Saturday, June 5, 2021

#தமிழகமுதல்வர் 
#காவேரி #மேட்டூர்அணை_திறப்பு
———————————————————-
M.K.Stalin
ஜுன்‌ 12 ஆம்‌ தேதி மேட்டூர்‌ அணை பாசனத்துக்காகத் ‌திறக்கப்படும்.   தமிழக முதல்வர்‌ அறிவிப்பை  வெளியிட்டார்‌.  முதல்வர் மேட்டூர் அணையை திறக்க வரும் 12 அன்று அங்கு செல்கிறார்.

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியான நாளில்‌ சுமார்‌ 65டிஎம்‌சி இருப்பு இருந்தது. அதேபோல்‌ இந்த ஆண்டும்‌ குருவை சாகுபடிக்கு அணையை திறக்கும் வகையில்‌நீர்‌ இருப்பு திருப்திகரமாக உள்ளது. மே 26ஆம்‌ தேதி நிலவரப்படி அணையின்‌ நீர்‌ மட்டம்‌ 97 அடியாக இருந்தது. அணையில்‌ சுமார்‌ 62 டி.எம்‌.சிநீர்‌ இருப்பு தற்போது உள்ளது. ஆகவே மேட்டூர்‌ அணை ஜுன்‌ 12 ஆம்‌ தேதி தன்னுடைய முன்னிலையிலே திறக்கப்படும்‌ என்ற அறிவிப்பை தற்போது முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ வெளியிட்டுள்ளார்.  இதனால் டெல்டா விவசாயிகள்‌ மகிழ்ச்சியில் உள்ளனர்‌.

தற்போது இந்த அறிவிப்பினா நிலத்தடி நீரைக்‌ கொண்டு நெல்‌ நாற்றங்கால்‌ தயார்‌ செய்யும்‌ பணிகளை விவசாயிகள்‌ நம்பிக்கையுடன்‌ தொடங்குவார்கள்‌. மேட்டூர்‌ அணை திறப்பு தொடர்பாக நீர்வளத்‌துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, வேளாண்மைத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்.கே பன்னீர்செல்வம்‌ உள்ளிட்டோர்‌ பங்கேற்ற ஆய்வுக்‌ கட்டம்‌ தஞ்சாவூரில்‌ கடந்த மே 16 ஆம்‌ தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்‌கிடையே டெல்டா மாவட்டங்களில்‌ ஒரு பகுதி விவசாயிகள்‌ குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டனர்‌.  ஆழ்துளை கிணறுகளின் உதவியால்‌ இதுவரை 68,500 ஏக்கரில்‌ சாகுபடி செய்வதற்கு நாற்று விடப்பட்டுள்ளது. இதில்‌ தஞ்சாவூர்‌. திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில்‌ மட்டும்‌ சுமார்‌ 56 ஆயிரம்‌ ஏக்கரில்‌ குறுவை சாகுபடி பணிகள்‌ தொடங்கப்‌பட்டுள்ளன. ஜுன்‌ 12 ஆம்‌ தே அணை திறப்பதால்‌, டெல்டா மாவட்டங்களில்‌ 4 லட்சம்‌ ஏக்கருக்கும்‌ மேல்‌ குறுவை நெல்‌ சாகுபடி நடைபெறும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர்‌. திருவாரூர்‌, நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும்‌ சுமார்‌3 லட்சத்து 50ஆயிரம்‌ ஏக்கர்‌ பரப்பளவில்‌ குறுவை சாகு(படி நடைபெற வாய்ப்புள்ளது. தற்போது மேட்டூர்‌ அணையில்‌ இருப்பில்‌ உள்ள நீர்‌ 50 நாட்கள்‌ பாசனத்துக்கு போதுமானது என்று கருதப்படுகிறது. 

கர்நாடக அணைகளில்‌ இருந்து தமிழ்நாட்‌டுக்கு ஜுன்‌ மாதம்‌ கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி  ஜுலை மாத பங்கீடு 31.24 டி.எம்‌.சி ஆகஸ்ட்‌ மாதத்துக்கான 45.95 டி.எம்‌.சி. நீரை கேட்டுப்‌ பெற வேண்டும்‌ என்று விவசாய சங்க அமைப்புகள்‌ மற்றும்‌ அதன்‌ பிரதிநிதிகள்‌ வலியறுத்தியுள்ளனர்‌. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையும்‌ இயல்பான அளவில்‌ பெய்யக்‌கூடும்‌ என வானிலை கணிப்புகள்‌ கூறுகின்றன. இதன்‌ காரணமாக, வரும்‌ சாகுபடி ஆண்டில்‌ தண்ணீர்‌ பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை நிலவுகிறது. குறுவை பணிகளைமுன்‌ கூட்டியே தொடங்கினால்தான்‌, வடகிழக்கு பருவமழையால்‌ பாதிக்காத வகையில்‌ அறுவடைப்‌ பணிகளை விவசாயிகளால்‌ மேற்கொள்ள முடியும்‌. மேட்டூர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர்
காவோரி கடை மடை பகுதி வரை செல்லவேண்டும்.

#Cauvery
#Mettur_dam

#KSRPostings
#KSRadhakrishnan_postings
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
5-06-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...