கோவில்பட்டி நகரம், காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகன் என்பவரின் மகன் கருப்பசாமி நேற்று காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் படிக்கும் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 5 ம் வகுப்புக்கு செல்லவில்லை. நேற்று காலையில் அவனுடைய அம்மா பாலசுந்தரி தீப்பட்டி வேலைக்கு சென்றுள்ளார்.பையன் கருப்பசாமி மட்டும் தனியாக வீட்டில் டிவி பார்த்து கொண்டு இருந்த நிலையில் யாரோ அந்த பையனை கடத்தி கொண்டு போய் உள்ளனர். அந்த பையன் கழுத்த்தில் ஒன்னரை நகையும், மோதிரம் அணிந்து உள்ளான் என்று தெரியவருகிறது.இந்த நிலையில் வேலை முடித்து திரும்பிய தாய் அவனை தெருவெங்கும் தேடி உள்ளார். அதன்பிறகு குழந்தை காணவில்லை என்று கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மேற்படி குழந்தை கருப்பசாமி பக்கத்து வீடு மொட்டை மாடியில் பிணமாக மீட்டு உள்ளனர். தற்போது போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர் என்று செய்தி தெரிவிக்ககிறது.
No comments:
Post a Comment