Tuesday, June 22, 2021

#ப. மாணிக்கம்



—————————
இவரின் புகை படம் இணையத்தில் இல்லை. இவரை பற்றி ஒரு கட்சி நிரவாகியிடம் கேட்டேன். அவருக்கு இவரை  பற்றி அறிதல்  இல்லை. 
இது இன்றைய அரசியலில் அபத்தம்……
என்ன சொல்ல…. 
 
கடலூரில் பிறந்த, தோழர் மாணிக்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, அங்கேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து,தலைமறைவு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் களப்பணியில் இருந்தார்.
 
இவரிடம்   சோ. அழகர்சாமி  மூலம் 1975இல்  நான்  அறிமுகம் .
பழ. நெடுமாறன்  மற்றும்  இவரோடு தமிழகத்தில் பல  சமயங்களில் பயணத்தும் உண்டு.

மாணிக்கம் அவர்கள் இந்திய கம்யூனிஸ்டு (CPI) கட்சியின் மாநில செயலாளராக இருந்தார். எம்எல்சி, மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

அவர் கூறிய ஒரு தகவல்

நெல்லை சதி வழக்கில் தேடப்பட்ட காலம். அந்தக் காலத்தில் மிக நான் நன்றாக நாம் ஓடுவேன்.குற்றாலம் மலையில் காவல்துறையினர் என் மறைவிடத்தை கண்டு பிடித்து விட்டார்விட்டார்கள். துரத்த ஆரம்பித்தார்கள் இரண்டு மைல் தூரம் ஓடினேன். விபரம் அறியாத விவசாயிகள் மூன்று பேர் என்னை இறுக்க பிடித்து விட்டார்கள்.  இவ்வாறுதான் காவல்துறை என்னை கைது செய்தது என்றார்.

ஒன்பது ஆண்டுகள் சிறை வாழ்க்கை. மிகச் சிறந்த சிந்தனையாளர். உலக புரட்சி, வரலாறு எது எப்பொழுது நடந்தது என்பதை உடனடியாக அவரால் சொல்ல முடியும்.தேனீர்,புகைபிடித்தலை இவரிடமிருந்து பிரிக்க முடியாது. மின்சார   ரயிலில் பயணித்து
குரோம்பேட்டையில்  இருந்த
தன் வீட்டிற்க்கு இரவு நேரங்களில்தான்
திரும்புவார்.

#KSR_Posts
22-6-2021

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...