Monday, September 1, 2025

#சோனியாகாந்திஇந்தியக்குடியுரிமை பெறாமலே பிரதமர் இல்லத்தில் பல வருடங்கள் தங்கியிருந்த விவகாரத்தை நான் பலமுறை சொல்லி வந்துள்ளேன்.

 #சோனியாகாந்திஇந்தியக்குடியுரிமை பெறாமலே பிரதமர் இல்லத்தில் பல வருடங்கள் தங்கியிருந்த விவகாரத்தை நான் பலமுறை சொல்லி வந்துள்ளேன். இதுகுறித்து குல்தீப் நையார் 1980 வாக்கில் அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்பே சண்டே ஆங்கில வார இதழில் சோனியா காந்தியின் இந்திய இருப்பு குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருந்தார். தேவராஜ் அர்ஸ் அவரிடம் இது குறித்து இந்திரா காந்தி அவர்களே மன வருத்தப்பட்டதாக ஒரு தகவலும் இருக்கிறது. இந்த விஷயத்தை நெடுமாறன் அவர்கள் அறிந்து பிறகு அவரே என்னிடம் சொன்னதுண்டு. . இவ்வளவு எல்லாம் பிரச்சனைகள் இருக்க நான் இந்தியன் என்று சோனியா காந்தி கொடிபிடிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்த பிறகுதான் இந்திய சிட்டிசன் உரிமை பெற்று சோனியா காந்தி அரசியல் காட்சிக்கே வருகிறார். வந்தது மட்டுமல்ல அக்காலங்களில் இந்திரா காந்திக்கு சோனியா காந்தி எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது இளைய மருமகளான மேனகா காந்தி கூட சோனியா காந்தியின் நிர்பந்த நெருக்கடியில் தான் குடும்பத்தை விட்டு தன் குழந்தையுடன் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார். அக்காலத்தில் எல்லாம் தெரிந்த இந்திரா காந்தி என்ன இருந்தாலும் தனது மருமகள் என்று சோனியாவின் நிர்பந்தங்கள்பலவற்றையும் பொறுத்துக் கொண்டதை நாடறியும்! . நானும் இந்தியன் தான் என்று இன்று கொடி பிடிக்கிறார் சோனியா! என்னத்தைச் சொல்ல!

"#பேய்அரசாண்டால்பிணம்தின்னும்சாத்திரங்கள்’’ #பாரதி

 "#பேய்அரசாண்டால்பிணம்தின்னும்சாத்திரங்கள்’’

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்'- என்கிற குறள்மொழி உண்டு. இன்றைய ஸ்டாலின் அரசு போகும் போக்கு அப்படித்தால் இருக்கிறது.
13 நாட்களாக வெயில் மழையில் சாதாரண கூலி உயர்வுகூட கேட்கவில்லை இருக்கிற கூலியை பறிக்காதே என்று போராடிய தூய்மை பணியாளர்களை நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி அப்புறப்படுத்தி கைது செய்துள்ளது சென்னை காவல்துறை.
தாக்குதலை படமெடுத்த பெண் வழக்கறிஞர் நிலவுமொழி அவருடன் வந்த இன்னொரு வழக்கறிஞர் தாக்கப்பட்டுள்ளார். கை எலும்பு முறிந்துள்ள நிலையில் அலைகழிக்கப்படுவதும், கைது செய்து அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் தலையிட்டு விடுவிக்க வேண்டிய சூழலும் உள்ளது.
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பார்கள் அதுபோல் கூலித்தொழிலாளர் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடும் நேரத்தில் காவல்துறை அவர்களிடம் அராஜகமாக நடக்கும்போது முதல்வர், துணைமுதல்வர் கூலி திரைப்படத்தை ரசித்து பார்த்து அதை புகைப்படமும் எடுத்து போடுவதும், ரிவ்யூ போடுவதும் வெந்தப்புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் அல்லவா? கூலித்திரைப்படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்கி வீணடித்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கூலி பிரச்சனைக்காக போராடும் தூய்மை பணியாளர்களுக்காக 30 நிமிடம் ஒதுக்க மனமில்லையா?
போராட்ட குழுவினருடன் துறைக்கு சம்பந்தமே இல்லாத ஆணவ அமைச்சர் சேகர்பாபு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
துறை அமைச்சர் நேரு எங்கே போனார், முதல்வர்தான் வர முடியவில்லை, சென்னையில் இருக்கும் துணை முதல்வருக்குக்கூட சந்திக்க மனமில்லையா?
போராடும் மக்களுக்கு துணை நின்றவர்களையும் தாக்கி கைது செய்தது ஏன், வழக்கறிஞர்களை ஏன் கைது செய்துள்ளீர்கள் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு கலைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஆக்டிங் சி.எம் ஸ்டாலின் எடுத்த தவறான நடவடிக்கையால் போலீஸ் வழக்கறிஞர் மோதல் நடந்தது. தற்போது பெண் வழக்கறிஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதும், அதில் நிலவுமொழி கை முறிந்துள்ளது என்று சொல்லியும் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பாததும், வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு போராட்டம் மீண்டும் எழுந்ததற்கு முதல்வர் கையிலிருக்கும் சென்னை காவல்துறை தானே காரணம்.
2 மண்டலங்களில் போராட்டம் நடத்திய மக்களைக்கூட கையாள தெரியாத வெற்று விளம்பர அரசாகத்தான் இந்த அரசு உள்ளது. இன்று இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் பெரும் பிரச்சினை ஆகி உள்ளது. இதற்கு இவர்களின் ஆணவமே காரணம். திமுகவின் தலைவர்கள் அனைவரிடம் இந்த ஆணவம் உள்ளது. இதற்கு விடை 2026-ல் கிடைக்கும்.

