Thursday, June 17, 2021

அண்ணாவின்_உயில்

#அண்ணாவின்_உயில்
————————————-
''#விடியற்காலையே_வாழ்க" 
(#Hail_theDawn) என்ற மகுடமிட்டு, 1969ஆம்ஆண்டின்"#ஹோம்ரூல்" (Home Rule) வார இதழில் ''தம்பிக்கு'' எழுதிய #தன்_இறுதி_முடங்கலில்,

அறிஞர் அண்ணாவின் கருத்து…..
(எனது‘#உரிமைக்கு_குரல்_கொடுப்போம்’ முதல்பதிப்பு-1995)
#Federalism   #State_Autonomy
———————————————————-
"...மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கூறி வருகிறேன். இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி; நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் கட்சி சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர்..."



"அரசினுடைய 'இறையாமை" (ஒப்புயர்வற்ற ஆட்சி அதிகாரம்) (Sovenignty) என்பதற்கு நாம் கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது (Political Sovereignty) பொது மக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் (Constitution) முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது (Legal Sovereignty) கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் (மத்திய அரசு) அதன் அங்கங்களுக்கு மிடையே (மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது. இன்னும் அதிகப் பயன்களை விளைவிக்கும் இறைமையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கே எங்கள் திட்டங்கள் பயன்படுகின்றன என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? திட்டங்கள் திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையைக் கிளப்பியவுடன், நாங்கள் 'இறைமையின்’ ஆணிவேரை வெட்டுகிறோம் என நீங்கள் ஏன் எண்ணிக் கொள்கிறீர்கள்? முழுமையான இறைமை, குறிப்பிட்ட ஒரே ஒர் இடத்தில் எப்போதும் தங்கி விடுவதில்லை.'

“…. நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்புக் (Unitary from) கூடாது; கூட்டாட்சியமைப்பு முறை தான் வேண்டுமென்று விரும்பினார்கள். ஏனெனில் அரசியல் (Federal form} தத்துவஞானிகள் பலர் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்தியா மிகப் பரந்து கிடக்கின்றது.' ஏனெனில், உண்மையில் அதனை ஒரு துணைக் கண்டம் என அழைக்கக் கூடிய அளவிற்கு அது பரந்து விரிந்து கிடக்கின்றது. எஃகால் செய்த வரைச் சட்டத்தைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பல திறப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது. 
" ... சென்ற பதிமூன்றாண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளதென்பதே எனது குற்றச்சாட்டு. மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப் போல் விரைந்து மாறி வருகின்றன. அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. 
அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன். நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் - மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும் - இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கைகளாகும்..."

எனவே நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றை ஆட்சித் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே (Spearhead) நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன். நாடாளுமன்றத்தின் அறிவுசால் உறுப்பினர்களாகிய நீங்கள் (மாநிலங்களின்) இந்தச் சிக்கலை ஏன் மூடி மறைக்கின்றீர்கள்? அதனை உயர்மட்ட அரசு மன்றத்திற்குக் கொண்டு வருவீர். அதனை (அச்சிக்கலை) தங்குத் தடையின்றி நடமாட அனுமதிப்பீர்; (தற்போதைய) கூட்டாட்சியை, ஒரு மெய்யானக் கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழி வகை செய்திடுவீர்...' என முழங்கினார்.

''விடியற்காலையே வாழ்க" (Hail the Dawn) என்ற மகுடமிட்டு, 1969-ஆம் ஆண்டின் "ஹோம்ரூல்" (Home Rule) வார இதழில் ''தம்பிக்கு'' எழுதிய தன் இறுதி முடங்கலில்,

"அன்புத்தம்பி! பதவிப் பித்துப் பிடித்துத் திரிபவனல்லன் நான். வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சலூட்டி, டெல்லியுடன் சச்சரவு கொள்வதே என் நோக்கம் என்று எனது நல்ல நண்பரான உயர்திரு. நம்பூதிரிபாடு கூறுவதையும் விரும்பவில்லை. அதனைச் சரியான கால கட்டத்தில் தீர்மானிக்க வேண்டுமென்பதும் இன்றியமையாதது. உண்மைதான்; அப்படித் தீர்மானிக்கும் முன்னர், கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத் தரவேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருப்பதன் மூலமாக, சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரமுடியுமெனில், உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்குச் செலுத்திய உரிய பங்காகும்."

••••••••••••••••••••••••••••••••••••••

இந்திய அரசியல் சட்டத்தையே மாற்றியமைக்கவேண்டும் என்பது எங்கள் அவா. இந்தியச் சட்டத்தைத் திருத்தியமைத்து மாகாண சர்க்காரிடமே எல்லா அதிகாரங்களையும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

- பேரறிஞர் அண்ணா, 
திராவிட அரசு , 31.12.1950 பேட்டி.
****

எதற்கெடுத்தாலும் டெல்லி, எதற்குத் தொட்டாலும் டெல்லி, எந்த அதிகாரம் என்றாலும் டெல்லி என்று போக வேண்டி இருக்கின்றதென்றால்…... 

- பேரறிஞர் அண்ணா,
ஜனநாயகம் நிலைக்க, 5-2-1957
****

India is not a country. India consists of various ethnic groups, India consist of various language groups and India has been termed very correctly as an sub-continent.
-Anna, 
May 1963
Speech at the council of states, Parliament of the Indian Union.
****

The Preamble to the Constitution says that the political sovereignty rests with the people. Then legal sovereignty is divided between the Federal Union and the constituent units. 
-Anna , 
Session and Sovereignty , Dec 1963
****

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

 #ksrpost
17-6-2021.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...