Sunday, January 26, 2025

தமிழ், தமிழகம் என பேசியவர்கள முதலில் இவர்கள்தான்….

தமிழ், தமிழகம் என பேசியவர்கள முதலில் இவர்கள்தான்….

1. 'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் 
(5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) 
2.மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950)
3. திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்-திரு. வி. க., 
இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் (Thiru. V. Kalyanasundaram, ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953)
4. சோமசுந்தர பாரதியார் (27 ஜூலை 1879 - 14 டிசம்பர் 1959) ஆய்வாளர், பேராசிரியர், வழக்கறிஞர், எட்டையபுரம்,பாரதியாரின் நண்பர் விடுதலை போராட்டத்தில் வஉசியோடு களம் கண்டவர் . இந்தி எதிர்ப்பு முதல் போராட்ட தலைவர்.



5. ஈழத்து அடிகள்.

"முதல் இந்தி எதிர்ப்புப் போரில் தளபதியாக இருந்தவர் பெரியார்" : உதயநிதி ஸ்டாலின் கூறியதில் ஒரு பங்கு உண்மை மட்டுமே உள்ளது. 99 பங்கு மறைக்கப்பட்ட பெரிய வரலாறு இதோ !

உண்மை என்ன ? : -

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கலைக்க முயற்சி செய்து பிறகு இணைந்து கொண்ட ஈ.வெ.ராமசாமி பெரியார், தாம் ஏன் இணைந்தேன் என்பதற்குப் பிறகு  சொன்ன காரணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அது இதோ இதுதான்...

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏன் எதற்காக ?!

விடுதலை இயக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சி 1937 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அதில் ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார் உள்ளட்ட காங்கிரஸ்காரர்கள் போட்டியிட்டனர். "தாம் வெற்றி பெற்றால் தமிழநாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்படும்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வந்தவுடன் கரூரில் இருந்த ஈழத்து சிவானந்தம் அடிகள், "உங்கள் கடமை" எனும் தலைப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் சாராம்சம், "உங்களிடம் வாக்கு கோரி வரும் வேட்பாளர்களிடம், பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயமாக்கப்படாது என்று உறுதி தருவோருக்கே எங்கள் வாக்கு என்று கூறுங்கள்" என்பதே. இந்த அறிக்கை தமிழ்நாடு முழுதும் அனுப்பப்பட்டது 

ஈழத்து சிவானந்தம் அடிகளை அப்போதுதான் வெளி உலகிற்கே தெரியும். அவர் கரூரில் ஒரு அன்னக்காவடி சத்திரத்தில் தங்கி இருந்தவர். ராஜாஜியின் அறிவிப்பைக் கண்டு முதலில் செயல்பாட்டில் இறங்கியவர் ஈழத்து அடிகள்.

மறைமலை அடிகள் "இந்தி பொதுமொழியா ?" எனும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டபோது அதை கோ.து.நாயுடு, பாகனேரிக் காசி விசுவநாதன் ஆகிய இருவரின் பண உதவியுடன் 15 ஆயிரம் படிகள் அச்சிட்டு வெளியிட்டவர் ஈழத்து அடிகள். 

நாவலர் சோமசுந்தர பாரதியார் "இந்தி கட்டடயப் பாடமா ?" என்ற தலைப்பில் ஆங்கில நூல் வெளியிட்டிருந்தார். அதனையும் தமிழில் மொழி பெயர்த்து 15 ஆயிரம் படிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுதும் அனுப்பி வைத்தவர் ஈழத்து அடிகள்.

ஈழத்து அடிகளின் பணிகளைக்  கண்டு அவருடன் சென்னை அருணகிரி அடிகளும், சண்முகானந்த அடிகளும் இணைந்து கொண்டனர். 

ராஜாஜி மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் (பிரதமர்) ஆனார். 60 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்று அறிவித்தார். 

"இந்தி எதிர்ப்பின் இறுதிப்போர்" எனும் தலைப்பில் ஒரு நீண்ட விரிவான அறிக்கையை எழுதி, அதில் இந்தி கட்டாய அறிவிப்பை எதிர்த்துத் தொடர் மறியல் போராட்டம் நடத்தபோவதாகவும் அது  1/6/1938 அன்று சென்னையில் தொடங்கும் என்றும் 25/5/38 க்குள் தமிழ்நாடு எங்கும் இருந்து பங்கேற்பாளர்கள் வர வேண்டும் என்றும் கோரி இருந்தார் ஈழத்து அடிகள். 

