Kindness is evidence of impenetrable strength. It is the willingness to stay soft in a world that tries to harden you at every corner. It is the ability to absorb your own emotions and diffuse them, to decide what you want to act on and what you want to put back out into the world, regardless of what the world has put you through. Kind people are not just good, they are heroes in their own ways. Their ability to not reciprocate unkindness to a world that often deserves it makes them catalysts for the deepest healing to occur
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
மக்காச் சோளம் பயிரை கூட்டமாக வந்து கடுமையாக சேதப்படுத்தி வரும் பன்றிகளை விரட்ட தனது நிலத்தில் டிராக்டர் டாப் மேல் அமர்ந்து கொண்டு கண்காணித்து வரும் சுப்புராஜ் என்ற விவசாயி: கோவில்பட்டி கோட்டம் எட்டையபுரம், விளாத்திகுளம் வட்டங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா, கம்பு, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு பால் பிடிக்கும் நிலையில் உள்ள கதிர்களை கூட்டமாக பன்றிகள் வந்து தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் மனம் நொந்துபோய் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதூர் பகுதி கம்பத்துப்பட்டி கிராமத்தில் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் காட்டுப்பன்றிகள் சூழ்ந்து விவசாயி அய்யரப்பன் என்பவரை கடித்து படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் அயன்கரிசல்குளம் கிராமத்தில் மோகன்ராஜ் என்ற விவசாயி தனது மக்காச்சோளம் நிலத்திற்கு சென்று சுற்றிப்பார்த்து இருக்கிறார். அப்போது திடீரென பன்றிகள் கூட்டமாக மக்காச்சோளம் தட்டையை வேருடன் ஒடித்து கதிரை தின்று கொண்டிருந்தது. அதனை விரட்டியுள்ளார் விவசாயி மோகன்ராஜ், ஆக்ரோஷமடைந்த பன்றி மோகன்ராஜை சுற்றி வளைத்து உடல் முழுவதும் கடித்து குதறியது. படுகாயத்துடன் மோகன்ராஜ் சக விவசாயிகளுக்கு போன் செய்து நிலைமையை கூறி உள்ளார். படுகாயமடைந்த மோகன்ராஜை தேடி நிலத்திற்கு வந்து பார்த்த போது அருகிலேயே பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தது. உடன் இருந்தவர்கள் அவற்றை விரட்டியுள்ளன. மீண்டும் ஆக்ரோஷமடைந்த பன்றி அவர்களையும் கடித்தது. மறுநாளில் இருந்து விவசாயிகள் பன்றிகளுக்கு பயந்து யாரும் வேலைக்கு வர மறுக்கிறார்கள். இந்நிலையில் விவசாயிகள் இரவு நேரங்களில் பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்கவும், பன்றிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவும் டிராக்டர்களில் சென்று டாப் மீது அமர்ந்து கொண்டு பட்டாசு வெடித்தும், ஒலி பெருக்கி மூலம் நாய் குரைக்கும் ஓசை எழுப்பியும் விரட்டுகின்றனர் எதற்கும் மசியாத பன்றி வழக்கமாக பயிரை ஒடித்து சேதப்படுத்தி வருகிறது. இன்றைய தினம் காலை ஐந்து மணியளவில் ரெகுராமபுரம் ஜெயக்குமார் என்பவர் நிலத்தில் பன்றிகள் மந்தையாக வந்து பயிரை அழிப்பதை படத்தில் காணலாம். அரசு மெளனம் கலைப்பது எப்போது? விவசாயிக்கு அரசு கூறும் பதில் என்ன? கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கொண்டுவேடிக்கை பார்க்கிறார்களா ஆட்சியாளர்கள் ?
No comments:
Post a Comment