Wednesday, November 13, 2024

#திமுகஅண்ணா_முதல்இன்றுவரை

 #திமுகஅண்ணா_முதல்இன்றுவரை

—————————————

மூத்தவர்கள் அனுபவம் இளையோர் வேகம் இணைந்து பயணிப்பதே ஒரு இயக்கம் வெற்றியை தொடர் வெற்றியாக கடத்தும் வழி. அறிஞர் அண்ணா திமுகவை தொடங்கியபோது அவர் வயதில் பாதி வயதுடையோரே முன்னணி தலைவர்களாக இருந்தனர். 


அண்ணா முன் ஒருசேர காங்கிரஸ், பொதுவுடமை கட்சி, சுதந்திரா கட்சியை சந்தித்து திமுகவை வளர்க்கும் கடமையும் பொறுப்பும் இருந்தது. இன்னொரு திராவிடர் கழகமாக திமுகவை கொண்டுச்சென்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற நிலைப்பாடு பொதுமக்களிடம் இணக்கமடைய வைத்தது. 


திராவிட நாடு கோரிக்கை கட்சிக்கே சிக்கலாக வந்தபோது அந்த கோரிக்கையை கட்சிக்கு பாதகம் வராமல் தள்ளி வைத்தார். மொழி இனபோரை கையிலெடுத்ததால் கட்சி இடதுசாரிகளை முந்தியும் காங்கிரஸை மீறியும் வளர்ந்தது. இதற்கெல்லாம் ஐம்பெரும் தலைவர்களாக, முன்னணி போர்வாளாக இளைஞர்கள் இருந்தனர் அண்ணாவின் அனுபவ தலைமை இருந்தது.


அண்ணாவிற்கு பின் கலைஞர் தலைமை ஏற்றபோதும் அதிமுக உருவான பின்னரும் இளையோர் துணையுடன் கலைஞர் கட்சியை நடத்தினார், அதே நேரம் மூத்தோருக்கும் உரிய மரியாதை இருந்தது. கட்சியின் முக்கிய தலைவர்கள் அண்ணா காலந்தொட்டு வந்த தலைவர்கள் அனுபவத்துடன் கட்சி இயங்கியது. 


அதனால்தான் மிசா கொடுமை, தொடர் தோல்வி அடைந்தாலும் கட்சியை வலுவாக கலைஞர் வைத்திருந்தார். சுயமரியாதையுடன் இயங்கிய மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாக வலம் வந்தனர். 

என்னதான் வாரிசு கட்சி என்று சொன்னாலும் கலைஞர் 1968-ல் கட்சிக்குள் வந்த ஸ்டாலினை 1984 வரை தேர்தலில் நிற்க அனுமதிக்கவில்லை. 1989-ல் ஆட்சியை பிடித்தாலும் ஸ்டாலின் வென்றாலும் அமைச்சராக்கவில்லை. அதுதான் திமுக எனும் பேரியக்கம். அவரரவருக்கு உரிய இடம் கிடைத்தது. ஆனால் இன்று என்ன நிலை? ஒருவர் 2019-ல் உள்ளே வருகிறார் உடனே எம்.எல்.ஏ உடனே அமைச்சர், இன்று துணை முதல்வர். அவரை தாழ்பணிந்து வரவேற்ற சுயமரியாதை(?) பாசறை மூத்த அமைச்சர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். என்னைப்போன்ற கட்சியின் இக்கட்டான நேரத்தில் பாடுபட்டவர்களை கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்தபோது அதுகுறித்து கேள்வி எதுவும் கேட்காமல் வாரிசுகளுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் நிலை என்ன.


பல கட்சியின் தூணான முன்னோடிகள் அவமானப்படுத்தப்பட்டு ஒருசில நேற்று முளைத்த காளான்கள் திராவிட மாடல் என்று புதுவிளக்கம் சொல்லி அனைவரையும் ஓரங்கட்டி கட்சியை குடும்பவாரிசு கையில் ஒப்படைத்து இல்லாமல் செய்யும் வேலையை செய்கின்றனர். மூத்த தலைவர்களை கை பிடித்து வழி நடத்தி விலகி நில்லுங்கள் என முகத்துக்கு நேரே சொல்லுகின்றனர்.


செந்தில் பாலாஜி, சேகர்பாபு போன்ற வசூல் மன்னர்களுக்கு கட்சியின் மூத்த தலைவர்களை விட மரியாதை. கிச்சன் வரை செல்லலாம். அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட கே. கே. எஸ். எஸ். ராமசந்திரன் துவங்கி சே சேகர்பாபு, செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன், ரகுபதி, எ.வ.வேலு, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், செல்வகணபதி, தங்கத்தமிழ் செல்வன் போன்றோர்தான் பலர் தற்போது திமுக தலைவர்கள். 


காலமெல்லாம் கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரம்கட்டப்பட்டுள்ளனர். ஊழலுக்காக சிறை சென்று திரும்பி வந்த தியாக திருவிளக்கு செந்தில் பாலாஜிக்கு அதே துறைகள் திரும்ப தரப்படுகிறது. கலைஞர் ஆட்சியில் முக்கிய துறைகளை வகித்த மூத்த அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை. ஏன் அவருக்கு மின்சாரத்துறை கொடுக்கலாம் அல்லவா? திமுக குடும்பத்தின் வாரிசு பிடிஆர் குடும்பத்தை விமர்சித்ததற்காக ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கி நிற்கிறார். திருச்சி மத்திய மண்டலத்தில் கட்சியின் முன்னோடி கே.என்.நேரு அன்பில் மகேஷுக்காக ஒதுக்கப்படுகிறார். இதுபோன்ற பல கதைகள் திமுகவில் புரையோடிய புண்ணாக உள்ளது. என்னைப்போன்றவர்களை கட்சிக்காக இக்கட்டான நேரத்தில் உழைத்தவர்களை, சட்டம் சார்ந்த பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் முதல் ஈழ தமிழர் குறித்து ஐநா வரை கட்சியை கொண்டுச்சென்றவர்களை என் போன்றவர்களை புறக்கணித்து கட்சி வரலாறே தெரியாதவர்களை பதவிகொடுத்து அழகு பார்க்கும் நிலை. திமுகவிற்குள் நெருப்பு புகைய தொடங்கிவிட்டது அனுபவம் இல்லாதவர்கள் அண்ணா விரும்பா வாரிசு அரசியல் கையில் திமுக எனும் ரதம் கொடுக்கப்பட்டுள்ளது. குதிரைகள் வெவ்வேறு திசைக்கு இழுக்கின்றன.சாரதிக்கும் எதுவும் தெரியாது. போகுமிடம் பாதாளம் என்பதை அறியா பயணம் இடறில் போய் முடியப்போகிறது. காப்பாற்ற கலைஞரும் இல்லை, அவரது அனுபவத்தில் வந்த சீடர்களும் இருக்க மாட்டார்கள்...முடிவு.... இப்படித்தானா...

இப்படித்தான்.


அப்படித்தானா...

ஆமாம் அப்படித்தான்.


ஜீவித்திருங்கள்.

ஆமென்.


#dmk

#திமுக


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

6-10-2024

@MuthaleefAbdul

 

@actorvijay

 

@tvkvijayhq


No comments:

Post a Comment

"கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள்

 "கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி ...