“உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவிற்கு உள்ளது” என ரஷ்ய அதிபர் புட்டின் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் இந்தியா 150 கோடி மக்கள் தொகையுடன் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடு.! பொருளாதாரம் பண்டைய கலாச்சாரம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான நல்வாய்ப்புகள் போன்றவற்றை பெற்றுள்ளது இதன் காரணமாக இந்தியாவை சந்தேகமின்றி உலக வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் பொருளாதார வளர்ச்சியில் உலகை வழி நடத்தும் நாடாக இந்தியா உள்ளது.! இந்திய ரசியா இடையான ஒத்துழைப்பு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரிக்கிறது இந்தியாவுடன் அனைத்து வழிகளிலும் ரஷ்யா உறவுகளை மேம்படுத்தி வருகிறது அத்தகைய இரு தரப்பு உறவுகளில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று பாராட்டிக் கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்திற்கான ஆயுதங்களை இரு நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து தயாரிப்பதே இதற்கு சாட்சி என்று கூறியுள்ளார்!
அந்த வகையில் மோடி ரஷ்யாவின் உறவை சர்வதேச பார்வைகளுக்கும் உட்படுத்தி ரஷ்யாவுடன் இந்தியா நெடுங்காலமாக கொண்டிருந்த ஒப்பந்தங்களை அதன் மரபு சார்ந்த கொடுக்கல் வாங்கல் முறைகளைக் காப்பாற்றி வருகிறார் !
No comments:
Post a Comment