Saturday, June 19, 2021

#மேகேதாட்டு_அணை ———————————- (#மேகதாது_அல்ல_மேகேதாட்டு_என_அழைக்கவும்

#மேகேதாட்டு_அணை 
———————————-
(#மேகதாது_அல்ல_மேகேதாட்டு_என_அழைக்கவும்)

தமிழ்நாட்டு எல்லை பகுதியில் ,(#Mekedatu) கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம்,  கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஒரு குறுகலான பகுதியை மேகேதாட்டு குறிப்பதாகும். இதை ஆடு தாண்டும் காவிரி என்றும் அழைப்பர் 

மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுஅளித்தத்தீர்ப்பைஅத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூரில்நேற்றுஅறிவித்திருக்கிறார். கர்நாடக முதலமைச்சரின்அறிவிப்புக்கு தமிழக  முதலமைச்சர்  உடனடியாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில், அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்களை கர்நாடகம் குவித்து வருவதாக  கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டைம்ஸ்  ஆஃப் இந்தியா நாளிதழில்செய்திவெளியானது. அதனடிப்படையில் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்பாயத்தின் தென் மண்டல அமர்வு, மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுமானத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை  அளிக்க  4 உறுப்பினர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, மேகேதாட்டு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும், அணைக்கு அனுமதி கோருவதற்கான கர்நாடக அரசின் விண்ணப்பம் மத்திய அரசிடமும் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தலையிடத் தேவையில்லை என்று கூறி வழக்கை  முடித்து வைத்து விட்டது. அதனால், மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு  ஈடுபட்டதா? என்பதை அறிய முடியாது. 

மேகேதாட்டு அணை பகுதியை ஆய்வு
செய்ய குழு குறித்த பிரச்சனையை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடுஅரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...