Tuesday, June 15, 2021

#நீதி_மன்ற_படிக்கட்டுகள்_நீதிமன்றம்…

#நீதி_மன்ற_படிக்கட்டுகள்_நீதிமன்றம்…
———————————————————-
தனக்கு நீதிமன்றம் மூலம் பரிகாரம் கிடைக்க வேண்டுமென்று படியேறிய சாமானியனின் வழக்கு நீதிமன்ற அரங்கத்திற்குள் செல்ல இயலவில்லை. ஒரு மூதாட்டி நடக்க முடியாத தள்ளாத வயது அவருக்கு இரண்டு வருடங்களாக ஓய்வூதியம்  கிடைக்கவில்லை வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் மாவட்ட நீதிமன்றத்தை நாடி, அதன்பின் நீதிபதியே வந்து படிக்கட்டில் அமர்ந்து அவரிடம் வழக்கை கேட்டார் என்ற செய்தி  பத்திரிகையில் பார்த்தேன். தெலுங்கானா,புவன் பள்ளி மாவட்ட நீதிபதி அப்துல் அசீம்.

படிகளில் ஏற முடியவில்லை படிகளில் அமர்கிறார் நடக்க இயலாமல் தகவல் உதவியாளர் மூலமாகமாவட்டநீதிபதிக்கு தகவல் செல்கிறது.

மாவட்ட நீதிபதி  மாடியிலிருந்து இறங்கி வருகிறார் மூதாட்டி அமர்ந்திருந்த படிகளில் மூதாட்டி அருகே அமர்கிறார்.
அந்த இடம்  நோக்கி நீதிபதி வருகிறார்.
அந்த மூதாட்டி அமர்ந்த படிக்கட்டுகளே நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை ஆரம்பமாகிறது நீதிபதி ஆவணங்களை கேட்கிறார். விசாரணை செய்து அந்த மூதாட்டிக்கு ஓய்வூதியம் கிடைக்க தீர்ப்பளிக்கிறார். 

இதுபோன்று1984ல்குருசாமிநாயக்கரின்(வீரபாண்டியகட்டபொம்மன்வாரிசு)
தூக்கு தண்டனை வழக்கில் அவருடைய  கருணை மனுவை குடியரசுத்தலைவர் மூன்று முறை நிராகரித்த பின்னும் ஒரு இரண்டு வரி அவர் தந்தியை வைத்துக் கொண்டு இரண்டு நாட்களில் அவரை சென்னைஉயர்நீதிமன்றத்தில்காப்பாற
றிய கடந்த கால எனது. நினைவுகள் வந்ததன. நீதிமன்றங்களில் எளிதாக நீதி கிடைக்க வேண்டும்.  நியாயங்களைக் கேட்டு வருபவர்களுக்கு அந்த நியாயத்
திற்கான  தீர்வு ஏற்பட   வேண்டும். இதுதான் நீதியின்   நோக்கம்.  நீதியைக் காலதாமதப்படுத்துவதும் முறையல்ல. உடனுக்குடன் நீதிமன்றத்தில் பைசல் செய்து. தீர்வுகளும்தீர்ப்புகளும்கிடைக்க வேண்டும்   என்பதுதான்  அடிப்படை கூறாகும்.

#ksrpost
15-6-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...