#பி_வி_நரசிம்மராவின்_நூற்றாண்டு_விழா
——————————————————-
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆந்திராவின் முதல்வராகவும் இந்தியாவின் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பணிபுரிந்தவர்.
Tributes to former PM Shri PV Narasimha Rao Ji on his 100th birth anniversary.
He ushered in the era of Economic Reforms. The first Prime Minister from South India, he was an accomplished ‘polyglot ‘ as he knew 17 languages.
ராஜீவ் காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் மசோதா, நகர்பாலிகா மசோதா இறுதியாக இவர் காலத்தில் 73-வது அரசியலமைப்புச் சட்டமாக நடைமுறைக்கு வந்தது. அதன் பயனாக இன்றைக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் பெண்கள், பட்டியலின மக்கள், பூர்வ குடிகளும் பொறுப்பேற்று நிர்வாகத்தில் இருக்கின்ற வாய்ப்பு கிட்டியுள்ளது.
நாடளுமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டு இவர்
காலத்தில் அறிவிக்க பட்டது.
இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து, தனக்கு வழிநடத்த டாக்டர் மன்மோகன் சிங்கை இந்தியாவின் நிதியமைச்சராக நியமித்தார் நரசிம்மராவ்.
அந்தக் கட்டத்தில் பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக வேண்டியது. புதிய பொருளாதாரக் கொள்கையைப் படித்த, புரிதலுள்ள, அதை ஆய்வு நடத்திய பேராசிரியர் அளவில் இருப்பவர்கள் தேவைப்பட்டதால் நரசிம்ம ராவ் மன்மோகன்சிங்கை நிதி அமைச்சராக்கினார். பிற்காலத்தில் மன்மோகன் சிங் பிரதமரானார்.
கிட்டத்தட்ட 17 மொழிகளுக்கு மேல் அறிந்தவர். தன்னுடைய வரலாற்றை தி இன்சைடர் (The insider) என்ற புதினமாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
ஆந்திர அரசியலில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். இவர் காலத்தில் தென்னட்டி விஸ்வநாதன், சென்னா ரெட்டி, சஞ்சீவி ரெட்டி, வெங்கல் ராவ் எனப் பல தலைவர்கள் இருந்தாலும், ஆந்திரத்தில் சிறப்பாக ஆட்சியை நடத்தியவர்.
இவர் காலத்தில்தான் ஆந்திரத்தில் நக்சலைட்கள், மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை துளிர்விட ஆரம்பித்தன. பிறகு ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் ஜி பர்சியோடு இலங்கைக்குச் சென்று பணியாற்றி, இலங்கை தமிழர்கள் பிரச்சனைகளெல்லாம் கவனித்தது உண்டு.
1992-ல் இவர் பிரதமராக இருந்தபோது அவரைச் சந்தித்தேன். என்னுடைய உச்ச நீதி மன்ற வழக்கு கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, நெய்யாரோடு இணைக்கப்பட வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது அதை அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.
நல்ல திட்டம் தான், நிறைவேற்ற வேண்டிய திட்டம் தான், நானும் ஆந்திரத்துக்காரன் தான் தமிழ்நாட்டைப் பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், இன்றைக்கு பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றது. புதிய பொருளாதாரக் கொள்கைகளை நிலைநிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, பிற்காலத்தில் பார்க்கலாம் என்று அன்பாகவும் பாசமாகவும் அவர் குறிப்பிட்டதெல்லாம் உண்டு.
ராஜீவ் படுகொலைக்குப் பின் பல்வேறு சிக்கல்கள், பல்வேறு பிரச்சினைகள் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்தாலும், மிகவும் பொறுமையாக, அமைதியாக எடுத்துச் சென்றவர். ஒரு நல்ல பிரதமராக விளங்கியவர். அவர் மீது எதிர்வினைகளும் விமர்சனங்களும் இருந்தது.
