Wednesday, June 16, 2021

கடந்த வந்த நினைவுகளை மட்டுமே நெஞ்சோடு வைத்துக்கொண்டிருந்தால், சேர்ந்திருப்பவரே நிகழ் காலத்தை பார்க்க முடியாது.

கடந்த வந்த நினைவுகளை மட்டுமே நெஞ்சோடு வைத்துக்கொண்டிருந்தால்,
சேர்ந்திருப்பவரே நிகழ் காலத்தை பார்க்க முடியாது.

கோபங்கள் கூட மன்னிக்கப்படலாம். 
ஆனால் உதாசினங்கள் ஒருபோதும் மன்னிக்க முடியாது.

விலகி சென்ற உறவு  இன்னொரு பொழுதினில் தேடி வரலாம். ஆனால் பிரிந்து  போன ஒரு நொடியை (காலத்தை)மறு மறை சந்திக்கவே முடியாது.  

மகிழ்ச்சியாக எவரும் நீண்ட தூரம் பயணிப்பதில்லை.துன்பமும்  வாழ்க்கையில் பல பாடங்களையும், வழியும் தருகிறது . 

வலியை தாங்க முயற்சித்தால் இதயம் உடைந்து போகலாம் அதை வலிமையாக எடுத்து  கொண்டால் சிலவேளை சிகரத்தையும் தொடலாம் .

விருப்பமானவர்களோ நெருக்கமானவர்களோ நிரந்தரமானவர்கள் அல்ல - 
தேவை முடிந்த பின் அவர்களே தொலைந்து விடுவார்கள்.



எல்லாமே இருக்கிறது என்று ஆணவத்தோடு இருந்தாலும் மரணம் எவரையும் விட்டு வைக்காது. இந்த உலகத்தில் நிரந்தரமான வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை...

பிறந்ததை  அர்த்தப்படுத்தி, நேர்மையாக,பிறர்க்கென வாழும் வரம்
வேண்டும்.

"எல்லாமே சில காலம் தான்"

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...