Saturday, November 5, 2022

இமாச்சல பிரதேசம் ஷியாம் சரண் நேகி. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்….

இமாச்சல பிரதேசம் ஷியாம் சரண் நேகி. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இன்று அதிகாலை தனது 106- ஆவது வயதில் மரணமடைந்தார். இதுவரை 34 முறை தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்.

ஷியாம் சரண் நேகியின் மறைவைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ட்விட்டரில் அறிவித்தது.

எதிர்சவரும்ட்ட மன்றத் தேர்தலுக்காக ஷியாம் சரண் நேகி, தபால் மூலம் தனது இறுதி வாக்கைப் பதிவு செய்தார். இதற்காக அவரை கின்னூர் துணை ஆணையர் அவருடைய இல்லத்தில்கவுரவித்தார். ஆழ்ந்த இரங்கல்.



#*மூத்தவழக்கறிஞர் என்டிவி #நூற்றாண்டு*!

*தமிழகத்தில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞராகவும், சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கியவர் மறைந்த என்.டி.வானமாமலை. அவருடைய நூற்றாண்டு. அவரைப் பற்றிய எனது கட்டுரை இன்றைய (5-11-2022)தினமணியில்*...

#*மூத்தவழக்கறிஞர்
என்டிவி
#நூற்றாண்டு*!
————————————
இந்த ஆண்டு தெற்குச் சீமையில் பிறந்த மூத்த வழக்கறிஞர் நாங்குநேரி திருவேங்கடாச்சாரி வானமாமலைக்கு நூற்றாண்டு. நெல்லைச் சீமையில் காருகுறிச்சி அருணாசலம், கு.அழகிரிசாமி, தொமுசி, கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் பாளை சண்முகம் மட்டுமல்லாது, எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரத்தில் பிறந்த நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கும் இந்த ஆண்டுதான் நூற்றாண்டு.  நடிகமணி டி.வி.நாராயணசாமி எம்.ஜி.ஆரை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தியவர். தொடக்க காலத்தில் கலைஞர் திருவாரூரில் இருந்தபோது, அண்ணாவிடம் கலைஞருடைய ஆற்றல்களை எடுத்துச் சொன்னவர். அதுமட்டுமல்ல, தி.மு.க.வில் கண்ணதாசனோடு நடிகமணி பணி செய்ததை கவிஞரே பாராட்டியுள்ளார். ஈ.வி.கே.சம்பத்துக்கும் அண்ணாவுக்கும் பிரச்னைகள் ஏற்பட்டபோது, காவலர் கூட்டத்தை நடத்தியவர்களில் நடிகமணியும் ஒருவர். நூற்றாண்டு காணும் இவர்கள் அனைவரும் எங்களின் நிமிர வைக்கும் நெல்லை மண்ணின் மைந்தர்கள்.



தமிழகத்தில் ஞானபீடம் பெற்ற இருவரில் ஒருவர் அகிலன். அவருக்கும் நூற்றாண்டுதான். ஆனால் அவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூர். அகிலனுடைய நூற்றாண்டு விழாவை அவருடைய பெருங்காளூர் கிராமத்தில் அண்ணன் புலவர் மதிவாணன் நடத்தியதாக நானறிந்த வரையில் தகவல். இத்தனை ஆளுமைகளுடைய நூற்றாண்டு இந்த வருடம். இவர்களைப் பற்றிய ஒரு பேச்சு பரவலாக, விசாலமான தளத்தில் இல்லையே என்பதுதான் வருத்தம். போலியாக சில நபர்களை பிம்பங்களாகக் கட்டமைத்துக் கொண்டாடுவது, இங்கு வாடிக்கையாகிவிட்டது. பாரதியினுடைய, ‘விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய்... எனக்குரை யாயோ?’ என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
நூற்றாண்டு காணும் வழக்கறிஞர் என்.டி.வி.யைப் பற்றி 50 - களின் இறுதிகளிலேயே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் தந்தையாருக்குத் தெரிந்தவர். பிற்காலத்தில் அவருடன் நெருக்கமாகப் பழகி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரோடு வழக்குகள் நடத்தக் கூடிய வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன.  
சற்று மங்கலான நினைவு, 1959 – இல் ஒருமுறை நெல்லையில் அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இருந்த நீதிமன்றத்துக்கு எனது தந்தையார் என்.டி.வி.யைச் சந்திக்கச் சென்றபோது, என்னை அழைத்துச் சென்றார். அப்போது, இளமையாக இருந்த என்.டி.வி.யை வழக்கறிஞர் உடையோடு பார்த்து நான் பிரமித்ததுண்டு. நெல்லையில் அன்றைக்குப் புகழ்பெற்ற சந்திரவிலாஸ் ஓட்டலுக்கு எங்களை அழைத்துச் சென்றது எல்லாம் இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. நெல்லை நீதிமன்றத்தில் என்.டி.வி.,      செல்லப்பாண்டியன், பாலாஜி என்ற சிறப்பான குற்ற இயல் சட்ட வழக்கறிஞர்கள் என அறியப்பட்டனர். அப்போது நரசிம்மபாரதி என்பவர் மாவட்ட நீதிபதியாக இருந்தார்.  

அன்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பிரமுகராகவும் என்.டி.வி. வலம் வந்தார். பாளை ஜவஹர் மைதானம், நெல்லை டவுண் காந்தி சிலை அருகே நடக்கும் கூட்டங்கள், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, அம்பை என அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட ஊர்களில் நடக்கும் கூட்டங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் என வடக்கே இருந்து அன்றைய கேரளாவில் இருந்த குமரி மாவட்ட எல்லை களியக்காவிளை வரை உள்ள ஊர்களில் நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் எல்லாம் என்.டி.வி. இரவில் சென்று உரையாற்றுவார். அப்போது அவருடைய உரைக்கு பெரிய வரவேற்புக் கிடைத்தது.
பகலில் வழக்கறிஞர் பணி; இரவில் கட்சிப் பணி என்று இளமைக்காலத்தில் கடந்து வந்தவர். ஆர்.நல்லகண்ணு, ப.மாணிக்கம், பாலதண்டாயுதம், ஏ.நல்லசிவன், ஐ.மாயாண்டிபாரதி, ஆர்.எஸ்.ஜேக்கப், மீனாட்சிநாதன் உள்ளிட்ட 51 பேருக்கு மேல் உள்ளவர்களின் மீது, 1952 - இல் கம்யூனிஸ்ட்களின் மீது நெல்லை சதி வழக்கு தொடுக்கப்பட்டு அவர்கள் கடுமையான தண்டனைக் கைதிகளாக இருந்தனர். அப்போது, நெல்லை வழக்குமன்றத்தில் வழக்கு நடத்தி என்.டி.வி. அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். அது அன்றைக்குப் பெரிய செய்தியாகப் பேசப்பட்டது.
அதேபோல, கம்யூனிஸ்ட்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏன் ஆந்திரம், மலபாரிலிருந்து வந்து எட்டயபுரம் வட்டாரத்தில் உள்ள பிதப்புரம், சிந்தலக்கரை, குளத்துள்ளாபட்டி, கோட்டுர், கரந்தை என கோவில்பட்டி பல பகுதியில் உள்ள பல கிராமங்களில் தலைமறைவாக இருந்த நேரத்தில், அவர்களுக்குப் பாதுகாவலராக இருந்தவர் என்.டி.வி. எனவே கோவில்பட்டித் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் வெற்றி பெறும். இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சோ.அழகிரிசாமி தொடர்ந்து வெற்றி பெற்றார். இதற்குக் காரணம் என்.டி.வி. போன்றவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது, என்.டி.வி. சி.பி.ஐ.லேயே தங்கிவிட்டார். நல்லகண்ணு, நா.வானமாமலை போன்றவர்களோடு சேர்ந்து தான் பிறந்த  நாங்குனேரியிலுள்ள ஜீயர் மடத்துக்கு எதிராக சாமானிய மக்களைப் பாதுகாக்கவும் போராட்டங்கள் நடத்தியதெல்லாம் உண்டு.  
 இவருடைய தந்தையார் நா.திருவேங்கடாச்சாரியார் கல்கத்தாவில் தோல் தொழிற்சாலையை நடத்திய தொழிலதிபர். கல்கத்தாவில்தான் என்.டி.வி. பிறந்தார். 

வீர வைணவ குடும்பத்தைச் சார்ந்தவர்.  பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் இராசயனத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞரானார். சென்னையில் இவர் விடுதியில் தங்காமல் இவர் தந்தையார் விரும்பியபடி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரே உள்ள நாங்குனேரி ஜீயர் மடத்தில் தங்கித்தான் பட்டங்களைப் பெற்றார். அப்போது அவரின் குடும்பப் பாரம்பரியப்படி தலையில் குடுமி, கையில் நாலாயிர திவ்ய பிரபந்தந்தத்தை வைத்துப் படித்துக் கொண்டே இருப்பார். இது அவருடைய இளமைக்காலம்.
அந்தண சமுதாயத்தைச் சேர்ந்த பலர் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தனர். அவர்களைப் போலவே கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் என்.டி.வி. சேர்ந்தார். புதுமையான கருத்துகள், லெனினின் தாக்கம், மார்க்சிய சிந்தனைகள் இவர் மனதை ஆக்கிரமித்தன. 

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 1964 – இலில் இருந்து மத்திய முன்னாள் அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தோடு இணைந்து கிரிமினல் வழக்கறிஞராகப் பணிகளை மேற்கொண்டார்.  

என்.டி.வி. அவர்களின் வழக்கறிஞர் அலுவலகத்தில் அசோக்குமார், கே.என்.பாஷா, சுதந்திரம் போன்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். கே.என்.பாஷாவும், சுதந்திரமும் பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்புக்கு வந்தனர்.
அந்த காலகட்டத்தில் நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் என்.டி.வி.,  ஆஜர் ஆனார்.தலைவர் கலைஞர் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கலைஞரிடம் குறுக்கு விசாரணை நடத்தியவரும் இவரே.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிக்குச் சென்றபோது, என்னைத் தட்டிக் கொடுத்தவர் என்.டி.வி. எனக்கு இஸ்கஸ் - இல் (இந்தோ சோவியத் நட்புறவுக் கழகம்) பணியாற்ற பொறுப்புகளைத் தந்தார். மதுரையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடந்த இஸ்கஸ் மாநாட்டில் ராஜபாளையம் அலெக்ஸும் நானும் முக்கிய பணியாற்றியதை என்.டி.வி. பாராட்டியதும் உண்டு. இஸ்கஸ்ஸில் அன்றைக்கு என்.டி.சுந்தரவடிவேலு, ஜெயகாந்தன், சமுத்திரம், சிற்பி, மதுரை டாக்டர் திருஞானம் என பல நிர்வாகிகள் இருந்தனர். இன்றைக்கு சென்னை சோவியத் ரஷ்யா அரங்கத்தில் பொறுப்பாளராக இருக்கிற தங்கப்பனுடைய பணி பெரிதானது.  

கீழ்ப்பாக்கம் மாணிக்கேஸ்வரி சாலையில் இருந்த என்.டி.வி. இல்லத்துக்கு எண்ணிலடங்காமுறை நான் சென்றது உண்டு. மூத்த வழக்கறிஞராக அவரை வைத்து பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தியதும் உண்டு. வெறும் தந்தியை வைத்துக் கொண்டு, வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் தள்ளுபடி செய்த நிலையில் - இனி தூக்குத் தண்டனைதான் என்ற நிலையில் – வைகோ மற்றும் என்னுடைய நீதிமன்றப் பணிகளை வைத்து என்.டி.வி. வாதாடி, குருசாமியின் தூக்குக் கயிறை அறுத்துத் தூக்கிலிட்டார் என்பதெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவை. இன்றைக்கு தூக்குத் தண்டனையை ஒழிப்போம் என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இத்தனை வசதிகள் இல்லாத அன்றைக்கு தூக்குத் தண்டனை கைதியைக் காப்பாற்றியது நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாகும். இதில் என்.டி.வி.இன் பங்கு முக்கியம். இந்த வழக்கில் வழக்கறிஞர் கட்டணம் கூட வாங்க அவர் மறுத்துவிட்டார்.  
அதைப்போல, வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாண்டிபஜார் வழக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களின் மீதான பல வழக்குகள், வேறு சில வழக்குகள் என தொகுத்தால் அவையே பெரும் பட்டியலாகிவிடும்.

இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழகக் கிளையின் செயலாளர்களாக என்னையும் வழக்கறிஞர் கீதா ராமசேஷனையும் நியமித்தார். இந்த அமைப்பின் தமிழக நிர்வாகிகளாக அன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டி, என்.டி.வி., ப.சிதம்பரம், கே.டி.கோசல்ராம் சகோதரர் கே.டி.பால்பாண்டியன்,  ஆர்.காந்தி,      வழக்கறிஞர் தண்டபாணி என சில முக்கியமானவர்களெல்லாம் இடம் பெற்றனர். அப்போது இந்திராகாந்தி படுகொலை நிகழ்ந்தது. இந்த அமைப்பின் சார்பில் நானும் கீதா ராமசேஷன் போன்றவர்கள் எல்லாம் கோவையில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களைச் சந்தித்து ஆய்வு செய்து அறிக்கையாக அளித்தோம். அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் என்.டி.வி.யும், ப.சிதம்பரமும், கே.டி.பால்பாண்டியனும் வாதாடி கோவை சீக்கியர்களுக்கு அவர்கள் பாதிக்கப்பட்ட அளவுக்கு இழப்பீடுகளைப் பெற்றுத் தந்தமைக்கு கோவையில் பாராட்டு நிகழ்வு நடந்ததெல்லாம் 
கடந்த கால நிகழ்வுகள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன், பழ.நெடுமாறன், வைகோ, தமிழக விவசாய சங்கத் தலைவராக இருந்த சி.நாராயணசாமி நாயுடு, தமிழக சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ஜி.கருத்திருமன், இலங்கைத் தமிழ்த்தலைவர் அ.அமிர்தலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சி சோ.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்றவர்களை என்.டி.வி.யின் வீட்டுக்கு எந்த நேரத்திலும் அழைத்துச் செல்லக் கூடிய உரிமை எனக்கு இருந்தது. 

அவர் வீட்டு மாடியில் வழக்கறிஞர் அலுவலகம். அவருடைய மேஜையின் நேராக சுவரில் பதிக்கப்பட்ட பலகையில்  அந்த வாரத்தின் லிங்க், மெயின்ஸ்ட்ரீம், இபிடபிள்யூ, செமினார், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஆன்லுக்கர், சன்டே, டைம்ஸ் ஆகிய இதழ்கள் வரிசையாக, நேர்த்தியாக கண்ணில் படும். அவருடைய உபசரிப்பில் நெல்லை உணவின் மணத்தைப் பலமுறை அனுபவித்ததுண்டு. இவருடைய துணைவியார் வேலூர் நகரத்தைச் சேர்ந்தவர். இன்முகம் காட்டி வரவேற்பார். இறுதிக் காலத்தில் கீழ்ப்பாக்கத்தில் இருந்து இவருடைய மைத்துனர் வி.கோபிநாத் குடியிருந்த மயிலாப்பூருக்கு வீட்டை மாற்றிக் கொண்டார். இறுதி காலங்களில் அடிக்கடி அவரை நான் சந்திப்பது உண்டு.  

கலைஞர், நெடுமாறன் ஆகிய பல தலைவர்கள் பங்கேற்ற என் திருமணத்தில் கலந்து கொண்டு அவர் உருக்கமாகப் பேசியதும், தினமணி கட்டுரைகள் அடங்கிய எனது ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ நூல் வெளியீட்டு விழா 1995 –இல் மயிலை பாரதிய வித்யா பவனில் நடைபெற்றபோதும் கலந்து கொண்டு அவர் பேசிய பேச்சுகள் இன்றைக்கும் நினைவில் உள்ளன.  

இறுதியாக அவரிடம் நான் கேட்ட வார்த்தைகள்: “உடம்பு வயசாயிட்டுதுல்ல... சற்று அமைதியாக ஓய்வெடுப்பேன்” என்பதுதான். அவர் அன்றைக்கு சொன்ன சொற்கள், இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றன.  

என்.டி.வி. என்ற மனிதநேயருக்கு நூற்றாண்டு. அவர் புகழை நினைவு கொண்டு போற்றுவோம்.
கட்டுரையாளர்:
அரசியலாளர்

#மூத்தவழக்கறிஞர்_என்_டி_வி
#ksrpost
5-11-2022.


Thursday, November 3, 2022

#திருமுறைகண்ட ராஜசோழனின் 1037 வது சதய விழா

#திருமுறைகண்ட  ராஜசோழனின் 1037 வது சதய விழா

உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டிய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன். உலக வரலாற்றிலேயே மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு திக்கெட்டும் வெற்றியைக் குவித்த மாமன்னன் ராஜராஜன் என்று வரலாறு போற்றுகிறது. முறையான நிர்வாகம், சிறப்பான ஆட்சி என எல்லாத் தரப்பிலும் பெயர் பெற்று விளங்கியவன் முதலாம் ராஜராஜன். அதுமட்டுமா, காலம் கடந்தும் அவன் பெயர் சொல்லும் காவியப் பெட்டகமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி, தனக்கு மரணமே இல்லை என்பதை உலகறியச் செய்த சோழ மாமன்னன் ராஜராஜனுக்கு 1037 ம் ஆண்டு சதய விழா


















அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜராஜன் சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் 947-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்கிறது வரலாறு. அதே சதய நட்சத்திரத்தில் 985-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் என்கிறது வரலாறு. தென்னகம் முழுக்க இருந்த பல செங்கல் தளிகளை கற்றளிகளாக மாற்றிய பெருமைக்கு உரியவன் ராஜராஜன். கோயிலில் வெட்டிய பல கல்வெட்டுகளை பாடல் வடிவில் வெட்டிய முதல் மன்னன் என்ற பெருமைக்கு உரியவன். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவன் ராஜராஜன். தஞ்சை கோயில் வடித்தெடுக்கவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன் காசு கொடுத்தவர்களைக்கூட மறக்காமல் கல்வெட்டில் பொறிக்க வைத்த நன்றி மறவாதப் பேரரசன் ராஜராஜன்.

உழவுக்கும் வணிகத்துக்கும் துணை நின்று பல முன்னேற்ற வழிகளை ஏற்படுத்தித் தந்தவன் ராஜராஜன். சாலை வசதிகளை தென்னகம் முழுக்க சீர் செய்து தந்தவன் ராஜராஜன். குடவோலை முறைப்படி உலகிலேயே முதன்முதலாக ஜனநாயக முறைப்படி கிராம தலைவர்களை தேர்ந்தெடுத்தவன். 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால்தான் அவன் புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது. 




இவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே சதய விழா கொண்டாடப்படுகின்றது. சதய விழா கடந்து வந்த பாதை சுவாரஸ்யமானது.

'சதய நாள் விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன்' என்ற கலிங்கத்துப் பரணியின் வார்த்தைகளுக்கு ஏற்ப ராஜராஜன் பிறந்தது ஒரு சதய நாளில் என்று வரலாற்று அறிஞர்கள் கணித்து ஆரம்பத்தில் ஒவ்வொரு மாத சதய நாளிலும் ராஜராஜனின் விழாவைக் கொண்டாடினார்கள். 

பிறகு திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றின்படி அங்கு ராஜராஜ சோழரின் அணுக்கியான பஞ்சவன் மாதேவி ராஜராஜர் பிறந்த சதய நாளில் விழா கொண்டாட ஏற்பாடு செய்கிறார். அனைத்து சதய நாளிலும் 10 கலம் நெல்லை நிவந்தமாக அளித்த பஞ்சவன் மாதேவி சித்திரை மாத சதய நாளுக்கு மட்டும் 256 கலம் நெல்லை நிவந்தமாக அளித்து சிறப்பாகக் கொண்டாடினார் என்று தெரிவிக்கிறது. அந்த கல்வெட்டின்படி சித்திரை சதயமே ராஜராஜரின் சதய நாள் விழா என்று கொள்ளப்பட்டது. 

இதற்கு மேலும் ஆதாரமாக திருவையாறு உலோக மாதேவிஸ்வரம் கோயில் கல்வெட்டு ஒன்றும் சித்திரை சதயமே ராஜராஜரின் சதய நாள் என்றும் கூறியது. அதேபோல் எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில் கல்வெட்டும் சித்திரை சதயமே சதய விழா நாள் என்றும் குறிப்பிட்டது.

இந்த நிலையில் தான் திருவாரூர் மூலட்டான திருச்சுற்று சுவரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்று 'அய்யன் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்' என்ற ராஜராஜரின் மைந்தர் ராஜேந்திரச் சோழன் கட்டளையிட்ட தகவலின்படி ராஜராஜ சோழரின் சதய நாள் விழா ஐப்பசி மாதமே என்று முடிவு செய்யப்பட்டது. 

இதை 'திரு அவதாரம் செய்தருளின ஐப்பசி திங்கள் சதய திருநாள்' என்ற திருவெண்காட்டுக் கல்வெட்டு உறுதிப்படுத்தியது.

அது முதல் ஐப்பசி சதய விழா மாமன்னன் ராஜராஜனைப் போற்றும் விதமாக தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறகு அது மாவட்ட அளவில் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தெற்காசியா முழுமையும் தனது படை பராக்கிரமத்தால் கட்டியாண்ட இம்மாபெரும் மன்னன், நமது வீரத்தின் அடையாளமாகக் கொண்டாப்பட வேண்டியவன்.

அதனினும் முக்கியமானது தமிழர்கள் அனைவரும் அவனைக் கொண்டாட வேண்டும் என்பதே. மற்ற தேசங்கள் எல்லாம் கண்டறியப்படாத அல்லது வளர்ச்சியுறாத காலத்தில் நிர்வாகம், ஜனநாயகம், மராமத்துப் பணிகள், கட்டடக்கலை, இலக்கியம், சமய நல்லிணக்கம்... என அனைத்துத் துறைகளிலும் முன் மாதிரியாக நின்ற மாமன்னன் ராஜராஜரின் புகழை நெஞ்சில் நிறுத்தி நினைவில் கொண்டாடுவோம்.

Wednesday, November 2, 2022

*நவ கேரளம் உருவான நவம்பர் 1 ம் தேதி நேற்று டிஜிட்டல் ரீ சர்வே தொடங்குகிறது கேரள. ஆனால் பி.எஸ். மணிகள், மார்ஷல் நேசமணிகள், செங்கோட்டை கரையாளர்கள் இன்று நம்மிடம் இல்லை. என்ன செய்ய?*

*நவ கேரளம் உருவான நவம்பர் 1 ம் தேதி நேற்று டிஜிட்டல் ரீ சர்வே தொடங்குகிறது கேரள. ஆனால் பி.எஸ். மணிகள், மார்ஷல் நேசமணிகள், செங்கோட்டை கரையாளர்கள் இன்று நம்மிடம் இல்லை. என்ன செய்ய?*


நவம்பர் 1,1956 மொழிவழி பிரிவினை சட்ட மோசடிக்கு பிறகு, தமிழகத்திலிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உதவியுடன்,1957 ல் தான் புதிய கேரளம் உருவானது.

ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், அன்றே தமிழக எல்லையை தெளிவாக வரையறை செய்து வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து….என்று கூறுகிறது.அதாவது வடவேங்கடம் என்றழைக்கப்படும் இன்றைய திருப்பதிக்கும், தென்குமரி என்றழைக்கப்படும் இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே கடல் கொண்டழிந்து போன லெமூரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியையே  பழைய தமிழகம் என எல்லையாக உருவகம் கொடுக்கிறது.

ஆனால் இத்தனையாண்டு பழமை கொண்ட ஒரு நாடு, நேற்று உருவான அல்லது உருவாக்கப்பட்ட கேரளாவிடம் 1956 மொழிவழி பிரிவினையில் எப்படி 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இழந்தது என்பதை நினைக்கும் போது அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது. 

(அதைவிட கொடுமை கம்பம் நகரில், இன்றைய நவீன கேரளத்தை உருவாக்க களத்தில் நின்று தமிழகத்திற்கு எதிராக  முண்டா தட்டிய,ஏ.கே.கோபாலன் பெயரில்திடல்)

அதற்கு பிறகாவது தமிழகம் விழித்திருக்க வேண்டாமா.மொழிவழிப்பிரிவினையால் தமிழகம் இழந்த பகுதிகளான தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்கள்தான், இன்றைக்கு கேரள மாநில வரி வருவாயில் 12 விழுக்காடு வரை, வரியாக வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

வனவளம் மிகுந்த நெய்யாற்றின்கரை,நெடுமங்காடு, செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதி தென்மலை, அட்டிங்கல் என எல்லாம் இன்றைக்கு கேரள மாநிலத்திற்கான வளமான பகுதிகள்

செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதியில் உள்ள தென்மலை வனப்பகுதி இன்றைக்கு தமிழகத்தோடு இருந்திருக்குமென்றால்,கல்லடா என்றொரு ஆறு கேரளாவிற்கு உண்டோ.அந்த ஆற்றை தமிழகத்தின் பக்கம் திருப்பியிருந்தால், அச்சன்கோவில்-பம்பா-அச்சன் கோவில்-வைப்பாறு ( எனது தேசிய நதிகள்  இணைப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி)தென்காசி மாவட்டத்தின் சுரண்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம்,வெம்பைகோட்டை,சிவகாசி வட்ட பகுதிகள்,  சாத்தூர் வைப்பாறு பகுதிகள், விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி பகுதிகள் என முப்போக விளைச்சலை கண்டிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

அதுபோல சிவகிரி தாலுகாவிலுள்ள வாசுதேவநல்லூரின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் செண்பகவல்லி கால்வாய் தண்ணீரை தமிழகம் இழந்திருக்குமோ...
கரிவலம் வந்த நல்லூர் முப்போகம் விளைந்திருக்கும்.

