———————————————————-
ஸ்ரீபிரியா குறித்து இன்று நிறைய பதிவுகள். அதில் முக்கியபதிவாக இதை நினைக்கிறேன்.
ரஜனிகாந்த் சென்னை விமான நிலையத்தில் யாரையோ அடித்து அவருக்கு மன பாதிப்பு என்று செய்திகள் வந்த நாட்கள்.
மன சிகிச்சை பெற்று வருவதாக கூட செய்திகள்.
அந்த நேரத்தில் திரைப்பட துறை சேர்ந்தவர்காள் கூட ரஜினி அவ்வளவுத்தான் என்று பேசிய நேரம்.
மனிதாபிமானமுள்ளவர் அந்த நேரம் நிரூபித்தவர் ஸ்ரீபிரியா.
மருத்துவமனையில் சென்று பார்ப்பது மருத்துவர்களிடம் உடல் நிலை குறித்து பேசுவது.
இதை அன்றைய பத்திரிக்கைகள் மிகவும் பாராட்டின.
இதில் ஸ்ரீபிரியாவுக்கு பெரிய ஆதாயம் ரஜினியால் அப்போது இல்லை.
அவருக்கு முன்பே திரைபடத்துறையில் அறிமுகமாகி நிலைநிறுத்திக் கொண்டவர்.
பைரவி படத்தில் ரஜனியினுடன் கதாநாயகி.
ஆனால் அவர் காணாமல் போய்விடுவார் என்று பேசியவர்களை வாயடைக்க செய்த படம் பில்லா.ரஜினி ஸ்ரீபிரியா நடித்த மிகப் பெரிய வெற்றி படத்தை தயாரித்தவர் பாலாஜி.
ரஜினியுடன் கமலுடன் நடிக்கும் போது அவர்கள் தான் Score செய்வார்கள்.ஆனால் ஸ்ரீபிரியாவின் முகம் ரசிகர்களை கவர்ந்தது.
திரிசூலம் படத்தில் ஒரு சிவாஜிக்கு ஜோடி.அல்லிராணி போல் ஆண்களை வெறுக்கும் வேடம்.
பின்னி எடுத்திருப்பார்.முதல் நாள் வந்த அன்றே மனசில் வந்துவிட்டார் என்று வெட்டகத்துடன் சொல்லும் வசனம் சான்ஸே இல்லை ஸ்ரீபிரியா ஸ்ரீபிரியாதான்.
சட்டம் என் கையில் கமலுடன் ஜோடி.
அதில் சின்ன சின்ன கருப்பு வட்டங்களுடன் உடை.
அன்று குங்குமம் வார இதழ் அட்டையில் அந்த உடையுடன் அவர் படம்.
கடைகளில் குங்குமம் கயிறுகளில் தொங்கியது. அதுவரை அந்த புத்தகத்தை வாங்காதவர்கள் கூட வாங்கினார்கள்.
கவியரசர் அவள் தொடர்கதைக்கு பாடல்.பாலசந்தர் காட்சியை சொல்கிறார்.தன் காதலன் தன் விதவை இளைய சகோதரியை மணக்க விரும்பி திருமணமும் நடக்கிறது.
காதலனை விட்டு கொடுத்த அக்கா இப்படி ஆரம்பிக்கிறாள் ஆடுமடி தொட்டில் ஐந்து திங்கள் போனால் .....
கவியரசர் காட்சி அமைப்பை கேட்பார்.ஆனால் இசை அமைப்பாளர் இயக்குநர் யார் நாயகன் நாயகி என்பதையும் சொல்லியே பாடல் எழுத சொல்வார்கள்.
கவியரசருக்கு தங்கைக்காக அக்கா காதலனை விட்டுக் கொடுப்பது(கல்யாண பரிசு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.தங்கை அக்காவிற்காக காதலனை விட்டு கொடுப்பாள்)
அதுவும் விதவையை மணக்க வருவது அந்த பாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்க்கு முன் ஸ்ரீபிரியா சில படங்களில் நடித்தாலும் அவள் ஒரு தொடர்கதைத்தான் திருப்பு முனை.
பாலசந்தர் ஸ்ரீபிரியாவின் ஸ்டிலை காட்டியுள்ளார்.
கவியரசர் அப்போது ஒன்றை சொன்னாராம்.
சாவித்திரி தேவிகாவிற்கு பிறகு முகத்தில் கவர்ச்சி காட்டுகிறார் என்றாராம்.
அவள் ஒரு தொடர்கதை வந்த பிறகு சென்னை வானொலி கலந்துரையாடல் போது எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னது.
No comments:
Post a Comment