#*தி ஃபேமிலி மேன் வெப் சீரீஸ்*…
#*வெட்டிவிமர்சனங்கள்*
————————————
‘‘ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்கள அரசு நிகழ்த்தியிருக்கிற பல்வேறு கொடுமைகள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் உலக அரங்கத்தில் இருக்கின்றன. இது தொடர்பாக ஐ.நா-வில் மூன்று அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில், அரசும் ராணுவமும் செய்த கொடுமைகள் குறித்து விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு, இந்திய அரசு செய்த உதவிகள் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் மீஷெல் பேச்சலெட் (Michelle Bachelet) கொடுத்த அறிக்கையில், ‘இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்’ என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இதுதான் உலகத்தின் முன்னிருக்கும் உண்மைகள். ஆனால், மக்களுக்காகப் போராடியவர்களை பயங்கரவாதி களாகவும், இரக்கமில்லாத கொலைகாரர்களாகவும் காட்டிவிட்டு, கொலை செய்த அரச பயங்கரவாதிகளை நல்லவர்களாகக் காட்டுவதே இது போன்ற தொடர்களுக்குப் பின்னாலுள்ள உண்மையான நோக்கம். விடுதலைப்புலிகள் மீது மட்டுமல்ல... எந்தப் போராளி இயக்கங்கள்மீதும் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், உண்மைக்குப் புறம்பாக, தவறாகச் சித்திரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’’.
இது சிலரின் புரிதலுக்கு…
#ksrpost
10-6-2021.
No comments:
Post a Comment