அதுபோல   நெய்யாறு,செண்பகவள்ளி, அழகர் அணை,முல்லைப்பெரியாறு,கல்லாறு,முதிரப்புழா,பம்பையின் ஒரு பகுதி தண்ணீர்,ஆனையிரங்கல் அணை தண்ணீர்,மாட்டுப்பட்டி,குணடல அணைத்தண்ணீரை தேனி மாவட்டம் இழந்திருக்குமோ... கண்ணகி கோவில் சிக்கல் என பல பிரச்சனைகள்…..



இத்தனை நீர்வளத்திலிருந்தும் ஒரு 100 டி எம் சி மேலான தண்ணீரை தமிழகம் பெற்றிருக்காதா...

அதுபோல அமராவதி அணைக்கு மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் இருந்து வரும் தண்ணீரோடு, மூணாறு அருகே ஆண்டுதோறும் தண்ணீர் வழிந்தோடும் பெரிய பாறை தண்ணீரும் இணைந்திருந்தால்,பவானி கூடுதுறை தாங்குமோ... 

தமிழகத்தின் இரண்டாவது பெரிய பாசனமான பவானிப்பாசனதாதோடு,எங்கோ கேரளாவிற்குள் வேண்டா வெறுப்பாய் வழிந்தோடும் எங்கள் மோயாற்றை ,தெங்குமரஹடா வழியாக திரும்பியிருந்தால்,காவிரிக்கு இணையான இன்னொரு பாசனம் தமிழகத்திற்கு கிடைத்திருக்குமே...என சிக்கல் பலவற்றை கேரள செய்தது. நீண்ட பட்டியல் உண்டு.

ஏன் நிலத்தின் மீது நமக்கு அக்கறை ஏற்படாமல் போனது.வீட்டை அடுத்து இருக்கும் கையகல முட்டுச்சந்துக்காக பக்கத்து வீட்டுக்காரனிடம் பல பத்தாண்டுகளாக சண்டையிடும் நம்மால்,ஏன் மலையளவு நிலத்தை கேரள கபளீகரம் செய்யும்போது நம்மால் சண்டையிட முடியவில்லை.

சர்வே ஆஃப் இந்தியா வின் மேற்பார்வை யில் தான் டிஜிட்டல் ரீ சர்வே நடத்தப்படுகிறது என்கிற கேரள வருவாய்த்துறை அமைச்சர் திரு ராஜனின் வாதம் எந்தளவிற்கு நம்பகத்தன்மையுடது.

தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையிலான 822 கிலோ மீட்டர் தூரம் முறையாக இன்னமும் அளவீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் மறு அளவீடு செய்ய முடியும்.

கம்பம் மெட்டு உச்சியில் உள்ள கேரள காவல் துறையின் எல்லைச் சோதனை சாவடி, தமிழக எல்லைக்குள் இருக்கிறது என்று ஆணித்தரமாக நிரூபித்து ஆண்டு ஐந்தாகி விட்டது.என்ன செய்ய முடிந்தது நம்மால்.ஒரு காவல் துறை சோதனை சாவடியையே தமிழக எல்லைக்குள் வைத்திருக்கும் அவர்களுத்தான் வெட்கமின்றி போய்விட்டது என்றால்,அதை மீளத்திரும்பப்பெற நமக்கு ஏன் துணிவில்லாமல் போனது.

எல்லையை அளவீடு செய்யாமல், கேரள மாநில அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த டிஜிட்டல் ரீ சர்வே, இன்னொரு மொழிவழி பிரிவினை காலத்திற்கு சமமாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.ஏனென்றால் சர்வே ஆஃப் இந்தியா வின் மேற்பார்வையில் இது நடக்கிறதென்றால் அதற்கு வேறு என்ன அர்த்தம் இருந்துவிட முடியும்.

கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களில், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.கூடுதலாக நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தனியாக வரைபடங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.ஆனால் அண்டை மாநிலத்தோடு எல்லையை அளவீடு செய்வதில் மட்டும் மலையாளிகளுக்கு உடன்பாடில்லை.

நான்கு ஆண்டுகளுக்குள் மொத்த கேரளாவையும்,அளவிட திட்டமிருக்கும் கேரள மாநில வருவாய்த் துறையின் நோக்கம் எதேச்சதிகாரமினது.

ஏதோ ஒரு சதிச்செயலை தமிழக நிலங்களுக்கு எதிராக அரங்கேற்றவே கேரள மாநில அரசு இந்த வேலையை தொடங்குகிறது

அதைவிட அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் மிக முக்கியமான நாள்.அதாவது 1956 ல் எப்படி தமிழகத்தை வஞ்சித்து இதே நவம்பர் 1 ல்  நவ கேரளத்தை உருவாக்கினார்களே,அதே நவம்பர் 1 ம்  தேதியில் தற்போது இந்த நாசகார டிஜிட்டல் ரீ சர்வேயையும் தொடங்குகிறார்கள்.

கிராமப்பதிவுகள் முடிந்ததும்,நில அளவை ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலப்பரப்பின் விரிவான ஆவணத்தின் உதவியுடன் தொகுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

1956 ல் தமிழக நிலங்களை அபகரிக்க எப்படி ஒரு கே.எம்.பணிக்கர் காரணமாக இருந்தாரோ, அப்படி ஒரு பணிக்கர் இப்போதும் கேரளாவிற்கு கிடைத்திருக்கிறார்,

தமிழக கேரள எல்லையோரங்களில்,பெருவாரியாக விவசாய நிலங்கள் வைத்திருக்கும் அப்பாவி தமிழ் விவசாயிகளின் கூக்குரல்,பெரு ஓலமாக இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் மாறலாம்.

மலையாள மார்க்சிய இடதுசாரி தோழர்கள், தோழர் பினராயி விஜயன் முன்னெடுத்திருக்கும் இந்த ரீ சர்வே மோசடிக்கு துணை நிற்கப் போவதை நம்மால் யூகிக்க முடிகிறது.ஏனென்றால் முடிவடைந்த சர்வே சபாக்களை கிராமந்தோறும் நடத்தியது வருவாய்த்துறை என்றால், அதற்கு மக்களை அழைத்து வந்தது  கம்யூனிஸ்ட் தோழர்கள் தான். கம்யூனிஸ்ட் ஆனலும் காங்கிரஸ் ஆனாலும் இதில் ஒற்றுமையாக ஓரே மாதிரி நடந்து கொள்வார்கள.

