Wednesday, November 13, 2024

இருந்து விட்டுப் போகலாமென்றுதான் வந்திருக்கிறோம்

 இருந்து விட்டுப் போகலாமென்றுதான் வந்திருக்கிறோம்


நம்மை யாரும் வரச்சொல்லி

அழைக்கவும் இல்லை


நம்மை யாரும் போகச் சொல்லி

துரத்தவும் இல்லை

வந்திருக்கிறோம்

போவோம்.......


இருந்து விட்டுப் போவதென்பதுதான்

வாழ்தலென்பது

எனக்கும் சேர்த்து -

எவருக்கும் உரைப்பதேயில்லை .......


இந்த வாழ்வை

கேள்விகளாலும் பதில்களாலும்

நரகப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்


நிறைய கேள்விகள் இருக்கும் போது

பதில்கள் பாவம் -

நிறைய பதில்கள் இருக்கும்போது

கேள்விகள் பாவம்


கொஞ்சம் கேள்விகள்

கொஞ்சம் பதில்கள்

போதுமானது இந்த பெருவாழ்விற்கு........


யோசித்துப் பாருங்களேன்

சந்தோஷம்

துக்கம்

பிரிவு

பாசம்

தேடல்

தொலைத்தல்

கண்ணீர்

விசும்பலென

எல்லாவற்றிற்கும்

இந்த கேள்விகளும் பதில்களும்தானே

தீர்மானித்துக் கொண்டே

இருக்கிறது .......


No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...