நேற்று செய்தித்தாள்களில் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பேரன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளுக்கு முழு பக்க விளம்பரங்கள் வந்தன. அதில் வளருது புகைப்படங்கள் இருக்கின்றன.முதல்வர் ஸ்டாலின் அவர்களது புகைப்படத்தையும் துணை முதலமைச்சர் ஆன அவரது மகனின் புகைப்படத்தையும் இணையாக யாரும் அவ்வளவு எளிதாக அச்சடித்து விட முடியாது!
இப்போது ஸ்டாலின் குடும்பத்திற்கு ஜால்ரா போடுபவர்கள் தான் சுற்றிலும் இருக்கிறார்கள்! திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு அதே திராவிட மாடலுக்கு அப்பாற்பட்டு அன்பில்லாமல் விளம்பரம் கொடுப்பது. இதில் நமக்கு என்ன? அது அவர்கள் பாடு! திமுகவுக்கு மாற்றுக் கட்சியில் இருந்து கொண்டு அதைப் படுமோசமாக விமர்சித்தவர்கள் தான் இப்போது இப்படியான ஆதரவு விளம்ரங்களைப் போடுகிறார்கள்.
இப்படியானவர்கள் தான் அதாவது மோசமாக விமர்சித்தவர்கள் தான் என்று இப்படியான முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்து சமாதான பேச்சு வார்த்தைக்கு வருகிறார்கள். முதல்வர் படத்தையும் துணை முதல்வர் படத்தையும் போடுவதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று இதற்கு எதிர்வினை செய்யாமல் மௌனமாக இருப்பது இன்று திமுகவில் கொழுத்துக் கொண்டிருக்கும் கட்சிக்கு உள்ளேயே ஆன புத்திசாலித்தனமாக இருக்கிறது!
இவ்வளவு எதிர்ப்பாகப் பேசிவிட்டு முதல்வர் படத்தையும் அவரது மகன் துணை முதலமைச்சர் படத்தையும் ஒருவர் சந்தர்ப்ப வசம் கருதி போடுவது என்றால் என்ன தைரியத்தில் அப்படி செய்கிறார் என்று ஒரு அர்த்தமும் விளங்கவில்லை! இது ஒரு கேவலமான பண்பாடு!
No comments:
Post a Comment