ஆளில்லா விமானங்கள், தொடர்ந்து செயல்படும் குறிப்பு நிலையங்கள், சுற்றுப்பயண நேரம் மற்றும் மின்னணு நிலையங்கள் ஆகியவற்றை செயற்கை கோளுடன் இணைக்கப்பட்டுள்ள 28 நாண் நிலையங்களின் சமிக்ஞைகள்  மூலம் இது  குறித்த வரைபடங்கள், படங்கள்   தாயரிக்போககிறார்கள்.

அத்தனை தொழில்நுட்ப பயன்பாடுகளும், தமிழகத்திற்கு எதிராக திருப்பிவிட வேலை நடக்கிறது.

ஆனால் இதுவரை தமிழக அரசிடம் இந்த டிஜிட்டல் ரீ சர்வே குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை இந்த மோசடியான கேரளா.

தன்னுடைய கட்சி மாநாட்டிற்கு கண்ணூருக்கும், திருவனந்தபுரத்திற்கும்,அமைச்சர்களை அனுப்பி  தமிழக முதல்வர் அவர்களை அழைக்கத் தெரிந்த கேரளாவிற்கு, இப்போது இந்த டிஜிட்டல் ரீ சர்வே குறித்து தகவல் தெரிவிக்க எது தடுக்கிறது.

இது துரோகத்தின் உச்சம்.இது ஒன்றும் புதிதில்லைதான்.நேற்று  அச்சுதனந்தம், முல்லைப் பெரியாறு அணையில், ஐந்து மாவட்ட மக்களுக்கு எதிராக செய்த துரோகத்தை,இன்று டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட மக்களுக்கு எதிராக செய்யத்துடிக்கிறார் தோழர் பினராயி விஜயன்.

ஆனால் பி.எஸ். மணிகள், மார்ஷல் நேசமணிகள், செங்கோட்டை கரையாளர்கள் இன்று நம்மிடம் இல்லை. என்ன செய்ய?

திட்டமிட்டபடி கேரளாவில் நவம்பர் 1 ம் தேதி, டிஜிட்டல் ரீ சர்வே தொடங்கப்பட்டது

திருவனந்தபுரம் விமானநிலையமும் பத்மநாபசாமியும்

https://www.google.co.in/search?q=trivandrum+airport+padmana&client=safari&hl=en-in&prmd=nmiv&sxsrf=ALiCzsaBRXGUJtcBFVa8gXMbAuS0cUoZiA:1667361907971&source=lnms&tbm=vid&sa=X&ved=2ahUKEwiM_PGRz477AhUeTGwGHX7aD70Q_AUoBHoECAEQBA&biw=390&bih=656&dpr=3#fpstate=ive&vld=cid:ccd54bde,vid:9aNc2ZLGKzk 
திருவனந்தபுரம் விமானநிலையமும் பத்மநாபசாமியும்

 நேற்றைக்கு பத்மநாபசாமி ஆராட்டு வலத்துக்கும் பூஜைகளுக்கும் திருவனந்தபுரம் விமானநிலையம் 5 மணி நேரம் மூடப்பட்டது. 

திருவனந்தபுரம் விமானநிலையம் 1932 இலேயே சர்வதேச விமானநிலையமாகக் கட்டப்பட்டது. அந்த இடம் ஆராட்டு விழா பாரம்பரியமாக  நடக்கும் இடம். அந்த விமான நிலையம் கட்டும்போதே திருவாங்கூர் சமஸ்தானம் ஐப்பசி மாதம் திருவிழாக் காலங்களில் விமானநிலைய ஓடுபாதை பத்மநாபசாமி ஊர்வலமாக எப்போதும்போல எடுத்துச் செல்ல ஒப்பந்தம் ஆனது. 
 
இந்த மரபு சம்பிரதாயத்தின் அடிப்படையில் நேற்றைக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மாலை 4 மணி முதல்  இரவு 9 மணி வரை 5 மணி நேரம் மூடப்பட்டது. விமானங்கள் இறங்கவோ புறப்படவோ இல்லை.  ஊர்வலத்துக்குப் பின்  பாரம்பரியமாக அங்கிருக்கும் ஹரி மண்டபத்துக்கு பத்மநாபசாமியை எடுத்துக் கொண்டு சென்று அங்கு பூஜைகளும் சடங்குகளும் நடக்கும்.

.. ஆண்டுக்கு இரண்டு நாட்கள் பத்மநாப சாமிகள் கோயிலின் சார்பில் சாமி ஊர்வலத்திற்கு விமான ஓடுதளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
இன்றும் அந்த நிபந்தனையின்படி ஆண்டுக்கு இரண்டு நாட்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் சார்பில் சாமிகள்உ ற்சவம் நடந்து வருகிறது.
இது திருவனந்தபுரத்தில் நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு. 
இதேபோன்ற  வழக்கம் சென்னையிலும் நடந்து வருகிறது என்பது வெளியில் தெரியாத செய்தி.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு என தெப்பகுளம் இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து ஆற்காடு நவாபிடம் கோயில் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களின் எண்ணத்தை ஏற்றுக் கொண்ட ஆர்க்காட்டு நவாப்,அந்த கோயிலுக்கு எதிரில் உள்ள இடத்தைத் தானமாக வழங்கினார்.அந்த இடத்தில்தான் தெப்பக்குளம் கட்டப்பட்டு இருக்கிறது.
இந்த நன்கொடைக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் 
ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கும் தெப்பக்குளத்துக்கும் இடையில் இருக்கின்ற தெருவில்  இந்த கோயிலின் கதவு முகரம் பேரணியின் போது  சாத்தப் படுகிறது.
ஏனென்றால்,அந்த வழியாக முகரம் தொடர்பான  இஸ்லாமிய ஊர்வலம் நடைபெற இருப்பதால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடைமுறை.  இரு வேறு மதங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பும், நல்லிணக்கமும் கொண்டதற்கான வரலாற்றுப் பூர்வமாக அடையாளமாக இதை நாம் கொள்ள முடியும்.