இந்த அறிக்கையை ஈரோட்டில் இருந்த பெரியார் இராமசாமியிடம் காட்டி இதனை "விடுதலை" "குடிஅரசு" இதழ்களில் வெளியிட்டு உதவுமாறு ஈழத்து அடிகள் கேட்டுக்கொண்டார். 

"இது காங்கிரசார் கையாளும் சண்டித்தனம். சத்தியாகிரகம், மறியல் என்பதெல்லாம் வெற்றுக் கேலிக்கூத்து" என்று கூறி அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார் பெரியார் இரமசாமி.

பிறகு ஈரோட்டில் இருந்த ஈழத்து அடிகளின் நண்பர் சண்முக வேலாயுதம் அவர்களின் உதவியுடன் இரத்தினா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

பிறகு சென்னை சென்று ஈழத்து அடிகள் சி.டி.நாயகம் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தவுடன் அவருக்கு சொந்தமான முதலமைச்சர் இல்லத்துக்கு அருகில் இருந்த ஓர் இடத்தில "இந்தி எதிர்ப்பு நிலையத்தை" நிறுவினார் ஈழத்து அடிகள். 

ஈழத்து அடிகளின் அழைப்பை ஏற்று 25/5/38 ல் இருந்து விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த செலவில் 120 பேர் வந்து சேர்ந்தனர். இப்படி வந்தவர்கள்தான் தாளமுத்து, நடராசன் ஆகியோர். 

திட்டமிட்டபடி போராட்டம் 1/6/38 அன்று தொடங்கியது.

மறியல் தொடங்கி மூன்றாம் நாள் 60 பேர் வரை சிறை சென்றுவிட்ட நிலையில் அங்கே வந்த பெரியார் இராமசாமி, "இப்படி மறியல் செய்வது காங்கிரசார் செய்யும் பயன் தராத முறையாகும். சண்டித்தனமாகும். இதில்  நீங்கள் ஈடுபட வேண்டியது இல்லை" என்று கூறி வந்தவர்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல தாம் பணம் தருவதாகக் கூறினார். அந்த பணத்தை மறுக்கப்பட்டது.

பிறகு சி.டி.நாயகம் நிலையை விளக்கி சொல்ல அதன்பிறகு தம்மையும் இணைத்துக்கொண்டார் பெரியார் இராமசாமி. 

இதுகுறித்து குறிப்பிட்டுள்ள ஈழத்து அடிகள் "பெரியார் இராமசாமி அவர்களிடம் செய்தித் தாட்கள் இருப்பதால் இந்தி எதிர்ப்பை நாடறிய செய்ய நல்ல வாய்ப்பு என்று மகிழ்ச்சி அடைந்தோம்" என்று கூறியுள்ளார். 

இந்தப்போராட்டத்தில்தான் அன்றாடம் இரண்டு முதல் பத்து பேர் வரை மறியல் செய்து சிறை செல்லும் முறையில் தாளமுத்து, நடராசன், ஈழத்து அடிகள், சண்முகானந்த அடிகள்  உள்ளிட்டோர் சிறை சென்றனர்.

இவர்கள் சிறை சென்றபின் எதிர்ப்பு நிலையத்தை தமது வசம் எடுத்துக்கொண்டார் ஈ.வெ.ராமசாமி என்பதுதான் வரலாறு என்று அறிவித்தவர் ஈழத்து அடிகள்.

நாவலர் சோமசுந்தர பாரதியார்  தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மறைமலை அடிகள் மகள் நிலம்பரி அம்மையார் அழைத்து பெரியார் கலந்துகொண்டார். அங்கு ஈவேராக்கு பெரியார் பட்டம் நிலம்பரி அம்மையார் வழங்கினார். நாவலர் பாரதி
தெற்கே மதுரையிலிருந்து புறப்பட்டு நடை பயணமாக இந்தி எதிர்ப்பு பிரச்சாரமாக சென்னை வரை வந்து இந்த கடற்கரையை மாநாட்டில் தலைமை ஏற்று நடத்தினார். இதில் முதன முதலாக பெரியார் கலந்துகொண்டார்,

"இந்த நிலையில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை வீரியமடைந்ததை அடுத்து  காங்கிரஸ் அமைச்சர்கள் 1939 ம் ஆண்டு பதவியில் இருந்து விலகுகிறார்கள்.

அவரிடம், "கட்டாய இந்தி நீங்கும் முன்னர், ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஏன் நிறுத்தவேண்டும் என்று கேட்டதற்கு பெரியார் இராமசாமி என்ன சொன்னார் தெரியுமா ?!

"நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, காங்கிரசு மந்திரிகளுக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் அதுபோல் பயன்படுத்திக் கொண்டேனேயொழிய, உண்மையிலேயே எனக்கு இந்தி கட்டாயமாக்கப்படுவதைப் பற்றியோ அதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது பற்றியோ கவலையில்லை" என்று கூறினார்.

உடனே நான் ஒரு அறிக்கையை வெளியிட்டு "ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களுக்கு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை நிறுத்தும் உரிமை கிடையாதென்றும், காங்கிரஸ் அமைச்சர்கள் இடைக்கால ஏற்பாடாக பதவியிலிருந்து விலகினாலும், அவர்களால் புகுத்தப்பட்ட கட்டாய இந்தி நீக்கப்படவில்லை. ஆதலால், இந்தி எதிர்ப்பு மறியல் தொடர்ந்து கவர்னர் மாளிகை முன் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். அந்த அறிக்கை தி ஹிந்து, மெயில் இதழ்களில் 4/11/1939 ல் வெளியானது. 

இந்த அறிக்கையைக் கண்ணுற்ற கவர்னர் அவர்கள் செட்டி நாட்டரசர் உயர்திரு முத்தையா அவர்களை அழைத்து, 

"என்னுடைய மாளிகை முன் இந்தி எதிர்ப்பு மறியல் நடத்த இருப்பதாக ஒரு அறிக்கை வந்திருக்கிறது. இதனை தாங்கள் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். நான் தில்லிக்குச் சென்று கட்டாய இந்தி நீக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்."

என்று கூறவே, செட்டி நாட்டரசர் என்னையும், சண்முகானந்த அடிகளையும் அடையாற்றில் உள்ள  தம்முடைய மாளிகைக்கு அழைத்து கவர்னர் அளித்துள்ள உறுதி மொழியைக் கூறினார்கள். 

கவர்னர் மாளிகை முன் மறியல் செய்யப்போவதாக பெண்கள் சார்பில் அறிவித்திருந்த டாக்டர். தருமாம்பாள் அவர்களிடம் இதுபற்றி கலந்து பேசினோம். 

"சரி, நிலைமை இதுவானால் சிறிது நாட்களுக்கு மறியலை நிறுத்தித்தான் பார்ப்போமே" என்று கூறினார்கள். 

இதன்படியே மறியல் நிறுத்தப்பட்டது. 

மறியல் நின்ற சில நாட்களுக்கெல்லாம் கவர்னர் அவர்களின் தலையீட்டால்,

"கட்டாய இந்தி நீக்கப்பட்டு விரும்புபவர்கள் மட்டும் படிக்கலாம்" 

என்று தில்லி அரசரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

எனவே, "பெரியார் இராமசாமி அவர்களுக்கும் இந்தி எதிர்ப்புக்கும் எந்தவிதமான நேரடித்  தொடர்பும் இல்லை" என்பதைப் புரிந்துகொள்ள முடியமென்று நம்புகிறேன்.

-ஈழத்து அடிகள் சிவானந்த அடிகள் 25/1/25 (ஆதாரம் இந்தி எதிர்ப்பு அன்றும் - இன்றும் : ஈழத்து சிவானந்தம் அடிகள் நூல்)

இதற்கு பழி தீர்க்கும் விதமாக சாமி சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" எனும் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாற்று நூலில் இந்தி எதிர்ப்பு எனும் பகுதியில் ஈழத்து அடிகளின் பெயரை பத்தோடு பதினொன்றாகக் குறிப்பிட்டு ஈழத்து அடிகளின் பணிகள் அத்தனையும் இருட்டடிப்பு செய்தார் பெரியார் இராமசாமி.

இதனால்தான் "இந்தி எதிர்ப்பு அன்றும் - இன்றும்" எனும் தனி நூலை 1965 ம் ஆண்டு எழுதி வெளியிட்டார் ஈழத்து அடிகள்.

நாவலர் சோமுசுந்தர பாரதி,1937-ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் தொடங்கினார்.

1937 செப்டம்பர் 5-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25-ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்குத் வெளிப்படை மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar) ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.
1948-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கும் மடல் எழுதினார்.


No comments:

Post a Comment

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்*

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்* ———————————— இலங்கைக்கு அரசுப் பயணமாகவும் சென்ற பிரதமர் மோடி அவர்கள் அங்கு  பல தரப்பினரையும் சந்தித்துள்ளார். க...