#தி_ஜானகிராமன்_நூற்றாண்டு_நாளை_நிறைவு.
#மலர்_மஞ்சம்
———————————————————
சில நேரங்களில்,நமது அமைதியைக் கெடுப்பது யாராக இருந்தாலும் அவரிடமிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். அதாவது சில நேரங்களில் நம்மிலிருந்தே நாம் சற்று விலகியிருப்பது நல்லது.
வாழ்வில் எதிர்கொண்ட சங்கடம் அளிக்கும் தருணங்களை மீளாய்வு செய்யவும், அளித்திருக்க வேண்டிய எதிர்வினைகள் குறித்தும் காலதாமதமாகவாவது அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த புவியின் பின்னால் நம் வாழ்வை நம்மை நகர செய்யும். சில நேரங்களில் நாம் தான் இந்த வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம்.
இக்கட்டான காலங்களில், இயலாமை அவ்விடம்விட்டு அகன்றுவிடவே மனது துடிக்கிறது. இடப்பெயர்வு ஏற்படினும் மனம் முந்தைய இடத்திலேயே நிலைத்து விடுவதை மறுக்க முடியவில்லை.
'உலகத்தில் அறிவு பிறந்த அன்றே நிம்மதியும், அமைதியும் போய்விட்டன',
'நன்றி கேட்டவர்களுக்கு மேலே மேலே நல்லது செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?'
'இவ்வளவு முழுமையுடன் அழிப்பதற்கு மனிதனால் தான் முடியும்'.
அன்பு என்னும் பாச கயிற்றினால் பிணைக்கப்பட்டுவிட்ட மனித நேயக்கதை. அரிய மனிதர்கள்…..
அறியாமையில் பெறக்கூடிய குறைந்தபட்ச பாதுகாப்பு, இன்பம், எதிர்பார்த்தலின் பின்விளைவான பெரும் ஏமாற்றம், கட்டற்ற மனிதனின் வன்செயல்கள் மேற்கண்ட வரிகளில் தி.ஜாவின் எழுத்துக்கள் மட்டுமே அளிக்கக்கூடிய உன்னத தரிசனங்கள் இவை.
திஜாவின் படைப்புகளில் பெண்கள் ஆண்களின் பார்த்து வெளிப்படையாக மகிழ்ந்து வியக்கிறார்கள்.
நேர்மையாளனாக அல்லது நடுநிலையாளனாக இருப்பதில்உள்ள சிரமம், இரு தரப்பையும் பகைத்துக்கொள்ள வேண்டிய கஷ்டமான நிலை.
'கைக்கு எட்டாத உயரத்தில் ஒன்னு இருந்தா அதை பத்தி தூத்தறதுதான் வழக்கம்'
'தியாகம் எவ்வளவு ஆழ்ந்த போதை! பிறருக்காக உழைக்க ஆரம்பித்துவிட்டால், தன்உடல், தன்மனம், தன்நினைவு எல்லாம் எப்படி செத்து விடுகின்றன?'
எவ்விதத் தொடர்பும் இன்றி பிறரை தூற்றுபவர்கள், சுயநலம் இன்றி அனைத்து தளங்களிலும் உழைப்பவர்களுக்கு மேல் குறிப்பிட்ட வரிகள் பொருந்திவிடுகிறது. என்ன செய்ய… அது சமூக நிலை….
போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் இந்த சூழ்னிலையை பொறுப்பென்று நினைப்பதை விடவும் ஊழ் எனபுரிந்திட வேண்டும். அந்த பக்குவம் தான் இந்த கொடிய வாழ்வை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.
ஒரு சில மாதங்களே வாழ்ந்து பேறுகால மரணமடைந்த மனைவி அகிலாண்டத்தின் இறுதி வார்த்தைகளை விடாப்பிடியாக நிறைவேற்றத் துடிக்கும் ராமையா, மகளின் உணர்வுகளையும் மதித்தல், பாலியின் வாக்குறுதியை காக்கும் பொருட்டு பிதுரார்ஜித சொத்துகளை இழந்து விடவும் துடித்தல், வையண்ணா தரும் சங்கடங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லவே முயற்சித்தல், மகள் குறித்த முடிவுகளை நாகேஸ்வர ஐயர் மேற்கொள்வதை அனுமதித்தல் என நுண்ணுணர்வு மிகுந்த நபராக இருக்கிறார்.
அறிவார்ந்த குழந்தையாக வளரும் பாலி, பால்யகாலத்தில் நிச்சயக்கப்பட்டவனை அறியும்போதும், பருவ வயதில் ஈர்க்கப்படுபவனிடமும் அணுகல்-விலகல் மனப்போராட்டத்தில் அவதியுறுகிறாள். நாயக்கர் மகனின் கடனுக்காக கச்சேரிகளுக்கும் உறுதியான சம்மதம் தெரிவிக்கிறாள்.
பாலியின் மீதான காதலை மறக்க முடியாமலும், அவளது விருப்பத்தை மீறி செயல்பட முடியாமலும் தவிக்கும் தங்கராஜ், வையண்ணாவை கொல்லவும் தயங்கவில்லை.
கிடைக்கும் நல்ல வேலையை புறக்கணித்து பாலியின் காதலுக்காக சென்னைக்கு படிக்கச் செல்லும் ராஜா, ஐயரின் எதிர்ப்புகளை ஏற்று கண்ணீருடன் விடை பெறுகிறான்.
ராமையாவுக்கு பல வழிகளிலும் ஆதரவு தரும் நாயக்கர் இறுதிவரை அக்குடும்பத்துடன் வாஞ்சையுடன் பழகுகிறார்.
தன்னலமின்றி காலம் முழுதும் தம்பியின் குடும்பத்திற்காக உழைக்கும் வடிவு, நாவலின் மற்றுமொரு வியப்பு.
கைம்பெண் ஆனபோதும், புதியதொரு காதலும் மறுக்கப்பட்ட நிலையிலும், உற்சாகத்திற்கு குறைவின்றி அணுக்கமான தோழியாக இருக்கிறாள் செல்லம்.
ஒருவர் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளுதல், பெண் குழந்தை பிறந்தால்
சிக்கலை ஏற்படித்தி புறக்கனிப்புகள் என….தி.ஜானகிராமன் அன்பு சார்ந்த வட்டங்கள், உறவுகள் கொன்ட'மலர்மஞ்சம்'…
No comments:
Post a Comment