#மின்னணுப்பெட்டிகள்_குறித்து_உச்சநீதிமன்றம்
———————————————————-
மின்னணுப் பெட்டிகளின் மூலம் வாக்குப் பெறுவதைத் தவிர்த்துவிட்டு பழையபடி ஓட்டு சீட்டுகளைப் பயன்படுத்தித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று செய்திருந்த பொதுநல வழக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்!
மனுதாரர் மின்னணு வாக்குப்பெட்டிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வாதாடினார்! இந்த மனுவை செய்திருந்த கே ஏ பால் என்பவர் ஓட்டுக்கு பணம் மது பரிசு பொருட்கள் கொடுத்து வாக்குக் கேட்கும் வேட்பாளர்களை 5 ஆண்டுகளுக்கு தேர்தல் நிற்கக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் என்று மேலும் கோரியிருந்தார்.
உங்களுக்கு எப்படி இவ்வாறெல்லாம் மனுச் செய்யும் யோசனை வருகிறது என்று நீதிபதிகள் அவரைக் கேட்டபோது நான் 150 நாடுகள் சுற்றியுள்ளேன் அங்கு எல்லாம் மின்னணு வாக்குப் பெட்டிகள் இல்லாமல் ஓட்டுச் சீட்டுகள் வழியாகத்தான் தேர்தல் நடந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் தான் ஒரு அமைப்பு வைத்து நடத்தி வருவதாகவும் அதன் வழியே பல லட்சக்கணக்கான மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் என்று அவர் சொன்ன போது அதை முறையாகச் செய்வதை விட்டு பிறகு எதற்கு நீங்கள் அரசியலுக்குள் வருகிறீர்கள் என்று நீதிபதிகளும் கேட்டார்கள்!
அதற்குப் பதிலாக பால்
சென்ற லோக்சபா தேர்தலில் 9000 கோடி ரூபாய் பணம் தேர்தல் கமிஷன் மூலம் பிடி பட்டுள்ளது! இங்கு ஊழல் அதிகம் மலிந்து உள்ளது என்று கூறினார்.
உங்கள் கோரிக்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?ஓட்டு சீட்டுகளைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தினால் ஊழல் ஒழிந்து விடுமா? என்று நீதிபதிகள் கேட்டார்கள்.
மின்னணு வாக்குகளில்தேர்தல் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக எலான் மஸ்க் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி போன்றோர் கூறியுள்ளதாக பால் கூறினார்!
பதிலாகத் தேர்தலில் தோற்ற போது சந்திரபாபு இதே மின்னணு வாக்குப்பதிவை குறை கூறினார்!
இப்போது ஜெகன் மோகன்ரெட்டியும் அதேபோல் கூறுகிறார்! தோற்றால் ஒன்று பேசுவது ஜெயித்தால் ஒன்று பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது ஆகவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் வாதத்தை முடித்து வைத்தார்கள்!

No comments:
Post a Comment