சாம்சங் தொழிலாளர்கள கவனத்திற்கு :
சாம்சங் நிறுவனம் இருப்பதால் தான் கோரிக்கை வைக்கிறோம் நிறுவனமே இல்லை என்றால்..?
தயவு செய்து போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுங்கள்.
சிஐடியூ பிரச்சனையால் சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடமாற திட்டம்.? தமிழ்நாட்டின் தொழிற்துறையில் பேரிடி.!
▪️சாம்சங் நிறுவன ஊழியர்கள் சம்பளம், போனஸ் மற்றும் சில வசதிகளைக் கோரி போராடத் தொடங்கினார்கள்.
▪️பிரச்சனை நீடித்துக் கொண்டேயிருக்க தமிழ்நாடு அரசு தலையிட்டது.
▪️பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
▪️இந்நிலையில் சிஐடியூ சங்கத்தை சாம்சங் நிறுவனத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக பதிவு செய்ய வேண்டும் என சிஐடியூ கோருகிறது.
▪️ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கென நலச்சங்கம் இருப்பதால் சிஐடியூவை பதிவு செய்ய முடியாது என சாம்சங் நிறுவனம் மறுக்கிறது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது. (சிஐடியூ போன்ற அரசியல் கட்சி சார்ந்த சங்கம் உள்ளே வந்தால் எல்லாவற்றிலும் பிரச்சனை செய்வார்கள் என சாம்சங் நிர்வாகம் பயப்படுகிறது)
▪️சிஐடியூவை பதிவு செய்ய வேண்டும் என்பதைத் தவிர பிற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டி சிஐடியூ பதிவு விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம் என சாம்சங் நிறுவனம் கேட்டுக் கொண்டது.
▪️இதற்கிடையே உத்தரப்பிரதேசமும், ஆந்திராவும் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்துக்கு வந்துவிட அழைப்பு விடத் தொடங்கியுள்ளன. குஜராத்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்.
▪️தொழிற்சங்க பிரச்சனையை முன் வைத்து 2000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனம் இடம் மாறினால் பிற நிறுவனங்களும் அதையே பின்பற்ற வாய்ப்பு உண்டு என்றும், மற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே தயங்குவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு கவலைப்படுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு மோசமாக பாதிக்கப்படும்.
▪️அரசு நினைப்பதும் நியாயம்தான். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டுமானால் தொழிற்சங்க பிரச்சனைகள் வரக்கூடாது.
▪️சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்து இடம் மாறும் மோசமான முடிவை எடுத்துவிடக் கூடாது.
▪️வழக்கு முடியும் வரை சிஐடியூ அமைதி காப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால் அதற்கு விடமாட்டார்கள் போலத் தெரிகிறது.!
#Samsung #SamsungStrike
#SamsungWorkersStrike #Samsungworkers
No comments:
Post a Comment