#*மோசடிக்கு திருக்குறளா?* *திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி*! *அடேய் கபோதிகளா*…

#*மோசடிக்கு திருக்குறளா?*
*திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி*! *அடேய் கபோதிகளா*…. 
————————————
  மதுரையில் ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் பாரா மவுண்ட் கார்ப்பரேஷன் என்ற பெயரில் 2010- இல் தனியார் நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனம் 100 திருக்குறள் புத்தகங்களை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கினால், 37- ஆவது மாத முடிவில் ரூ.46,900 முதிர்வுத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. 
 இந்த அறிவிப்பை நம்பி திருக்குறள் புத்தக திட்டத்தில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தனர். ரூ.65.46 கோடி வரை பணம் திரட்டப்பட்டது. ஆனால் அறிவித்தபடி பணம் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகையை அந்த நிறுவனம் வழங்கவில்லை. 
  இதுதொடர்பாக பணம் முதலீடு செய்தவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
  இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாராமவுண்ட் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க டான்பிட் நீதிமன்றத்துக்கு கடந்தாண்டு உத்தரவிட்டது. 
 இந்நிலையில் அந்த உத்தரவின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை என்றும் வேண்டும் என்றே விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றனர் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு முதலீட்டாளர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி தெரிவித்தனர்.

  இதையடுத்து திருக்குறள் புத்தக மோசடி வழக்கை டான்பிட் நீதிமன்றம் தினமும் விசாரித்து 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அரசு தரப்பில் ஒவ்வொரு விசாரணையின் போதும் சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும். விசாரணையின் நிலை குறித்து மாதம்தோறும் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார்  உத்தரவிட்டார்.

Tuesday, November 1, 2022

#*அன்றைய மெட்ராஸ் ராஜதானி*, #*சென்னை ராஜதானி*, #*பின் சென்னை மாகாணம் என்றும்*; #*இன்றைய தமிழ்நாடு-66*



நவம்பர் 1

தமிழ்நாடு மாநிலம் உருவான நாள். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாள்.

————————————
இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 66ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழர்க்கு சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்த ஆண்டு கடந்த காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு பொன்விழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளை யொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத் தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’
என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையா மல் இருந்த நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இச்சூழ்நிலையை எதிர்த்தது. இந்நிலையில், அய்க்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மெட்ராஸ் மனதே என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.
சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.

தமிழகத்தின் வட எல்லையன திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத் தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ண மூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வடஎல்லைப் பகுதிக்கு புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார்.
ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒருமணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்சினை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத் தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப் பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றிய தாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப் பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டு 6 மாத சிறைத்தண்டனை ம.பொ.சி. பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. 

ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகிய வற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியா குமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்குணம் கொண்டோரின் தலைமை யில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்த பொழுதும் கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களு டைய ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954இல் ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச் சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் தயார் இல்லை எனத் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீசாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதல்-அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசியபின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்திற்கு சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் – பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது.

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவிற்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறை வேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார்.

தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.
தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை – கொல்லங்ககோடு வரை நீண்டுள்ளது. தமிழக கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கின்றது. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை. 

இதனால் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினரால் அத்துமீறி தாக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களோடு நதிநீர்ப் பிரச்சினை யிலும், சமீபத்தில் கர்நாடகத்தோடு ஒக்கனேக்கல் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயங்களை வெளிப்படுத்தினாலும் கர்நாடகத்தின் எல்லை அத்துமீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தாளவாடி கர்நாடகத்தில் சேர்க்க வாட்டள் நாகராஜ் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்து உள்ளோம். 

1956இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் – பீர்மேடு கேரளத்தில் முறைகேடாக சேர்த்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கின்றது. அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், பாலக்காடு பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பரம்பிக்குளம்-ஆழியாறு பிரச்சினைகள் இன்றைக்கும் கேரளாவோடு தலைதூக்கி நிற்கின்றது.

கர்நாடகத்தோடு கொள்ளேகால், மாண்டியா, கோலாறு இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினை, ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. 

இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால். இந்தத் தருணம் கொண்டாட்டமா? சிந்திக்கவா? என்று தெரியவில்லை. ஆனால் தென் மாவட்டங்களில் தமிழகத்தின் கலாச்சார பண்டைய தலைநகரம் ஏதென்ஸ், ரோம் நகர்களைப் போன்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் ஏன் அமையக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றது.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இன்னொரு மாநிலம் அமைந்தால் பல சலுகைகளும், கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்துக்கு உரிய பொருளாகும். தென் தமிழகம் அமைந்தால் நிர்வாகம், மக்கள் நலப் பணிகள் என பல நன்மைகளும் உள்ளன.

காலப் போக்கில் அரங்கன் பள்ளிகொண்ட காவிரியின் தென்கரை திருவரங்கரத்திலிருந்து குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை வரை தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற சிலரின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நீர்பூத்த நெருப்பாக உள்ளன. 1998லிருந்து மத்திய அரசு சிறு மாநிலங்கள் அமைய வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டங்கள் தீட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு உத்தராஞ்சல், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வரை பல மாநிலங்கள் அமைந்தன. தற்போது தெலுங்கானாவும் தனி மாநிலமாகிவிட்டது. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாக ரீதியாக பிரிக்கலாம் என்று மத்திய அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தியாகங்கள் செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் இப்போது சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.

விதியே விதியே என் தமிழச் சாதியை
என்செயக் கருதியிருக்கின் றாயடா?
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் 
பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவயிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்தில…

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
என்று ஒரு நூற்றாண்டுக்க முன்னர் மகாகவி பாரதி பாடியது இன்றும் சரியாகவே இருக்கிறது!
****
தமிழ்நாடே வாழ்க- 
எம்தாய்நா டே வாழ்க.
அமிழ் தா கியஇய லிசைகூத் தென்னும்
தமிழா கிய உயிர் தழையும் விழுமிய.
தாய்நாடே வாழ்க!
இலங்கை சிலம்பும் குமரித் திருவடி தென்பால்
எழிலார் விந்தக் குழலார் வேங்கடம் வடபால்
கலங்கொள் முத்துக் கடலும் பவழக்
கடலும் கிழக்கு மேற்கில் உடுக்க
தமிழ்நாடே வாழ்க!
குன்றுகள் வான்தொறும் எரிமலை அறியாய்!
பெருநில முடையாய் நடுக்க மறியாய்!தென்றற் குளிரும் செங்கதிர்ச் செல்வமும்
தண்ணீர் வளவயல் செந்நெலும் கொழிக்கும்
தமிழ்நாடே வாழ்க!
-பாவேந்தர் பாரதிதாசன்-

