#ராஜீவ்_படுகொலையில் விடுதலைப்புலிகளுக்கு சம்பந்தமில்லை; சரியாக புலன் விசாரணை செய்யப்படவில்லை; நீதிமன்றத்திலும் சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்று பிற்காலத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸ் கூறியதும், அதேபோல அந்த வழக்கை புலனாய்வு செய்த அதிகாரிகளும் ஓய்வு பெற்ற பிறகு கூறியதெல்லாம் செய்தி.
ராஜீவ் படுகொலை நடந்த உடனேயே 1991-ல் இந்தப் பழியை சம்பந்தமற்ற வகையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்துவதை குறித்து, 1991-லேயே பல்வேறு ஆதாரங்கள், பல்வேறு தரவுகளுடன் நான் எழுதிய கட்டுரை அன்று சாணக்கியன் இதழில் வெளிவந்தது.
தினமணி அந்த நேரத்தில் அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க தயங்கியதால், அந்தக் கட்டுரை அன்று சாணக்கியனில் வந்தது. மீண்டும் பல முறை சமூக ஊடங்களில் அந்த கட்டுரையைப் பதிவு செய்துள்ளேன்.
அதன்படி பல்வேறு காணொளிக் காட்சிகளிலும் சமீபத்தில்பேசியுள்ளேன். எழுவர்விடுதலை குறித்தான காட்சிகளி
லும் பேசியுள்ளேன்.
விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ நாளிதழில் அது குறித்தான செய்தி வெளிவந்திருந்தது. அது அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.அந்தக்காலக்கட்டத்தில் நாங்கள் அதற்கு சம்பந்தம் இல்லை என்று விடுதலைப்புலி இயக்கத்தின் நிர்வாகிகிட்டுகூடஅறிக்கைவெளியி
ட்டிருந்தார்.
இவைற்றை கவனத்தில் கொள்ளாமல் அன்றைக்கு விடுதலைப்புலிகள் என்ற ஒரே புள்ளியிலேயே வைத்து சர்வதேச சூழலில் எந்த விசாரணையும் நடத்த
வில்லை. விடுதலைப்புலிகள் என வைத்துக்கொண்டு விசாரிக்கப்பட்டது.
ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் என கமிஷன்கள் போட்டு தேவையில்லாமல் பண விரயம் தான் ஆனதேயொழிய குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ராஜீவ் படுகொலையை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்கும் எந்த ஒரு தயக்கமும் காட்டக் கூடாது என்றுதான் கிட்டு சொன்னார். ஆனால் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வில்லை என்ற கோரிக்கைதான் வைக்கப்பட்டுள்ளது.
இதை விடுதலைப் புலிகளே மறுத்துள்ளார்கள் என்பது இந்த பத்திரிகை ஆதாரத்தில் கீழே வழங்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrpost
18-6-2021.
No comments:
Post a Comment