ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது குறித்து ராகுல் காந்தி வேதனைப்படுவதாகத் தெரிகிறது! அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதிற்குள் திணறுகிறார்.
அங்கே பிஜேபியின் களப்பணி தீவிரமாகவும் செம்மையாகவும் நடந்தது என்பதுதான் உண்மை! அவ்வாறு களப்பணி ஆற்றாமல் காங்கிரஸ் இணையத்தில் மட்டும் ஜெயராம் ரமேஷ்,கேசி வேணுகோபால் போன்றவர்களை வைத்துக்கொண்டு செயலாற்றியது அங்கு படு தோல்வியாக முடிந்தது. அவர்கள் கைகளை வீசிக்கொண்டு வருவதும் போவதுமாக இருந்தார்களே ஒழிய களப்பணி அங்கே சிறப்பாக இல்லை. காங்கிரசைப் பொருத்தவரையில் தமிழ்நாட்டில் திமுகவை நம்பித்தான் காரியமாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் தன் போக்கில் எதையும் செய்யாமல் ஏதாவது நடக்கும் என்று பதவி ஜாலியில் இருக்கிறார்கள்! என்பதெல்லாம் அவரது மன புழுக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்! இப்படியாக இருக்கிறார்களே என்று தமிழ்நாட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குறித்தும் ராகுல் காந்தி புலம்பியதாக டெல்லிப் பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் சொன்னார். காங்கிரஸில் சும்மா இருப்பதே பலருக்கு சுகமாகிவிட்டது!
Subscribe to:
Post Comments (Atom)
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா? இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment