Saturday, June 5, 2021

#*கோதாவரி காவேரி இணைப்புப் பற்றிய ஆதியும் அந்தமும் இதுதான்*. *இது தொடர்பாக இன்றைக்கு பலரும் பலவிதமாகக் கூறுகின்றனர்*. *ஆனால், முப்பது ஆண்டுகாலமாக இந்தத் திட்டம் வரவேண்டும்* *என்பதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றவன்* *அமைதி காக்கின்றேன் .வேடிக்கைதான்....* *என்ன சொல்ல...*

#*கோதாவரி காவேரி இணைப்புப் பற்றிய ஆதியும் அந்தமும் இதுதான்*. *இது தொடர்பாக இன்றைக்கு பலரும் பலவிதமாகக் கூறுகின்றனர்*. *ஆனால், முப்பது ஆண்டுகாலமாக இந்தத் திட்டம் வரவேண்டும்* *என்பதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றவன்*
*அமைதி காக்கின்றேன் .வேடிக்கைதான்....*
*என்ன சொல்ல...*
————————————
வானம் பார்த்த கந்தக கரிசல் பூமியில் பிறந்ததால் விவசாயிகளுக்கு பயிர்செய்ய நீர் ஆதாரம் இல்லாமல் திண்டாட்டம். குடிப்பதற்கும் சவர்நீர் தான் கிடைக்கும். சின்ன வயசிலிருந்து ஆதங்கத்தைப் போக்க வெண்டுமென்ற தீர்க்கத்தோடு வழக்கறிஞராகி பல ஆண்டுகளுக்குப் பிறகு 1983 இல் தேசிய நதிகளை இணைக்க வெண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடுத்தேன். அந்த வழக்கின் சாரம் என்னவென்றால் வடக்கே பாரதி குறிப்பிட்டதுபோல வெள்ளமாய் சென்ற கங்கை நதியைத் தென்முகமாய்த் திருப்பி கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி, குமரி, நெய்யாற்றோடு தொட்டு இணைக்கப்பட வேண்டுமென்று வழக்கு தொடுத்தேன். அதாவது கங்கை குமரியைத் தொடவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல். குறிப்பாக இன்றைய வானம்பார்த்த விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வடபகுதிக்கு நீர் ஆதாரங்களைப் பெருக்குவதுதான் நான் தொடுத்த வழக்கின் நோக்கம். 
​இந்த வழக்கில் மேலும், கேரளத்திலிருந்து அச்சங்கோயில், பம்பை நீர்ப்படுகை சாத்தூரிலுள்ள வைப்பாற்றுடன் இணைத்தால் அன்றைய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் இன்றைய விருதுநகர் மாவட்டம் பயன்பெறும். அதுமட்டுமல்ல அழகர் அணைத்திட்டம் செண்பகவல்லி அணை புணரமைப்பு இவையாவும் இந்த வட்டாரங்களை வளப்படுத்தும் என்பதற்காக நான் வழக்குத்தொடுத்தேன். 
​கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் 50 நதி தீரங்களில் 15 நீர்ப்போக்கினைக் கிழக்கே திருப்பினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு வரை நீலகிரி போன்ற மாவட்டங்கள் நீர்வளம் பெருகி அந்த மாவட்டங்கள் பயன்பெறும். 30ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கினை உச்சநீதி மன்றம் விசாரணையை நடத்தி  கடந்த 2012 பிப்ரவரி 27ஆம்தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு இதுகுறித்து பிரதமர்களை, மத்திய அமைச்சர்களைச் சந்தித்து என் தளத்தில் பலமுறைப் பதிவுசெய்துள்ளேன். இப்போது அதைப்பற்றி சொல்லுவது தேவையில்லை. என்னுடைய முயற்சிக்குப்பின் மத்திய அரசு நவலவாலா குழுவை நியமித்தது. அதனுடைய பரிந்துரைதான் கிருஷ்ணா-காவேரி இணைப்பு.ஶ்ரீ ராமுலு குழுவும்
ஆய்வும் செய்யது.

தற்போது ஒரு பகுதியாக (phase) கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை  மத்திய அரசு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.  இச்சம்பள்ளியில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்லணை வரை 1,211 கி.மீ. தொலைவுக்கு கோதாவரி - காவேரி இணைப்புத்திட்டம் உள்ளது.கிட்டத்தட்ட இதன் மதிப்பு ₹85962 கோடியாகும்.  தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாகார்ஜுனா சாகர் அணை மற்றும் ஆந்திராவில் உள்ள சோமசீலா அணை வழியாக தமிழகத்தின் கல்லணைக்கு கால்வாய்க்கு கோதாவரி நீர் கொண்டு வரும் திட்டம்.இதில் கிருஷ்ணா, பெண்ணா ஆகிய நதிகளும் இணைகின்றன..  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள 143 நாட்களில் 247 டிஎம்சி தண்ணீர் விடுவிக்கப்படும்.இதில் வீணாகும் நீர் போக மீதமுள்ள 230 டிஎம்சி நீரில் தெலங்கானாவுக்கு 65.8 டிஎம்சியும், ஆந்திராவுக்கு 79.92 டிஎம்சியும், தமிழகத்துக்கு 84.28 டிஎம்சி நீரும் கிடைக்கும் என அறிக்கையில் சொல்கிறார்கள்.இந்த திட்டத்தை ஜல்சக்தி துறையின் கீழே வரும் NWDA இறுதி செய்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தை தமிழகம் வரவேற்கின்றது. ஆந்திரம் ஆதரித்தாலும் மவுனம் காக்கின்றது. சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டுகின்றது.




ஆனால் எனக்கு என்ன மன வருத்தமென்றால் குமரி மாவட்டம் நெய்யாறு வரை இணைக்கவில்லை என்பதுதான். ஆனால் தாமிரபரணி இணப்புத்திட்டம் கடந்த 2008-2009இல் கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு,  பிறகு கிடைப்பில்போட்டு தற்போது துவங்கியுள்ளது என்பது சற்று ஆறுதல். எப்படியோ ஒரு முன்னேற்றம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இந்த இணைப்பு குமரிமுனை வரை  வந்தால் நான் ஆற்றிய பணிகளுக்கு நிறைவாக இருக்கும்.

#GodavariRiver_Cauveri_link

#KSRPostings
#KSRadhakrishnan_postings
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
5-06-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...