Thursday, June 24, 2021

#*யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்-பாரத்* #*Federalism *



————————————
யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் பாரத் என்று அரசியல் சாசனத்தி்ல் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்கள் இணைந்து அமைக்கப்பட்ட அரசு.
இந்நிலையில் யூனியன் ஆப் இந்தியா பாரத் என்பதை அம்பேத்கர்
என்.கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே. எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, என். மாதவ ராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற அரசியல் சாசன வரைவு குழு- அரசியல் சாசனத்தை எழுதியவர்கள் அன்றைக்கு ஏற்றுக் கொண்டார்கள். ஆந்திராவை சேர்ந்த பி.என்.ராவின் உழைப்பும் அன்றைக்கு அதிகம்.

பாரத் என்றால் என்ன? யூனியன் ஆப் இந்தியா என்றால் என்ன? என்பதை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும் இன்றைக்கு.
இந்நிலையில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகளும் அந்தந்த வட்டார மக்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில், மத்தியில் ஒரு வலுவான ஆட்சியும் தேவை.

அதேபோல் மாநிலங்களிலும் சுய அதிகாரங்கள் கொண்ட மாகான அரசாங்கங்கள் தேவை. எனவே யூனியன் ஆப் இந்தியா- பாரத் என்று அம்பேத்கரும், பி.என்.ராவும் அன்றைக்கு எழுதினார்களே அதனுடைய நோக்கமும், அதனுடைய விரிவான பார்வையும் குறித்து, ஒரு விசாலமான விவாதத்தை நடத்த வேண்டிய நேரம் இது.கடந்த காலத்தில் பிரிவு 356 தவறாக பயன்  படுத்தப்பட்டதை குறித்தும் மாநிலங்களுக்கு சமன்பாடு இல்லா நிதி ஒதுக்கீடு போன்ற டில்லி செய்தவற்றையும் விவாதிக்க வேண்டும் 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSR_Posts
24-6-2021

———————————————————

அரசியலமைப்புச் சட்டத்தில் 395 பிரிவுகள், 22 பாகங்கள், எட்டு அட்டவணைகளைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கிய அரசியலமைப்பு  நிர்ணய சபை ஒரு இடத்தில் கூட மத்திய அரசு என்று கூறவில்லை. 
டிசம்பர் 30, 1946 அன்று அந்த மன்றத்தின் நோக்கங்கள், லட்சியங்கள் குறித்த ஒரு தீர்மானத்தை அறிமுகம் செய்தார். சுதந்திரமான,  இறையாண்மை கொண்ட குடியரசில் இணையத் தயாராக இருக்கும் பிரதேசங்களின் அமைப்பு ரீதியாக union of  states - ஒன்றியமாக இந்தியா இருக்கும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.  
சபை உறுப்பினர்கள் மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு மைய அரசும், தனக்கான அதிகமுள்ள மாகாணங்களும் இருக்க வேண்டும் என்றனர்.
சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர், இந்தியா மாநிலங்களின்  ஒன்றியம் என்பதால் ஒன்றியம் என்கிற சொல் வேண்டுமென்றே பயன்படுத்தப் பட்டது. இதன் மூலம் மாநிலங்களுக்கு பிரிந்து போகும் உரிமை (Right to self determination)இல்லை என்று உணர்வு பூர்வமாக தெளிவாக கூறினார். அதாவது ஒன்றியம் என்பது அழிக்க முடியாததாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.இதற்கு சபையில் முஸ்லிம் உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.



அனைத்து மாகாணங்களையும் மைய அரசின் ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். 

அதற்கு அம்பேத்கர் அளித்த பதில்:
“ஒன்றியம் என்பது மாநிலங்களை இணைத்து நெகிழ்வுத் (flexibility) தன்மையுடன் கட்டப் பட்ட அமைப்பல்ல. மாநிலங்கள் அதிகாரங்களைப் பெற்றுச் செயல்படும் ஏஜென்சிகளும் அல்ல. ஒன்றியமும் மாநிலங்களும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப் பட்டவை. அதிலிருந்தான் அவற்றுக்குரிய அதிகாரங்களைப் பெறுகின்றன. அவற்றின் களத்திற்குள் ஒன்று மற்றதற்குக் கீழ்ப் படிந்ததல்ல. ஒன்று மற்றதுடன் ஒருங்கிணைந்து separation of powers , division of powersசெயல்படும் அதிகாரம்தான் இருக்கிறது.”

(இன்றைய ஆங்கில இந்துவில், முகுந்த் பி.உண்ணியின் (வழக்கறிஞர், உச்ச நீதி மன்றம்)பத்தியில்)

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...