1979, 80 என்று நினைவு. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில முடிவுகளை இந்திரா அவர்கள் எடுத்த போது, அந்த முடிவு உகந்ததல்ல என்று பழ. நெடுமாறன் டெல்லியில் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன் துளசி அய்யா வாண்டையார், அன்றைய எம்.எல்.சி தம்பி தோட்டம் சுந்தரேச தேவர் போன்றவர்கள்ளோடு
இந்திராவைச் சந்தித்து கூறிவிட்டு தொடர்ந்து அதற்காக குரலெழுப்பிக் கொண்டிருந்த போது, நெடுமாறனை சமாதானம் செய்ய நரசிம்மராவை சென்னைக்கு அனுப்பினார். அப்போது நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த நரசிம்மராவைச் சந்திக்க பழ. நெடுமாறனோடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகுவுடன் சென்றபோது பழ. நெடுமாறனின் கருத்துக்களை அமைதியாக நரசிம்மராவ் கேட்டு பல விளக்கங்களை அளித்து, காங்கிரசில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சரிபாதி வேட்பாளர்களை நெடுமாறனே முடிவு செய்யலாம் என்ற வாக்குறுதியை அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரசில் நெடுமாறன், மூப்பனார் என்ற பிரச்சனைகளும் இருந்தன. ஆனால், நெடுமாறன் நரசிம்மராவிடம் எனக்கு 50% வேட்பாளர்களை தேர்வு செய்யும் உரிமையை கொடுத்தது நன்றிதான். ஆனால், எனக்கு அது முக்கியமல்ல. எதிர்கால சில அரசியல் நலன்களை மனதில் கொண்டு நான் சொல்லும் விசயத்தை பரிசீலனை செய்யுங்கள் என்று தொடர்ந்து வாதிட்டார். இதை கண் முன்னால் இருந்து பார்த்தவன் என்ற நிலையில் இங்கு பதிவு செய்கின்றேன்.
அதன்பின்னர், 1984இல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவமனைக்கு ஒரு மாலைப் பொழுதில் 7 மணியளவில் வந்தார். அப்போது, நெடுமாறன், பாரமலை அடியேன் போன்றவர்கள் எல்லாம் இருந்தோம். ஜெயலலிதா, சத்தியவாணி முத்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அன்றைய அமைச்சர்கள் கே.ஏ. கிருஷ்ணசாமி, எச். வி. ஹன்டே போன்றோர்களெல்லாம் இருந்தோம். சோர்வாக எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு வெளியே வந்து நெடுமாறனைப் பார்த்து அருகே வந்து, "How are you Mr. Nedumaran? After a long time." என்று கேட்டுவிட்டு தனக்கே உரித்தான இயல்பான சிரிப்போடு சென்றார்.
தனது புத்தகமான *The Insider* இல் ஆந்திர அரசியலைப் பற்றியும், மூத்த காங்கிரஸ் தலைவர்களான பிரகாசம், நீலம் சஞ்சீவரெட்டி, பிரம்மானந்த ரெட்டி, லட்சுமிகாந்தம்மாள், சென்னா ரெட்டி, வெங்கல் ராவ், தென்னட்டி விஸ்வநாதன் போன்ற பல தலைவர்களுடைய பாத்திரங்களை வைத்து ஒரு புதினமாக ஆங்கிலத்தில் படைத்து 1998இல் வெளியிட்டுள்ளதை படிக்க சுவாரசியமாக இருக்கும்.
Remembering Shri PV Narasimha Rao Ji on his 100th birth anniversary. He is the man who remade India and laid the foundations of economic reforms in our country. He led the country during crisis.
Centenary of Sri P V Narasimha Rao. The prime minister who unshackled the Indian economy. Narasimha Rao was one of the 'old guard' of the Congress party, close to the Gandhi family. He was unique in being a Congress leader who was comfortable with computers at a time when the socialist minded Indian leaders considered computers to be an evil that will drain way the labour of India. Once Rao became prime minister he began a long and arduous process of freeing the Indian economy from its socialist shackles and the Congress party from its self-imposed shackles that connected it to the Nehru-Gandhi family. Rao was successful in the first. His failure to liberate the Congress cost him a place in history. He had to face the ignominy of being ignored by his own party at his death. In the years that followed, the Congress tried to wipe out his very memories. Pic. shows Narasimha Rao with the person he chose to execute his designs for liberating the Indian economy from socialism.
#PVNarasimhaRao
...
#பி_வி_நரசிம்மராவ்
#ஆந்திர_அரசியல்
#ஆந்திர_பிரதேசம்
#தெலுங்கானா
#பிரதம_மந்திரி
#தகுதியே_தடை
#p_v_narasimha_rao
#Andhra_Politics
#Andhra_Pradesh
#Telengana
#Prime_Minister
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2021.
No comments:
Post a Comment