Friday, January 24, 2025

பிரபாகரன்- பாண்டி பஜார் சம்பவம்

நேற்றைக்கு முதல் நாள், (22-1-2025) ஆலந்தூர் பாரதி மேடையில் பேசும் போது பிரபாகரனை பெயிலில் எடுக்குமாறு கலைஞர் தன்னிடம் சொல்லி  அவருக்கு பெயில் எடுக்கப்பட்டதாகச் சொல்லியுள்ளார்.
கடைந்தெடுதவர்களின் பொய்கள் இப்படித்தான் சுயலாபம் அடைகிறது!

நாக்கூசாமல்  எப்படித்தான் இப்படிப் பொய் சொல்கிறார்களோ தெரியவில்லை! உண்மையில் நடந்த விபரத்தையும் அக்காலங்களில் நான் அதற்காக எத்தனை முயற்சி செய்தேன் பாடுபட்டேன் என்பதையும் தருகிறேன்.

1986 ல் எனது திருமணம். அதற்கு முன்பு மதுரையில் முதல் டெசோ  மாநாடு நடந்து முடிந்திருந்தது. எனது திருமணத்திற்கு பிரபாகரன் வந்திருந்தார். எனது திருமணத்தில் வைத்து தான் கலைஞர் பிரபாகரனை சந்திக்கிறார்.

அதற்கு முன்பாக 1979 -82களிலேயே பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார்! என்னுடன் வெகு காலமாக தங்கி இருந்தார் . ஒரு நாள் மாலை பிரபாகரன் என்னை தி. நகர் ராஜகுமாரி தியேட்டரில் படம் பார்க்க போகலாமா என்று அழைத்தார். எனக்கு வேறு சில வேலைகள் இருந்ததனால் நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டேன்.அன்று  இரவு பிரபாகரன் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரின் வடக்கு புறச்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த  தான்  தனக்கு எதிரே பிளாட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் வருவதை கீதா கபே முன் பார்த்து விட்டார்.  அப்போது  முகுந்தனும் பிரபாகரனைப் பார்த்துவிட்ட நிலையில் வாய் தகராறில் இருவருமே துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். ஒருவருக்கு ஒருவர் சுட அந்தத் தாக்குதலின் இறுதியில் முகுந்தன் தப்பிவிட்டார் எனினும் அந்தக் கலவரத்தின் காரணமாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பிரபாகரனைக் கைது செய்து கொண்டு போய் வைத்திருந்தார்கள்.  அந்த சம்பவத்தின் முதல் தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எம்ஜிஆர் தான் பிரபாகரனை கண்ணியமான முறையில் நடத்துங்கள் என்று சொன்னதன் அடிப்படையில் அவர் நன்கு ஆடை உடுத்தி ஃபேண்ட் சட்டை எல்லாம் போட்டு தான் அங்கு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார். சிலர் சொல்வது போல ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்டார் என்று சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த  பொய்! கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில்  முகுந்தன் கைதாகி அழைத்து வரப்பட்டார்.

உடனே  இரவு 9.30 மணிக்கு நான் பாண்டி காவல் நிலையத்தில் சென்றேன்.
அங்கு தம்பியை சந்தித்தேன்.
அதன் பிறகு நெடுமாறன் எனக்கு பிரபாகரனை பிணையில் எடுக்கும்படி சொன்னார்.
அதன் பின் ஆகஸ்ட் 1982 வாக்கில் நான் ஆவணங்களை வைத்து அவரை பிணையில் எடுத்தேன். அப்போதும் அங்கு பிரபாகரன் கௌரவமாகத்தான் நடத்தப்பட்டார். அப்போது நான்  திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை! தமிழ்நாடு ( காமராஜர்) காங்கிரஸ் கட்சிபொதுச்செயலாளராக இருந்தேன்.அதன் தலைவராய் பழ நெடுமாறனோடு இருந்தார். விபரம் தெரியாமல் யாரும் பேசக்கூடாது! உண்மையாக நடந்த சம்பவங்கள் அதற்கான ஆவணங்களைப் பார்த்துத் தான் பேச வேண்டும்!. இன்னும் என்னிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் இருக்கின்றன!! மூத்த பத்திரிக்கையாளர் ஜூனியர் விகடன் ராவ் இருக்கிறார் தினமணி பத்திரிகை ஆசிரியர் கே வைத்தியநாதன், இருக்கிறார் கல்கிப் பிரியன், இந்து என். கணபதி, தாராசு ஷ்யாம் போன்றவர்களுக்கு எல்லாம் இந்த விபரம் தெரியுமே ஒழிய மற்ற இன்றைய இளம் பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் அன்று நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரிய வாய்ப்பு இல்லை! இவர்களெல்லாம் என் நண்பர்கள் அவர்களிடம் விசாரித்தும் கூட யாரும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதே சமயத்தில் கலைஞருடன் எனக்கு 1979 முதல் நெருக்கமான உறவு இருந்தது! இப்போது போல் கைபேசி இல்லை. தொலைபேசியில் என்னிடம் அடிக்கடி பேசுவார்!

உண்மையைச் சொன்னால் அந்த பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டுக்கு பின்பு  அப்போது முதல்வராய் இருந்த எம்ஜிஆர் அவர்கள் பிரபாகரனை மூன்று மாதம் சென்னை மத்திய சிறையில் வையுங்கள் அதுதான் அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்! என்று சொன்னார். அதன் அடிப்படையில் சென்னை  சென்ட்ரல் நிலையத்தில் அருகே இருந்த மத்திய சிறைச்சாலையில் பிரபாகரன் இருந்த போது  வைகோவை அங்கே அழைத்துக் கொண்டு போய் சிறையில் பிரபாகரனை நான்தான் சந்திக்க வைத்தேன்.. அப்படித்தான் வைகோவுடன் எனக்கு முதல் பழக்கம் ஏற்பட்டது.

இதுதான் சரியான சுருக்கமான நடந்த உண்மைகள். தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம்.

பிரபாகரன் ஒருபோதும் பெரியாரையோ, திராவிட இயக்கங்களையோ குறை சொன்னதில்லை.

https://drive.google.com/file/d/1t4qPjvchu3mrSmSPbMKeAmrzrlFDPkF1/view?usp=sharing
••••

https://ksradhakrish.blogspot.com/2018/08/blog-post_13.html
••••

https://ksradhakrish.blogspot.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+
••••

https://ksradhakrish.blogspot.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

#பிரபாகரன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-1-2025

No comments:

Post a Comment

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*)

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*...  ( *நான் பார்த்த அரசியல்*) " நாம் ஒர...