#*பிராபாகரன்*
*சில குறிப்புகள்*
————————————
சோவியத் இலக்கியங்கள் ஆங்கில மற்றும் ஜெர்மனி இலக்கியங்கள் எல்லாம் பெரிதான ஒன்றுதான். ஆனால் தமிழ்நாட்டில் அதைவிட மிகுந்த சிறந்த இலக்கியங்கள் இருக்கிறது.
பிரபாகரன் தனது தொடக்க காலங்களில் தமிழைச் செம்மொழி என்றுதான் கூறுவார்! இங்கு யார் ஒருவரும் அதைப் பாராட்டுவதற்கு முன்பே பிரபாகரன் தமிழ் ஒரு செம்மொழி என்பதில் உறுதிப்பாடாக இருந்தார். அம்மாதிரியான முடிவிற்கு வரும் வகையில் பலதுறை வாசிப்பு அவரிடம் இருந்தது.
போக பல்வேறு உலக இலக்கியங்களை வாசித்தவர் ரஷ்ய இலக்கியங்கள் தொட்டு தமிழில் சுந்தர ராமசாமி வண்ண நிலவன், அகிலன், போன்றவர்களுடைய படைப்புகளைக் குறிப்பிட்டு தனது ஏடுகளில் பகிர்ந்து கொண்டது உண்டு. கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன்
கு. அழகிரிசாமி, கிரா போன்றோரின் படைப்புகளை படிப்பார்
அதிகம் சினிமாக்களைப் பார்ப்பதில் பிரியம் கொண்டவர். அவற்றின் மூலம் மக்களிடம் சில எதார்த்தங்களை எடுத்துச் செல்ல முடியும் என்று நம்பியவர்! திரைத்துறை உலக சினிமாக்களில் ஒரு பார்வை யுத்த கால திரைப்படங்கள் என
தன் லட்சியப் பாதைக்கு உரிய அனைத்துக் கலைகளையும் ஆதரித்தவர் பிரபாகரன்.!
அவர் நல்ல தொலை நோக்கு உடையவர். தன்னுடலைக் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக காலையில் எழுந்தவுடன் மூச்சுப் பயிற்சி எல்லாம் செய்வார்! அதேபோல் தேன் ஒரு நல்ல மருந்து என்பதனால் அதை காலை வெண்ணீரோடு கலந்து அருந்துவார். இப்படியான பழக்கங்கள் அவரிடம் உண்டு. பெரும்பாலும் ஆங்கில மருந்துகளைத் தவிர்த்து விட்டு தமிழில் சித்த வைத்திய மருந்துகளை மட்டுமே முடிந்த அளவு எடுத்துக் கொள்வார். அவர் என்னுடன் தங்கி இருந்த நாட்களில் அவர் வெளிப்படுத்தியது பேசியது எல்லாவற்றையுமே தொகுத்தால் ஒரு நூலாகவே கொண்டு வரலாம்.
காபி, தேநீர் அருந்த மாட்டார்.
அசைவம் மீன், கோழி, இறைச்சி, நண்டு கருவாடு மட்டுமே எடுத்துக்கொள்வார். புகாரி, கஜேந்திர விலாஸ், உட்லண்ட்ஸ், மயிலாப்பூர் பீமா விலாஸ, மயிலை கபாலீசுவரர் மெஸ (அப்போது சைவ சாப்பாடு மட்டுமே) ராயர் மெஸ் என சென்னையில் உள்ள உணவகங்களில் செல்பதும் உண்டு. சேவு , முறுக்கு, சீடை, அதிரசம், கட்டி எருமை தயிர் கிராமதனமான தின்மானங்கள் பிடிக்கும்.
தமிழ் கடவுள் முருக பக்தர். எனவே தனது திருமணத்தை திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்துக்
கொண்டார்.
நேத்தாஜி, பகத்சிங், வஉசி, பாரதி, கட்டபொம்மன், புலித்தேவன் போன்ற ஆளுமைகளை பாராட்டியது உண்டு. பெரியார் மீது எந்த கருத்தும் எதிர்மறையாக சொன்னது இல்லை. இந்திய தமிழக அரசியல் மற்றும் தலைவர்கள் குறித்து எந்த கருத்தையும்
பிரபாகரன் வெளியிட்டது இல்லை. தனது பெயரை கரிகாலன் என்று எழுதுவார்.
அவரோடு சென்னை வள்ளாலர் இல்லம்,
மதுரை திருமலை நாயக்கர் மகால், எட்டையபுரம் பாரதி மண்டபம் -வீடு, நாவலர் சோமுசுந்தர பாரதி வீடு, பஞ்சலாங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, ஓட்டப்பிடாரம் வஉசி இல்லம், திருச்செந்தூர்,குமரி முனை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், தஞ்சை பெரிய கோவில், புது டில்லி என பல இடங்களுக்கு அவருடன்
சென்றதுண்டு.கிராமங்கள் பிடிக்கும் . கிராம பம்பு செட்டுகள் குளிப்பதில் மகிழ்ச்சி கொள்வார்
தமிழ்நாட்டில் இருக்கும் போது பாலச்சந்தர் படங்களை மகேந்திரன் படங்களை விரும்பி பார்ப்பார். சென்னையில் குறிப்பாக தேவி, சாந்தி, கேசனோ,சத்தியம், ஆனந்த்,சஃபையர், பைட்லைட் தியேட்டர்களில் அடிக்கடி சென்று படம் பார்த்து வருவதுண்டு. சினிமாவின் மூலம் மக்களிடம் சில உலக இனங்களின் வாழ்வியல் எதார்த்தங்களை ஒடுக்கப்படுபவர்களின் நிலைமைகளை எடுத்துச் செல்ல முடியும் என்று நம்பியவர்! இப்படியாகத்திரைத்துறை உலக சினிமாக்களில் ஒரு பார்வை ஆங்கில மொழியில் வெளியாகி வரும் யுத்த கால திரைப்படங்கள் அரசியல் ஓவியங்கள் இசை என தன் லட்சியப் பாதைக்கு உரிய அனைத்துக் கலைகளையும் பார்த்து அதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டவர் பிரபாகரன்.!
போக இன்று வரை ஒருவர்என்று ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் பிரபானுக்கு எந்த ஒட்டும் உறவும் கிடையாது! பிரபாகரன் தன் குடும்பத்தைக் கூட களத்தில் இறக்கினாரரே ஒழிய சகோதர பந்தங்களை எல்லாம் உதறியவர்!தனது சகோதரி பெற்றோர் மீது பாசமும் இருக்கும.பிரபாகரன் மிக சிறந்த தமிழ் உலகம் உள்ளவரை மறக்க முடியாத அளவிற்குக்கான ஒரு பெருந்தகையாளர்! ஈழ தமிழ்த் தேசியத்திற்கான உண்மையான களப்போராளி! இதில் யார் ஒருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது!
விகடன் ராவ், சுதாங்கன், கல்கி ப்ரியன்,
இந்து ராம், டி.எஸ். எஸ். சுப்பிரமணியம் என டில்லி பத்திரிகையாளர்கள் பலர் சந்தித்து பேட்டி எடுத்தனர். தோழி அனிதா பிரதாப்புக்கு முதன்முறை ஆங்கில Sunday ஏட்டுக்கு என்மூலகமாக கேள்விகள் கொடுத்து பேட்டி எழுத்து வாயிலாக நடந்தது.
கடந்த 1977 முதல் 1987 வரை இருந்தார். இன்னும் பல செய்திகள் உண்டு. அவை எனது நினைவு குறிப்புகளில்…
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-1-2025.
No comments:
Post a Comment