Wednesday, January 22, 2025

#டங்ஸ்டன்ஆலை #மதுரைஅரிட்டாப்பட்டி

 #டங்ஸ்டன்ஆலை

மதுரை அரிட்டாப்பட்டியில் நான் முதலமைச்சராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் ஆலைக்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்! நல்லது!
இதைப் போலவே கடந்த காலத்தில் பல வாக்குறுதிகளை முதல்வர் தந்து அதை நிறைவேற்றாமல் இருக்கிறார். உதாரணமாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என்றதும் பழம்பெரும் கோயில்களைப் புதுப்பித்து தருவேன் என்று சொன்னதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை விலக்குவோம் என்று சொன்னதும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவேன் என்று சொன்னதும் அதுபோல் என் மகனோ மருமகனோ அரசியலுக்கும் ஆட்சிக்கும் வர மாட்டார்கள் என்று சொன்னதும் அது ஒன்றின் இதுவரை நிறைவேற்றாமல் இருப்பதும் மேலே அரிட்டா பட்டியில் ஆலையைக் கொண்டு வரமாட்டேன் என்று இப்போது சொல்வதும் எல்லாம் ஒரே வகையை சேர்ந்தது தானா?
மேலே சொன்ன எதையும் நிறைவேற்றாமல் இப்போது புதிய வாக்குறுதி வேறு தருகிறார்! வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகள் தானா?
இப்படியான நிறைவேற்ற இயலாமல் தரும் வாக்குறுதிகளை எப்படி நம்புவது?

No comments:

Post a Comment

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்*

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்* ———————————— இலங்கைக்கு அரசுப் பயணமாகவும் சென்ற பிரதமர் மோடி அவர்கள் அங்கு  பல தரப்பினரையும் சந்தித்துள்ளார். க...