14 august

 கூலி படத்துக்கு

வாழ்த்து
கூலி உரிமை கேட்பவனுக்கு
அரெஸ்ட்டு
"ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்" என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
இப்போது விடுதலை ….
சில அறிவிப்புகள்⁉️
நிரந்தர வேலையை கொடுங்கனு கேட்டா அத விட்டுட்டு மத்த எல்லாம் பண்றனு சொல்றாங்க

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அண்ணன் #மகாதேவன்பிள்னையின் நூற்றாண்டு

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அண்ணன் #மகாதேவன்பிள்னையின் நூற்றாண்டு

கன்னியாகுமரி மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்த மரியாதைக்குரிய அண்ணன் மகாதேவன் பிள்ள அவர்களது நூற்றாண்டு விழாவை நாகர்கோவிலில் அமைதியாகக் கொண்டாடுகிறார்கள். அண்ணன் மகாதேவன் பிள்ளை அவர்கள் பெருந்தலைவர் காமராஜரோடு கன்னியாகுமரிக் கடற்கரையில் அவருடன் பேசிக்கொண்டே நடைப்பயிற்சி செய்தவர். அதேபோல் காமராஜர் இடைத்தேர்தவில் நின்ற போது அவர் மற்றும் ஏபிசி வீரபாகு பழ நெடுமாறன் (அப்போது காங்கிரஸ் இருந்தார்) அவரும் கோ.முத்து கருப்பன் போன்றோரும் காமராஜருக்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். சில முக்கியமான வேலைத் திட்டங்களை இவர்களிடம் தான் பெருந்தலைவர் கொடுப்பார். இன்றைக்கு மகாதேவன் பிள்ளைஅவர்களது நூற்றாண்டு விழா! பாரம்பரியக் காங்கிரஸ் என்று சொல்லிக் கொள்பர்கள் தமிழ்நாடு அளவில் அதைக் கொண்டாடி இருக்க வேண்டும். தவற விட்டு இருக்கிறார்கள்.

“Of two cigars, pick the longest and the strongest.” — The Wit and Wisdom of Winston #Churchill (James C. Humes, ed.)

 “Of two cigars, pick the longest and the strongest.”

— The Wit and Wisdom of Winston #Churchill (James C. Humes, ed.)
Churchill smoked 8–10 cigars a day , often letting them smolder to the nub. Over his lifetime, he is estimated to have consumed more than 250,000 cigars—making the cigar as much a part of his public image as his bow tie and bulldog stare.
Image: Churchill in the early 1930’s.

கலைஞர் வரை இருந்த உண்மையான திமுகவில் அவரோடு நெருங்கியிருந்தவர்களில் துரைமுருகன் தொட்டு என் உட்பட அப்போது இருந்தவர்களைக் கட்சிக்காரர்கள் மிக மரியாதையுடன் மதிப்பார்கள்.

 கலைஞர் வரை இருந்த உண்மையான திமுகவில் அவரோடு நெருங்கியிருந்தவர்களில் துரைமுருகன் தொட்டு என் உட்பட அப்போது இருந்தவர்களைக் கட்சிக்காரர்கள் மிக மரியாதையுடன் மதிப்பார்கள். இப்போது அந்த மரியாதையும் இல்லை. இவர்கள் யாரையும் மதிப்பதும் இல்லை. டி ஆர் பாலு வரை கூட அந்த மரியாதை இல்லை.

ஸ்டாலின் மகன் ஸ்டாலின் மருமகன் யாரோ ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி என்று ஒரு பெயரில் இருக்கிறாராம் போக ஸ்டாலினின் துணைவியார் இவர்கள் மட்டும் போதும் என்கிற அளவில் திமுக வின் பரந்துபட்ட ஆளுமை கவுரவம் மற்றும் செல்வாக்கு யாவும் குறுகிப் போய்விட்டது என்று நீண்ட காலம் திமுகவில் இருக்கும் முக்கிய நண்பர் சொல்கிறார்.
இதையெல்லாம் விட இன்றைக்கு அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான் திமுகவில் அதிகம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் இது திமுகவின் பழைய ஸ்திரத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று வருத்தப்பட்டார். ஏனெனில் மிக மோசமான சந்தர்ப்பவாதிகளும் திமுகவின் வரலாறு தெரியாத புதிய நபர்களும் திமுகவிற்குள் வந்து அதை கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகவும் அவர் ஆழ்ந்த யோசனையுடன் பேசி முடித்தார். என்ன சொல்ல?

14 august

 சேகர் பாபுவுக்கு இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கியூப ஆதரவு மேடையில் எதற்கு நாற்காலி? பிடலுக்கு அவமானம்.

இந்த ஸ்டாலினுக்கும், சேகர் பாபுக்கும் உலக வரைபடத்தில் கியூப எங்கே இருக்கிறது என தெரியுமா? கேஸ்ட்ரோ யார் என்றாவது தெரியுமா?

#தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...

  #தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...