Friday, June 11, 2021

இது_ஒரு_அரிய_கருப்பு_வெள்ளை_படம். 1964இறுதி அல்லது ‘65 ல் எடுத்தது. நேரு மறைவுக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக ஆகியிருந்த நேரம்.

#இது_ஒரு_அரிய_கருப்பு_வெள்ளை_படம்.   1964இறுதி  அல்லது ‘65 ல் எடுத்தது. நேரு  மறைவுக்குப்பின்   லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக  ஆகியிருந்த நேரம். அவரும் அவருடைய துணைவியார்  லலிதா சாஸ்திரி அப்போது  இந்தியா மீது போர் தொடுக்கக் கூடிய நிலையில் இருந்தது பாகிஸ்தான்.  இதனால்,   இந்தியாவில் பதற்றமான சூழல்  நிலவியது.அன்றைய
சென்னைமாகானமுதல்வர்எம்.பக்தவச்
சலம் 

போர் சூழலில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். இதில், அன்றைய சென்னை மாகாண  முதல்வர்    பக்தவத்சலம், திரைப்பட நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா,    அவருடைய    தாயார் சந்தியா,கே.ஆர்.விஜயா,வரலட்சுமி,கோபாலகிருஷ்ணன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன், (எம்.ஜி.ஆர்படபிடிப்பில்  இருந்தார். போர் நிதியை வழங்கினார்)   அத்தனை திரை உலகப்பிரபலங்களும் சாஸ்திரி
யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு நிதி உதவி செய்தனர்.

போர்முனைக்கு சென்று  ஜவான்களை
ஊக்கம்  தரும்  வகையில்  சந்தித்து இவர்கள்  பேசியும் உண்டு.

ரவிச்சந்திரனும்    ஜெய்சங்கரும் அப்போது தான்  திரை உலகில்  கால் வைத்த நேரம். சோ ராமசாமி  இதில் கலந்து கொண்டதாக தெரியவில்லை. நாகேஷ்,   தங்கவேலு,    சந்திரபாபு, கருணாநிதி  (1935இல் இருந்து எல்.நாராயணராவில்ஆரம்பித்து,தொடரந்துஎன்.எஸ்.கிருஷ்ணன்,காளி.என்.ரத்தினம்  உட்பட   தமிழ்த்திரையுலகின் அற்புதமான  நகைச்சுவை  நடிகர்கள் இருந்தனர்)  போன்றோரும்  இந்த சந்திப்பில் பங்கேற்றனர். எம்.டி.ராமராவ், சஹஸ்ரநாமம்,டி.எஸ்.பாலையா,எஸ்.டி.
சுப்பையா,நாகையாபோன்றகுணச்சித்திர நடிகர்களும்  மற்றும இயக்குநர் ஶ்ரீதர் இந்தப்புகைப்படத்தில் பலர் இடம் பெற்
றுள்ளனர்.

#KSRPosting
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-06-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...