Wednesday, January 22, 2025

#அரசியல்

 #அரசியல்

—————-

அரசியல் மற்றும் அதன் அறிவியல், இயக்கவியல் என்பது ஆளும் குழுக்களின் தாக்கம் மற்றும் ஆட்சியாளர்கள் எவ்வாறு சட்டங்களை அமல்படுத்தத் தேர்வு செய்கிறார்கள், அதற்கான செயல் திட்டங்கள் மற்றும் அது தன்னியல்பில் எவ்வாறு மக்களுக்கான சேவை dynamism velocity and acceleration மனப்பான்மையோடு இருக்க வேண்டும் என்பதுடன் அரசியல் என்பது குறிப்பிட்ட நாடுகளின் ஒட்டுமொத்த வரலாற்றையும் புவியியல், பொருளாதாரம் ஒருவர் தனக்குள் புரிந்து கொள்ளும் செயல்முறையாகும்.
அதுபோக இயற்கையின் சட்டமானது உற்பத்திக்கான காரணங்கள் எதுவாயினும் சட்டங்கள் பகிர்மானங்கள் யாவும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமன்றி, அதன்படி மனிதனுக்கு அமைதி மற்றும் உயிர்வாழ்வை உத்தரவாதப்படுத்தும் (கட்சிகள் ) சமூகக் குழுக்களின் அரசியல் செயல்பாட்டைக் குறிக்கக் கூடியது. அந்த வகையில் அரசியலானது மனிதக் கூட்டு வாழ்வின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மாநிலத்தில் அல்லது ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதரும் தன்னை அறியாமலே அரசியல்மயம் centrifugal and centripetal நிலையில் ஆகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்!.
“இரந்து வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகயிற்றியான்”
என்று படைத்தவனையே மறுதலிப்பது தான் விஞ்ஞானபூர்வமான அரசியல் ஆகிறது.
இங்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் கவுன்சிலர் எம்எல்ஏ வாக ஆசைப்படுகிறார் எம்எல்ஏ மந்திரியாக ஆசைப்படுகிறார். மந்திரிகள் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்.
முதல்வர்களோ எப்போதும் நம்மைப் பதவி நீக்கம் செய்து விடுவார்களோ என்று அச்சப்படுகிறார்கள்.
அந்த வகையில் அரசியல் என்பது
திருப்தியற்ற ஆன்மாக்களின் கடல். அங்கே ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்.ஜனநாயக மற்ற பணநாயகம் ஆகும். இதில் பண்பாடுகள் இல்லை.
ஒருவர் என்ன நிலையில் வாழ்க்கையில் இருந்தாலும் அவர் தன்னைச் சுற்றியுள்ள அரசியலை எதிர்கொண்டு வாழத்தான் வேண்டும். அதுவே வாழும் கலை. எத்தனை பேர் இதைப்புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்? வெறும் பதவி மோகம் மற்றும் சுயநலமாகச் சொத்து சேர்ப்பதில் மட்டும்தான் கவனமாக இருக்கிறார்கள். இதில் தகுதியே தடை.
ஓட்டு விற்பனை என பல கவலையான நிலைகள்….hero worship, cult, dynasty politics என்பது நியாமாகி விட்டது.
எனது சட்டப் பணியில் பல பொதுநல வழக்குகளைத் தொடுத்துக் கட்சிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நீடித்து வந்திருக்கிறேன். மனம் ஒப்பவில்லை என்றால் விலகியும் அரசியல்ப் பூர்வமாக ஒரு தனி நபர் யோக்கியதையுடன் வாழ்ந்து வந்திருக்கிறேன்!
அது மிகவும் திருப்தியாகவும் இருக்கிறது.
இந்த நவீன வாழ்க்கையானது அரசியலைப் பொறுத்தளவு மிக மோசமாகச் சீரழிந்து இறுதியில் சிலரின் காலடியில் வீழ்ச்சி அடைந்து விட்டது! என்பதைத் தவிர இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை!

No comments:

Post a Comment

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்*

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்* ———————————— இலங்கைக்கு அரசுப் பயணமாகவும் சென்ற பிரதமர் மோடி அவர்கள் அங்கு  பல தரப்பினரையும் சந்தித்துள்ளார். க...