மத்திய பாஜக அமைச்சரவையில் நிர்மலா சீதாராம் அவர்கள் நிதித்துறை அமைச்சராக இருக்கலாம்! அவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்!
எனது 52 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் திறமையான மத்திய நிதி அமைச்சர்களாக இருந்தவர்கள் என ஆர். கே. சண்முகம் செட்டி, ஜான் மத்தாய், சி. டி. தேஷ்முக், டி. டி. கிருஷ்ணமாச்சாரி, நேரு, மொரார்ஜி தேசாய், இந்திராகாந்தி, ஒய். பி. சவாண், சி. சுப்பிரமணியம், ஆர் . வெங்கட்டராமன், எச் எம் படேல்,மன்மோகன் சிங் போன்ற சிலரை குறிப்பிட்டுச் சொல்வேன். அந்த வரிசையில் திருமதி நிர்மலா சீதாராம் அவர்களை வைத்துப் பார்க்கிறேன். முன்றுமுறை அமைச்சர் பதவியேற்று இருக்கிறார். இதுவரை லஞ்ச லாவண்யக் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மீது இல்லை! அந்த வகையில் அவர் ஒரு எளிமையான மனுஷி! அவர் பிஜேபியில் இருக்கிறார் என்றோ ஒரு பிராமண பெண் என்கிற வகையிலோ அவரைக் கிண்டலோ கேலியோ செய்பவர்களைப் பரிதாமாகப் பார்க்கிறேன்!. நான் 1970களில் படித்த ஜேஎன்யு Jnu - New Delhi இல் அவர் 1982 இல் படித்தவர் . தனக்குக் கிடைத்த வெளிநாட்டு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தனக்கான அரசியல் பாதையில் இன்று பிஜேபியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அத்தோடு தான் சார்ந்த கட்சிக்கு அப்பால் மத்திய நிதியமைச்சர் பணியில் நேர்மையானவராகவும் கொடுத்த பணியை செம்மையாகச் செய்பவராகவும் இருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய அரசியல்ப் பார்வை உடையவர்! எளிமையான காட்சி
மனுஷி
பொருளாதார அறிவிப்புலத்தில் அவர் ஒரு முக்கியமான அறிவு ஜீவி! யாரைக்கிண்டல் செய்கிறோம் என்று அறிந்து செய்ய வேண்டும்!
அப்பழுக்கற்ற எளிமையான தோற்றத்துடன் எந்தப் பகட்டுமின்றி இருக்கிறார்!
இதற்கு முன்னால் நிதி அமைச்சராக இருந்த
ப சிதம்பரம் மீது பல்வேறு ஊழல்களும் வழக்குகளும் இருந்தன! அவர் வெளியிட்ட பட்ஜெட்டில் ஏகப்பட்ட கோளாறுகளும் இருந்தன!
நிர்மலா சீதாராமன் அவர்களை கேலி செய்பவர்கள் ஏன்
ப சிதம்பரத்தைப் பற்றி கிண்டல் செய்யலாமே! செய்ய மாட்டார்கள்!
ஒருவரின் திறமையையும் நிர்வாகத்தையும் பார்க்காமல் அவரது பிறந்த வகுப்பைப் பார்த்து கேலி செய்ய முற்படும் அறிவொளிகளைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது!
இதெல்லாம் தகுதி உடையவர்களுடைய செயலாகாது.
இப்படி யார் எது என்ன என்று பார்க்காமல் வீண் கிண்டல் செய்பவர்களுக்கு இங்கு மரியாதையும் பணமும் கிடைக்கும் போல இருக்கிறது.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க!
அவ்வளவுதான் வேற என்ன சொல்ல முடியும்!
No comments:
Post a Comment