                        (2)
(தமிழகம் இழந்தது அதிகம். எல்லைகள் வரையறுக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகிறது).�தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 66 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2018 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.
‘தமிழகம் 50’ விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். ‘தமிழ்நாடு 50’ என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.
அந்த விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார், கொ. மோ. ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ. தாமோதரன், சி.வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி, அம்மையப்பன், விசுவநாதன், அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ஏ.அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர். மத்தியாஸ், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட செங்கோட்டை கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் சிலரது படங்களையும், அவர்களின் தியாகத்தையும் இநத நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது.
இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்பட வில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 66 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.�1. ஏ. தேவசகாயம், மங்காடு,�2. தி. செல்லையா, கீழ்க்குளம்,�3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.�1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்�2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்�3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,�4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,�5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,�6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,�7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,�8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்�9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.
குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.
வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன் உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.
அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில் கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்க முடியாது.
விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து  66 ஆண்டுகள் கடந்துவிட்டன.
***

முதல் மொழிவாரி மாநில கோரிக்கை ஒரிய மக்களிடம் எழுந்தது. 1895 தொடங்கி 1935-ல் ‘ஒரிஸா’ என்ற மொழிவழி மாகாணத்தைப் பெற்றார்கள்.

அதற்கடுத்து, மராட்டிய மொழிவழி மக்கள் ‘மாகாண கோரிக்கை 1906-ல் தொடங்கினார்கள். பெற்றார்கள். சுதந்திரப்போரில் பங்கெடுத்த பாலகங்காதர திலகர்கூட அந்த கோரிக்கை போராட்டத்தில் 1919-களில் பங்கெடுத்தார். 

தென்னகத்திலும் அந்த ‘மொழிவாரி’ மாகாணம் குரல் 1915-களிலேயே ஒலிக்கத் தொடங்கியது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ‘மொழிவாரி’ மாநிலம் என்பதை ஏற்கிறது. விவாதிக்கின்றது. 1921-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி என மொழி வழியிலேயே கட்சியின் மாகாண கட்டமைப்பை ஏற்படுத்தியது. பிறகு மாகாணங்களுக்கு ‘சுயாட்சி அதிகாரமும் வேண்டும் என (1921-ல்) தீர்மானத்தை (பெல்காம்) போடுகிறது. லக்னோ தீர்மானம்(Lucknow pact)

காங்கிரஸ் கட்சியின் மொழிவாரி கட்சி கட்டமைப்பில், திருத்தனி, திருப்பதி நெல்லூர் ஆகிய பகுதிகள் ஆந்திர காங்.கமிட்டி பகுதிக்குள் சேர்த்தார்கள். அதை தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவராக இருந்த சத்தியமூர்த்தி எதிர்த்தார்.

சி. சங்கரன் நாயர், (கேரளா)சென்னை ராஜதானி மாகாணத்தில் உள்ள பத்து மாவட்டங்களை தனியாக பிரித்து சுயாட்சி (தனி மாநிலம்) வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1926-ல் மத்திய சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அது தோற்கடிக்கப்பட்டது.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR Post.
1-11-2022.
9.30 -காலை.

எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு ‘தமிழ்நாடு’ உருவான நாள்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
https://www.thaaii.com/?p=53222

1956, நவம்பர் 1 ஆம் தேதி.

தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட தினம். இன்னொரு விதத்தில் சொன்னால் – தமிழகத்தின் வரைபடம் உருவான தினம்.

தமிழகத்தில் எல்லைகளை நிர்ணயிக்கப் பெரும் போராட்டமே நடந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அறிவார்களா?

எத்தனை தலைவர்கள் அதற்காகப் போராடியிருக்கிறார்கள்?

சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் தமிழ்நாட்டின் எல்லைகள் வேறு!

சிலவற்றை தமிழகத்துடன் இணைத்தோம். சிலவற்றை இழந்தோம்.

ஆந்திராவில் உள்ள சித்தூர், நெல்லூர், வடவேங்கடம் போன்றவற்றை இழந்தோம். கர்நாடகத்தில் உள்ள கொள்ளேகால், கோலார் தங்கவயல், பெங்களூரூவை இழந்தோம்.

கேரளத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை, பாலக்காடு போன்றவற்றை இழந்தோம்.

நேசமணி போன்றவர்கள் பெரும் கிளர்ச்சியை முன்னெடுத்த பிறகே கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது.

கேரளமும், கர்நாடகமும், ஆந்திராவும் அவை உருவான தினத்தைக் கொண்டாடுகின்றன.

ஆனால் தமிழர்கள் அந்தத் தினத்தைக் கொண்டாட மறந்த நிலையில், 1981 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று அதற்கென விழாவை எடுத்தவர் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.

அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி போன்றவர்களுடன் அன்றைய விழாவில் கலந்து கொண்டனர்.

அதே சமயம் கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் தியாகி பி.எஸ்.மணியுடன் பங்கேற்றவர் அன்றைய சட்டமன்ற உறுப்பினரான பழ.நெடுமாறன்.

2006 ஆம் ஆண்டு சென்னையில் ‘தமிழ்நாடு-50’ என்கிற தலைப்பில் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தினேன்.

பொதிகை-பொருநை-கரிசல் அமைப்பு இந்த விழாவை முன்னின்று நடத்தியது.

ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, பழ.நெடுமாறன், இரா.செழியன், வழக்கறிஞர் ஆர்.காந்தி போன்றவர்கள் கலந்து கொண்ட இந்த விழா நடந்தபோது ஆனந்த விகடனில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய தமிழகம் 50 என்கிற கட்டுரை வெளிவந்தது.

‘புதிய பார்வை’ இதற்காகத் தனிச்சிறப்பிதழே வெளியிட்டது.

தமிழகம் இழந்தது குறித்த வருத்தமும், சில பகுதிகள் இணைந்தது குறித்த மகிழ்ச்சியும் ஒருசேர வெளிப்படும் தினமாக அமைந்திருக்கிறது தமிழ்நாடு உருவான நாள்.

விருதுநகரில் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பிறகு, அறுபதுகளில் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் குறித்து விவாதங்கள் எல்லாம் நடந்தது.

அதன்பிறகு, 1967-ல் அண்ணா தமிழக முதல்வர் ஆனபிறகு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதெல்லாம் நடந்தாலும், தமிழக எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட நாள் 1981, நவம்பர்-1.

தமிழ்நாடு உருவான நாளுக்காக விழா எடுக்கப்படுகிற நேரத்தில், அதற்காகப் பாடுபட்டவர்களையும், விழா எடுத்து, புத்தகம் வெளியிட்டவர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.





We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC