Thursday, June 17, 2021

#கடன்_சரி;#தமிழர்களின்_நலனையும் #பேணிகாக்க_இந்திய_அரசு_பேச_வேண்டாமா?

#கடன்_சரி;#தமிழர்களின்_நலனையும் #பேணிகாக்க_இந்திய_அரசு_பேச_வேண்டாமா? 
———————————————————-
இந்தியா இலங்கைக்கு சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க நூறு மில்லியன் டாலர்கள் கடனாகக் கொடுக்கின்றது. 

கடந்த 2018-ல் டெல்லியில் நடந்த மாநாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் 89 நாடுகள் கையொப்பமிட்டன. அதில் இலங்கையும் ஒன்று.

அதனடிப்படையில் அன்றைக்கு இந்திய பிரதமர் மோடியும் பிரெஞ்சு பிரதமரும் இதை முன்னெடுத்துச் சென்ற சூழலில், தற்போது இலங்கைக்கு இந்தக் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த கடன் தொகை ரூபாய் 960 மில்லியன் டாலர் ஆகும். 20 ஆண்டுகளில் இந்தத் தொகை இந்தியாவிற்கு திருப்பித் தரவேண்டும்.  இதற்கான வட்டி சதவீதம் 1.75 என தகவல் . இலங்கையில் இப்போது மின்சக்திக்கு சிரமப்படுவதாகவும் எனவே 4210 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
எனவே இலங்கைக்கு தருகின்ற கடன் 

ஒரு பக்கம் இருந்தாலும் அங்குள்ள தமிழர்கள் பகுதியில் இது பயன்படுத்தப்படுமா? தமிழர்களின் நலனையும் பேணிகாக்க மத்திய அரசு பேச வேண்டாமா? என்பதுதான் நம்முடைய கேள்வி.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

 #ksrpost
17-6-2021.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...