ஒரு மாநாடாக நடந்தது.
அந்த மாநாட்டில் ஈழத்தமிழருக்கும், ஈழ அகதிகளுக்கும் விரும்புவோருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டுமென்று தீர்மானத்தை அண்ணா நூற்றாண்டு விழாவில் தலைவர் கலைஞர் கூறி தீர்மானத்தை தயாரிக்கச் சொன்னார். தலைவரின் செயலாளர்கள் திரு.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ், சண்முகநாதன் தயாரித்து வரைவு தீர்மானத்தை வழங்கினேன். அந்த தீர்மானம் குறித்து தலைவர் கலைஞர் எங்களை சந்தித்து விளக்கங்களை கேட்டு அறிந்தார். இந்தத் தீர்மானம் இறுதி படுத்தப்பட்டது.


அண்ணா நூற்றாண்டு விழாவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அப்படியே முதல்வராக இருந்த கலைஞர் அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதல் பெற்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பார்வைக்கு நடவடிக்கைகள் எடுக்க அனுப்பிவைத்தார். ப.சிதம்பரம் அது குறித்தான கருத்துகளை சொல்லவும் இல்லை.அதன் மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவும் இல்லை.
ஈழ அகதிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் இந்திய குடியுரிமை கொடுப்பது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு உள்ளது. இது புறம் இருந்தாலும் ஈழத்தில் இருந்து வந்த தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழக மக்கள் தொகை குறைந்துவிடும். எனவே, ஈழ அகதிகள் இந்தியாவில் தங்கிய காலத்திற்கு எந்த கட்டணங்களும் (Staying Charge) வாங்காமல் இலவசமாக இலங்கையில் தங்களுடைய சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் .இந்திய அரசின் உதவியால் கட்டப்படுகின்ற வீடுகளும் உதவிகளும் அவர்களின் புணர்வாழ்வுக்கும் கிடைக்க வேண்டுமென்று இலங்கையில் உள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் குடியுரிமை, இரட்டைக் குடியுரிமை எனப் பேசுவது இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தும் ஈழத்தில் உள்ளது. இவையாவும் சிலரின் புரிதல்களுக்காக பதிவு செய்கின்றேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02.03.2021

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".