Wednesday, November 13, 2024

குறை ஒன்றும் இல்லை குன்றென நிமிர்ந்து நில்..கூட்டத்தில்!

 குறை ஒன்றும் இல்லை 

குன்றென நிமிர்ந்து நில்..கூட்டத்தில்!


"He'll is empty All the Devils are here"--The Tempest Shakespeare

ஷேக்ஸ்பியர் (நரகம் காலியாக உள்ளது எல்லா பேய்களும் இங்கு இருப்பதால்) 


நாம் சமூகத்தின் அங்கம். நாம் அதிலிருந்து தனித்து இயங்குபவர்கள் அல்ல. ஆனால் நிலமைகள் அப்படி அல்ல… இங்கு போட்டி, பொறமைகள் என அதிகம் உண்டு ….


தனிமனிதனாக உங்களில் ஒழுங்கு இருக்கும் போது, ​​வெளி உலகிலும் தவிர்க்க முடியாமல் ஒழுங்கு இருக்கும்.


யாருடனும் நெருக்கமில்லாத வாழ்வில்

வழியெங்கும் கொட்டிக் கிடக்கிறது

ஆகப்பெரும் சுதந்திரம்...


உங்கள் வாழ்க்கைக் கனவின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருங்கள். அதேவேளையில்  அவற்றைச் சிறுகுறிக்கோள்களாக பிரித்துக் கையாளுங்கள்...


இதன் மூலம் சிறந்த முறையில் உங்கள் வாழ்க்கையின் பயணம் தேக்கமின்றி நடக்கும். ஒவ்வொரு நாட்களையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்...


மற்றவர்களை முறையாகக் கையாளுவது எப்படி என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளில் சிக்கல்களைத் தீர்த்து அவை சண்டையாக மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.


மற்றவர்களுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை சொற்பூசல்களைக் களைந்து நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள். இதன் மூலம் உறவுகள் நீடிக்கும்...


உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள் தான். உடன் பயணிப்பவர்கள் அனைவரும் துணை செய்தாலும், செய்யாவிட்டாலும், பயணம் உங்களுடையது...


அவரை மலை போல் நம்பினேன், எமது நம்பிக்கையைக் களைந்து விட்டார். இவரை முழுமையாக  எதிர்பார்த்தேன் ஏமாற்றி விட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள், தன்னிரக்கத்தைத் தவிர எதையும் கொடுக்காது...


உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு, மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவி புரியாதவர்கள் பற்றிய வெறுப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்...


உங்கள் முயற்சிகள் மற்றும் உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் பணிவு அல்லது அடக்கம் உங்களின் வெற்றிகளைப் பார்த்து மற்றவர்களை மேலும் மேலும் உங்களைப் பற்றிப் பேச வைக்கும்...


அதிகம் கவனியுங்கள் குறைவாகப் பேசுங்கள், குறைவாக நீங்கள் பேசுவதால், தவறான கருத்துக்களை நீங்கள் தவிர்க்க முடியும்...


அது உங்களை ஒரு நல்ல திறமை வாய்ந்த மனிதராக மாற்றும். நீங்கள் என்ன உரையாடப் போகிறீர்கள் என மற்றவர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்களது சொல்லாட்சி நிலையாக இருக்க வேண்டும்...


உங்களுக்கு மற்றவர்கள் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி எனத் தொடர்ந்தால் வளர்ச்சி...


இயன்ற உயரங்களை எட்ட முயல்வதே திறமை. அதற்கு வேண்டியது மலையளவு மன உறுதி...


வாழ்க்கை முன் வைக்கும் ஒவ்வொரு பேராட்டங்களும், உங்களை முன்பை விட, இன்னும் வலிமையாய் செதுக்கித் தரும்...


பேராட்டங்களை விரும்பி எதிர்கொள்ளுங்கள். அவை இனிமையானவை...


மற்றவர்கள் செய்ய இயலாத அல்லது செய்திராத செயலைச் செய்யவும் முயற்சி செய்யுங்கள். மான முள்ள மனிதன்….


இந்த உலகம் இதுவரை கண்டிராத ஒன்றை நீங்கள் காட்சிப்படுத்த அல்லது செயல்பட முயற்சியுங்கள்.

இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான நாயகனாக வலம் வரலாம்.மற்றவர்கள் போலி பாசாங்கு மனிதர்கள்.

#வாழ்வியல்


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

3-10-2024.


@actorvijay


No comments:

Post a Comment

"கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள்

 "கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி ...