சென்னை 48 ஆவது புத்தகக் கண்காட்சியில், காரா பதிப்பகம் நூல்கள் வெளியீட்டு விழா இன்று 1-1-2025, புதன்கிழமை
அரங்கு எண் 128 காரா பதிப்பக நூல்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டு உரையாற்றினார். மூத்த வழக்கறிஞர் தமிழ்நாடு அரசியல் சமூக செயற்பாட்டாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கல்கி ப்ரியன், வாஞ்சிநாதன் நூலை கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அறிவரசன் புதல்வர் அழகிய நம்பி முன்னிலை வகித்தார். தமிழ் ஆர்வலர் கவியரசன் வரவேற்றார். புதுக்கோட்டை காரா பதிப்பக நிறுவனர் ரா. பொ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் புகழேந்தி, ஆவல் கணேசன், புலவர் ரத்தினவேலன், தொழிலதிபர் மணிவன்னன், கவிஞர் பாலமுரளி வர்மன், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விழுப்புரம் பாபு மற்றும் தமிழ் ஆர்வலர்கள், வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment