Wednesday, January 22, 2025

#தமிழகவெற்றிக்கழகவிஜய் போகவில்லை என ஊடகங்கள்…

 #தமிழகவெற்றிக்கழகவிஜய் போகவில்லை என ஊடகங்கள்…




சில விடயங்கள்… சில பதில்கள்….
———————————————————-
விஜய் ஏன் போகவில்லை என ஆவேசப்படும் ஊடகங்கள் பொறுப்பில் இருக்கும் முதல்வர், துணை முதல்வர் மக்கள் பிரதிநிதிகள் ஏன் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் ஆய்வுக்கு போகவில்லை என்று கேட்க தயங்குவது ஏன்?
விஜய் ஏன் நிவாரண உதவி கொடுக்க நேரில் போகவில்லை என்று டிபேட் செய்யும் ஊடகங்கள் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு பெயரளவில் சென்றுவிட்டு சென்னையில் வழக்கமான நிகழ்வுகளில் ஈடுபடும் இவர்களை கேட்க மறுக்கின்றன ஏன்?
கடந்த நாட்களில் பெய்த பருவ மழையால் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை போன்ற உள் நாட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. உயிர்ச் சேதங்கள் பயிர்ச்சேதங்கள் குடியிருப்புச் சேதங்கள் அன்றாட வாழ்வின் பாதிப்பு மழைக்காலத்துத் தொற்று நோய்கள் அதற்கான மருத்துவ வசதியைப் பேணுவது எனப் பல வகையிலும் தாங்கொணா துயரங்களுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய அந்த மக்களின் பாடுகளை விட்டுவிட்டு
உதயநிதிக்கான கொண்டாட்டங்களை மாசுப்பிரமணியம் வெகு அதிவிமர்சை
யாகநிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.!
எவ்வளவு முக்கியம் பாருங்கள்!
மறுபுறம் திருச்சியில் அன்பில் தர்மலிங்கம் பேரன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு நாடு நகரமெங்கும் பிறந்த நாள் விழா கொண்டாடப்
படுகிறது! திமுகவை கடுமையாக எதிர்த்து தலைவர் கலைஞரை பேசிய மாற்றுக் கட்சியில் இருந்த ஒருவரே திடீரெனப் புறப்பட்டு இந்த முழுப்பக்க விளம்பரங்களை நாளிதழ்களில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!
இப்படியான நிலையில் இவர்கள் விழாக்கோலம் கண்டு கொண்டிருப்பது என்ன வகை அர்த்தத்தில் இருக்கிறது! அவரவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட பிறந்தநாள் கொண்டாடுவதா ஒரு கட்சியின் நோக்கம்!
சென்னை மழை வெள்ளத்தில் சில இடங்களில் முதலமைச்சர் காணப்பட்டார்! ஆனால் அதே மாதிரி அதிகாலை வேலையில் முதல் மதியம் வராமல் பின் வந்து நிலவரரங்களைப் பார்த்தார் துணை முதலமைச்சர் உதயநிதி.
இப்படி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அண்ணா அமைத்த திமுக ஆட்சியின் நிழலில் அமர்ந்து கொண்டு தங்கள் குடும்ப சொத்துக்களையும் வாரிசுகளையும் வளர்த்து கொண்டிருக்கிற இந்த சுயநலக் கும்பல் தங்கள் பிறந்தநாளுக்கு வெட்கமற்று திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறது.
கலைஞர் மாடல் போய்விட்டது! இப்போது நடப்பது திராவிட மாடலும் அல்ல! உண்மையைச் சொன்னால் ஸ்டாலினின் குடும்பமாடலாக மாறிவிட்டது!
தன் குடும்ப நலனே முக்கியம் என்ற வகையில் வாரிசு அடிப்படையே முதல்வர் ஸ்டாலினின் ஆதாரமாக இருக்கிறது! சரி நன்றாக வாழட்டும்! அதேபோல் வைகோபால்சாமியும் தன் குடும்ப அரசியல் தன் வாரிசு அரசியலையே ஆதாரமாக வைத்துக் கொண்டு விட்டார்! நலமாக இருக்கட்டும்!
அண்ணாவின் குடும்பம்! எங்கோ⁉️
அவரது வளர்ப்பு மகன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட போது திமுகவில் இப்போது வளமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யார் ஒருவரும் சென்று எட்டிப் பார்க்கவில்லை!
இந்த அமைச்சர்கள் தங்கள் பிறந்த நாட்களை இப்படி கொண்டாடினோம் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடினோம் உதயநிதி பிறந்தநாளை எப்படி கொண்டாடினோம் பாருங்கள் என்று பெருமை பேசிக்கொண்டு கட்சி தலைமைக்கு தங்களை விசுவாசமாகக் காட்டிக் கொள்வதைத் தவிர செயல் திட்டங்கள் நலத்திட்டங்கள் மக்களின் பிரச்சினை என்று எதிலும் கவனம் இல்லாமல் பிறந்தநாள் உல்லாசம் காண்கிறார்கள்! ஏசி கார்களில் அமர்ந்து கொண்டு நகர்வலம் வருகிறார்கள். எங்கு பயணித்தாலும் தமிழகம் எங்கும் பேனர்கள்! பேனர்கள்! பேனர்கள்! பேனர் புரட்சியே நடக்கிறது! இதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும்! பேனர் முழுக்க கொழுத்துப்போன முகங்கள்! விளம்பரங்களுக்கு ஒரு எல்லை இல்லையா! இவர்களுக்குப் பாலாபிஷேகம் செய்ய பல அடிவருடிகள்!
இந்த பேனர் கடைக் காரர்களும் இவர்களுடைய ஆட்கள் தான் போலும்! சரமாரியாக அடித்துத் தொங்க விடுகிறார்கள்!
காரணம் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்கு வாங்கி மீண்டும் ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கைதான்! இதைவிட அரசியலில் மானக்கேடு எதுவும் இல்லை! பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து விட்ட இவர்களை தேர்தல் எனும் ஜனநாயகத்தைப் பயன்படுத்தித் திமுக காப்பாற்றிக் கொண்டிருப்பது அரசியலமைப்பின் அவலம் இன்றி வேறு என்ன!
“இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இன்றிக் கெடும்”

No comments:

Post a Comment

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்*

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்* ———————————— இலங்கைக்கு அரசுப் பயணமாகவும் சென்ற பிரதமர் மோடி அவர்கள் அங்கு  பல தரப்பினரையும் சந்தித்துள்ளார். க...