———————————————————-
இவருடன் அரசியலை கடந்து பல விடயங்களை விவாதித்து உள்ளேன். என்னுடைய நிமிர வைக்கும் நெல்லை நூலுக்கு அவரே வேண்டி விரும்பி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நல்ல அணிந்துரையை வழங்கினார்.
வரலாறு, தொன்மை பற்றி அதிகமாக சிந்திப்பவர். நாணயவியல் அறிஞர் எதையும் நிதானமாக அமைதியாக அடுத்தவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு உரிய விளக்கத்தை தரக்கூடிய பண்பாளர். மறுமலர்ச்சி திமுக துவங்கிய காலகட்டங்களில் 1993-ல் தொலைபேசியில் அடிக்கடி விசாரிப்பார். நேரிலும் பல விசயங்களை அந்த காலகட்டங்களில் பேசியதுண்டு. அப்போது சில நேரங்களில் மாலை 7 மணி வாக்கில் சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் வரவழைத்து அவருடன் பேசிக்கொண்டு சென்றெல்லாம் உண்டு.
தமிழ்நாடு இன்றைய எல்லைகள் அமைந்த 50 ஆண்டுகள் நிறைவு விழா சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் 2006-ல் நடத்தி நான் வெளியிட்ட நூலில் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவதற்கு தினமலர் ஏட்டின் நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் ஆற்றிய பணிகளை பற்றி நான் எழுதியதை படித்துவிட்டு நன்றியும் சொன்னார்.என மீது அன்பு காட்டியவர்.
ஆழ்ந்த இரங்கல்.
No comments:
Post a Comment